சற்குணம் ஆட்டம் ஆரம்பம் – அதிரடி காட்டும் ‘நாயகி’ நெடுந்தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் விகடனின் “நாயகி” நெடுந்தொடருக்கு தமிழ் மக்களிடையே…
Category: Tv News
“STIR FRY” (Every Monday at 12:00pm) PEPPERS TV
“STIR FRY” (Every Monday at 12:00pm) PEPPERS TV is a young next generation Tamil channel with innovative programming…
ஸ்டிர் பிரை
ஸ்டிர் பிரை பிரபலமான நட்சத்திர ஹோட்டல்களில் சைவம், அசைவம் என விதம் விதமான உணவு வகைகளை ருசித்து சாப்பிட்டிருப்போம்.. ஆனால் அவர்களின் சமையற்கூடம்…
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:00 மணிக்கு ஒளிபரப்பாகும் மக்களின் பேராதரவு பெற்ற ‘சத்யா’ நெடுந்தொடர்
‘சத்யா’ நெடுந்தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:00 மணிக்கு ஒளிபரப்பாகும் மக்களின் பேராதரவு பெற்ற ‘சத்யா’…
‘சினிமேக்ஸ்’ நிகழ்ச்சியில் “கமலியிடம் கேளுங்கள்”
‘சினிமேக்ஸ்’ நிகழ்ச்சியில் “கமலியிடம் கேளுங்கள்” காதல் கடிதங்களால் எழுப்பப்பட்ட காதல் கோட்டை திரைப்படம் வெளியாகி 25 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், அதனை…
டான்ஸ் VS டான்ஸ் சீசன் 2 புதிய ப்ரோமோ கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பாருங்கள்
டான்ஸ் VS டான்ஸ் சீசன் 2 புதிய ப்ரோமோ கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பாருங்கள் சென்னை, ஜூலை 22,2021:தமிழகத்தின் இளம் பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த டான்ஸ் VS டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சி புதுப்பொலிவுடன் மீண்டும் ஒளிபரப்பாக உள்ளது. அதன் முன்னோட்டமாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பங்கேற்பாளர்களின் களிப்பூட்டும் நிகழ்ச்சிகளுடன் புதிய ப்ரோமோவை இந்த தொலைக்காட்சி வெளியிட்டது. கடந்த சில வாரங்களாக, இந்த நிகழ்ச்சி தொடர்பாக ஒரு அமைதியான எதிர்பார்ப்பு உருவாகி வந்தது. இந்த நிலையில் புதுப்பிக்கப்பட்ட அந்த நிகழ்ச்சியைப் பற்றி தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல கலாச்சார அடையாளங்களை பின்னணியாகக் கொண்டு படமாக்கப்பட்டுள்ள இந்த ப்ரோமோ, பல்வேறு விதமான நடன வடிவங்களைக் காட்டுகிறது, அவை ஒவ்வொன்றும் மற்றொன்றை காட்டிலும் உற்சாகமிக்க உணர்வை தூண்டுகின்றன. இந்த புரமோவில் பாரம்பரியமிக்க பாரதநாட்டியம் முதல் ப்ரீ ஸ்டைல் ஏரோபிக்ஸ் வரை, ஒரு சில நடன வடிவங்களின் நுணுக்கங்கள் சிறப்பாக படம்பிடிக்கப்பட்டுள்ளது. இது முதல் சீசனுக்கு பொருத்தமான காணிக்கை செலுத்தும் விதத்தில் உள்ளது. இந்த புதிய ப்ரோமோ கேளிக்கை நிறைந்த, சுறுசுறுப்பான ராப் இசையின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. இதை பார்க்கும் ஒவ்வொரும் தங்கள் கால்களை தரையில் தட்டாமல் இருக்கமாட்டார்கள். டான்ஸ் வெசர்ஸ் டான்ஸ் நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் பிரபலமான நிகழ்ச்சியாகும். இது மிகவும் பிரபலமான டான்ஸ் ரியாலிட்டி ஷோ ஆகும். முதல் சீசனில் புகழ்பெற்ற நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் இந்த நிகழ்ச்சிக்கான நடுவராக இருந்தார். மேலும் கோலிவுட்டின் பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இதேபோல் இரண்டாவது சீசனிலும் மக்களிடையே பிரபலமான ஒருவர் நடுவராக வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்த இருக்கிறார். புரமோவை கீழ்க்கண்ட லிங்க்கில் பார்க்கவும், https://fb.watch/v/6osePrYr2/ https://www.instagram.com/p/CRlJfu4JlW0/?utm_medium=copy_link
முக்கிய திருப்பங்கள் – விறுவிறுப்பாக நகரும் “தெய்வமகள்”
முக்கிய திருப்பங்கள் – விறுவிறுப்பாக நகரும் “தெய்வமகள்” கலைஞர் தொலைக்காட்சியில் ஒருமணிநேரம் ஒளிபரப்பாகி வரும் “தெய்வமகள்” நெடுந்தொடருக்கு குடும்பங்களிடையே ஏகோபத்திய வரவேற்பு கிடைத்து வருகிறது.…
பெப்பர்ஸ் டிவியில் ஒவ்வொரு புதன்கிழமை நண்பகல் 12:00 மணியளவில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ‘தட்டுக்கடை’.
“தட்டுக் கடை” பெப்பர்ஸ் டிவியில் ஒவ்வொரு புதன்கிழமை நண்பகல் 12:00 மணியளவில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ‘தட்டுக்கடை’.. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் விஜே ஸ்ரீ . இந்த…
“அபி டெய்லர்” என்ற புதிய நெடுந்தொடர் ஒளிபரப்பு ஆரம்பம்! மீண்டெழும் திறனை வெளிப்படுத்தும் புதிய கதைக்களத்தோடு தனது பிரைம் டைம் நிகழ்ச்சிகளின் தொகுப்பை வலுவாக்கும் கலர்ஸ் தமிழ்!
“அபி டெய்லர்” என்ற புதிய நெடுந்தொடர் ஒளிபரப்பு ஆரம்பம்!மீண்டெழும் திறனை வெளிப்படுத்தும் புதிய கதைக்களத்தோடு தனது பிரைம் டைம் நிகழ்ச்சிகளின் தொகுப்பை வலுவாக்கும்…
சண்டே சினி காம்போ நிகழ்வின் ஒரு அங்கமாக வரும் ஞாயிறன்று நகைச்சுவை விருந்தைப் படைக்கவிருக்கும் கலர்ஸ் தமிழ்
சண்டே சினி காம்போ நிகழ்வின் ஒரு அங்கமாக வரும் ஞாயிறன்று நகைச்சுவை விருந்தைப் படைக்கவிருக்கும் கலர்ஸ் தமிழ் ~ஜுலை 18 ஞாயிறன்று, பிற்பகல் 1:00 மணிக்கு சூப்பர் டூப்பர் மற்றும் 3:30 மணிக்கு நட்புனா என்னன்னு தெரியுமா ஆகிய இரு திரைப்படங்களின் உலகளாவிய தொலைக்காட்சி ப்ரீமியரை அறிவிக்கிறது சென்னை, 17 ஜுலை 2021: கொரோனா தொற்றின் அச்சம் இன்னும் முழுமையாக மனங்களிலிருந்து விலகாத நிலையில், அதிலிருந்து விடுபடச்செய்து, உற்சாகப்படுத்துவதற்காக தமிழ்நாட்டின் வளர்ந்து வரும் பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ், உலகளவில் தொலைக்காட்சியில் முதன்முறையாக சூப்பர் டூப்பர் மற்றும் நட்புனா என்னன்னு தெரியுமா ஆகிய இரு நகைச்சுவை திரைப்படங்களை ஒளிபரப்பவிருக்கிறது. நகைச்சுவை, டிராமா மற்றும் கிளுகிளுப்பின் சிறப்பான கலவையாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த இரு திரைப்படங்களும் சண்டே சினி காம்போ நிகழ்வின் ஒரு பகுதியாக இந்த ஞாயிறன்று பார்வையாளர்களை மகிழ்ச்சிக்கடலில் மூழ்கடிப்பது நிச்சயம். சிறப்பான கதைக்களத்தோடு நகைச்சுவையையும் சேர்த்து வழங்கும் இத்திரைக்கதைகளை கண்டு மகிழ, வரும் ஜுலை 18 ஞாயிறன்று பிற்பகல் 1:00 மணி மற்றும் 3:30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை பாருங்கள். 2019 ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர் டூப்பர், ஒரு நகைச்சுவை த்ரில்லர் திரைப்படமாகும். அருண் கார்த்திக் இயக்கத்தில் உருவான திரைப்படத்தில் துருவா, இந்துஜா மற்றும் ஷா ரா ஆகிய திறமையான நடிகர்கள் நடித்திருக்கின்றனர். சிறு குற்றங்களில் ஈடுபடும் இரு நபர்கள், தவறான ஒரு பெண்ணை கடத்தியதற்குப் பிறகு சிக்கலான சூழலில் மாட்டிக்கொள்வதை சுற்றி கதை நகர்கிறது. போதைப்பொருள் கடத்தும் ஒரு மாஃபியா கும்பலின் தலைவனை எதிர்கொண்டு சமாளிக்கும் சூழ்நிலையில் அவர்கள் தள்ளப்படுகின்றனர். அதற்குப் பின் அவர்களது வாழ்க்கையில் என்னவெல்லாம் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்று திரைப்படத்தின் எஞ்சிய பகுதி சித்தரிக்கிறது.…