கலைஞர் தொலைக்காட்சியில் “அன்பிற்கினியாள்”கலைஞர் தொலைக்காட்சியின் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள்

Share the post

கலைஞர் தொலைக்காட்சியில் “அன்பிற்கினியாள்”கலைஞர் தொலைக்காட்சியின் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள்

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி நமது கலைஞர் தொலைக்காட்சியில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் புத்தம் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாக இருக்கின்றன.

காலை 8:00 மணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முதல்வராக பொறுப்பேற்று 100 நாட்கள் கடந்திருக்கும் நிலையில், 100 நாட்களில் அவரது ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகள் குறித்து விளக்கும் ஒரு மணி நேர சிறப்பு நிகழ்ச்சியாக “நூற்றுக்கு நூறு” என்கிற நிகழ்ச்சி இடம்பெறுகிறது.

அதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு பிரபல திரை நட்சத்திரம் தீபா ஷங்கர் பங்குபெறும் “நம்ம வீட்டு நட்சத்திரம்” சிறப்பு நிகழ்ச்சியும், காலை 10 மணிக்கு திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில், குடும்பம் உடையாமல் என்றும் காப்பது ஆண்களா.? பெண்களா.? என்கிற தலைப்பில் கலகலப்பான சிந்திக்க வைக்கும் “சிறப்பு பட்டிமன்றமும்”காலை 11 மணிக்கு இமான் அண்ணாச்சி தொகுத்து வழங்க, சுட்டிக் குழந்தைகள் பங்குபெற்று அசத்தும் “செல்லக் குட்டீஸ்” சிறப்பு நிகழ்ச்சியும் ஒளிபரப்பாக இருக்கிறது.

பின்னர் மதியம் 12:00 மணிக்கு நடிகர் ஆர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற “சார்பட்டா பரம்பரை” படக்குழுவினரும், வடசென்னை பிரபலங்களும் பங்குபெறும் “சார்பட்டா கூட்டம்” சிறப்பு நிகழ்ச்சியும் ஒளிபரப்பாக இருக்கிறது.

அதனைத் தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு இயக்குனர் கோகுல் இயக்கத்தில் நடிகர் அருண் பாண்டியனும், அவரது மகள் கீர்த்தி பாண்டியனும் இணைந்து நடித்து, திரைக்கு வந்த சில மாதங்களே ஆன “அன்பிற்கினியாள்” என்கிற புத்தம் புதிய த்ரில்லர் திரைப்படமும் ஒளிபரப்பாக இருக்கிறது. மாலை 6.30 மணிக்கு ரஜினிகாந்த் – ஷ்ரேயா நடிப்பில் “சிவாஜி” திரைப்படமும், இரவு 9.30 மணிக்கு வெற்றி நடிப்பில் மாறுபட்ட கதைக்களம் கொண்ட “ஜீவி” திரைப்படமும் ஒளிபரப்பாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *