ராம் அன்ட் லீலா’ திரைப்பட விமர்சனம்!

Share the post

ராம் அன்ட் லீலா’ திரைப்பட விமர்சனம்

” ராம் & லீலா ” என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் :- உரிய பருவத்தில் பயிர் செய் ! உரிய பருவத்தில் திருமணம் செய் ! முன்னோர்கள் சொன்ன பொன் மொழி ! இன்றைய சூழ்நிலையில் இவை எந்த அளவிற்கு பொருந்தும் என்பது கேள்விக் குறிதான் !

திருமண வயதைக் கடந்து பெண் தேடும் படலத்தில் தொடர்ந்து அதில் வெற்றிக் காண முடியாமல் திண்டாடும் கதாநாயகன் ரியோ.

கதாநாயகி வர்டிகா ரியோவை காதலிக்கிறார். ரியோவை காதலிக்கும் வர்டிகா ஒரு நிபந்தனையை விதிக்கின்றார். வர்டிகா நிபந்தனைபடி நடந்து கொள்ள ரியோ ஒப்புக் கொள்கிறார்.

” தான் மாலை 6.00 மணிக்கு மேல் வீட்டை விட்டு வரமாட்டேன் ” என்கிறார் வர்டிகா.

வர்டிகா கோரும் நிபந்தனையை ரியோ ஏற்று அவரின் காதலை ஏற்று காதலிக்கிறார்.நாட்கள் மெல்ல நகர்கிறது. இவர்களின் காதல் வளர் பிறையாக வளர்கிறது. நிபந்தனை யில் சிக்கல் ஏற்படுகிறது. மாலை 6.00 மணிக்கு மேல் வர முடியாத சூழ்நிலை யாது ? அதனின் பரம இரகசியம் என்ன ? தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார் ரியோ .

கதாநாயகி வர்டிகாவின் மாலை 6.00 மணியின் இரகசியம் என்ன ? ஒருவேளை மாலைக் கண்ணாக இருக்குமோ ? ரியோவிற்கு மட்டுமல்ல இந்த சந்தேகம் பார்வையாளருக்கும் ஏற்படுகிறது.

ஏதோ ஒரு பிரச்சினை கதாநாயகி வர்டிகாவிற்கு. அது என்ன பிரச்சினை ? அதைப் பற்றி தெரிந்து கொண்ட கதாநாயகன் ரியோ . வர்டிகாவை காதலிக்கின்றாரா ? அவர்களுக்கு திருமணம் நடந்ததா ? என்பதை நகைச்சுவை உணர்வோடு சொல்ல வருவதே ” ராம் & லீலா.

திருமணத்திற்கு எங்கும் இளைஞர் ராம் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் ரியோ. இவர் நகைச்சுவை கலந்த நடிப்பால் புதுவிதமாக காட்ட முயற்சி செய்திருக்கிறார். உலகம் தெரியாத இளைஞன் என்று சொல்வதை விட பெண்களைப் பற்றித் தெரியாத அப்பாவியாக வருகின்றார். தன்னுடைய உடல் மொழியால் பார்வையாளரை சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார். பெரும்பாலான சில்மிஷங்கள். முன்னால் நடிகர் ஒருவரை நினைவுப் படுத்துகிறது. இன்னொருவரை தன் நடிப்பில் நினைவு படுத்த வேண்டாமே !
கதாநாயகன் திருமணத்திற்காக ஏங்குவது ! காதலுக்காக வழிவது , எதிர் பாராத பிரச்சினையை எதிர் கொள்வது. இவை எல்லாம் படத்திற்கு பலம் சேர்க்கின்றன. திரைக்கதைக்கு வலு சேர்த்திருப்பது படத்திற்கு இன்னொரு வெற்றி.

கதாநாயகி வர்டிகா அறிமுக நாயகி . இவர் கண்ணை கவர்கின்றார். அழகில் பார்வையாளர்களை தன் பக்கம் இழுக்கிறார்.

கதாநாயகியின் பாத்திரத்திற்கு வலு இருந்தாலும் அதனை உணர்ந்து கதாநாயகி நடிக்கவில்லையா ? அல்லது நடிக்க வாய்ப்பு கொடுக்கவில்லையா ? பொம்மையாக சித்தரித்திருக்கும் கதாநாயகியை கொஞ்சம் நடிக்க வைத்திருக்கலாமே !

கதாபாத்திரங்களுக்கு உயிர் ஊட்டுபவர்கள் நடிகர் நடிகைகளே! இவர்களை நடிக்க வைப்பது இயக்குநரின் முக்கிய பணி. இதனை இயக்குநர் கோட்டை விட்டு விட்டார்.

துணை நட்சத்திரங்கள் :-
கதைக்கு நாயகன் நாயகி வலு சேர்த்தாலும் துணை கதா பாத்திரங்கள் தான் படத்தை தூக்கி நிறுத்துகின்றன. அந்த வகையில் துணை நடிகர்களாக இப் படத்தில் வலம் வந்தவர்கள் சேத்தன். இவர் கதாநாயகனுக்கு தந்தையாக நடித்து சிறப்பித்திருக்கின்றார்.

மாளவிகா அவினாஷ் கதாநாயகனின். தாயாக நடித்திருக்கிறார். கதாநாயகனின் தங்கையாக நடித்திருப்பவர் தாஃபியா

கதாநாயகனின் மாமாவாக முனீஷ்காந்த் , கதாநாயகனின் நண்பனாக பாலாஜி தியாகராஜன் தயாளன்.

கதைக்கு பொருத்தமான கதாபாத்திரங்களில் இவர்கள் நடித்திருப்பது கதைக்கு மேலும் வலு சேரத்துள்ளன என்பதனை யாரும் மறுக்க முடியாது.

தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
இசையமைப்பாளர் :- அன்கிட் மேனன்.
பாடல்கள் மாண்டேஜாக இருப்பினும் கேட்பதற்கு இனியாக இருக்கின்றன. பின்னணி இசை மெலோடி பாணியில் இருக்கிறது. மனதை கவர்கிறது.

படத்தொகுப்பாளர் :- ஒய்.என்.சி. சிவா
முதல் பாதி வேகம் சற்று குறைவு மறு பாதி படுவேகம் நகைச்சுவை காட்சிகளை இலாவகமாக தொகுத்து இருக்கின்றார்.

திரைக்கதை :-
யூகங்களை கடந்த நாயகியின் பிரச்சினை படத்தை சுவாரஸ்யமான முறையில் நகர்த்துவது திரைக்கதைக்கு ஒரு பிளஸ் பாயிண்ட். கதையை விவரிக்க திரைக்கதை துணை புரிந்திருப்பது மிக அருமை

இயக்குநர் :- ராமச்சந்திரன் கண்ணன்
இவர் எழுதி இயக்கிய இந்தத் திரைப்படம். மேலை நாட்டின் கதைக் கருவின் சாயல் தெரிகிறது. சொந்தமாக முயற்சி செய்யலாமே !

பிரச்சினை குறித்து தெரிந்த பின்பு காதலர்கள் சேர்வதில் சிக்கல். அதனையும் தாண்டி காதலின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் , கல்யாணத்தை கலாட்டா கல்யாணமாக மாற்றுவது நகைச்சுவை என்னும் மாமருந்து. சிரிக்க வைக்கின்றார் இயக்குநர். பாராட்டலாமே !

திரை விமர்சனத்தில் ” ராம் & லீலா பார்க்க வேண்டிய படம். அருமையாக திரைக்கதை அமைத்து அமர்க்களமாக இயக்கி இருப்பவர் ராமச்சந்திரன் கண்ணன் . பாராட்ட வேண்டிய படம். நகைச்சுவை உணர்வோடு கதை சொல்லப்படுகின்றது. எங்கள் பத்திரிகை குழு நடுநிலையோடு நின்று தகுந்த தீர்ப்பை வழங்கியுள்ளது மீண்டும் அடுத்த திரை விமர்சனத்தில் பார்ப்போம் என்றும் நட்புடன் கவிஞர் மாத்தூர் அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட் ;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *