மாணவர்களை மீட்டெடுத்து நல்வழி படுத்தும் ஒரு ஆசிரியையின் கதையே “ஒரு நாள்”.!

Share the post

ஒரு நாள்

(மாணவர்களை நல்வழிப்படுத்தும் ஒரு ஆசிரியையின் கதை)

சமூகத்திற்கு புறம்பாக தவறான வழியில் போதைப் பொருள் கடத்தி புழக்கத்தில் விடுகிறது ஒரு கும்பல். போதைப் பொருளை உட்கொண்ட இளைஞர்கள் போதைக்கு அடிமை ஆகிறார்கள். இதில் மாணவர்களும் விதிவிலக்கல்ல. இந்த போதைக்கு அடிமையான மாணவர்களை மீட்டெடுத்து நல்வழி படுத்தும் ஒரு ஆசிரியையின் கதையே “ஒரு நாள்”.

ஸ்ரீ மாந்துருத்தி மாடன் தம்புரான் பிலிம்ஸ் சார்பில் கதை எழுதி தயாரித்து இருக்கிறார் வி.ஆர் விஜயலட்சுமி. தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் இணை இயக்குனராக அனுபவும் புரிந்த விஜயவாசன் இப்படத்தை இயக்கியுள்ளார்

கதையின் நாயகியாக ஷாலு நடிக்க சூரியநாராயணன், உமர், கலா,முத்துலட்சுமி, சூரிய சுப்பிரமணியன் ஆகியோர் கதையின் பாத்திரங்களாக நடித்துள்ளனர்

ஒளிப்பதிவு-குமார்
இசை-ஆதிஷ்

கதை தயாரிப்பு –
வி.ஆர் விஜயலட்சுமி

திரைக்கதை வசனம்
இயக்கம்- விஜயவாசன்

இதன் படப்பிடிப்பு குருவாயூர், சாவக்காடு, வையம்பட்டி,பெரம்பலூர் ஆகிய இடங்களில் 30 நாட்களாக ஒரேக்கட்டப்படப் பிடிப்பாக நடைபெற்று முடிவடைந்தது

படத்தின் ஒரே பாடலான
வாடக்காத்து வாடக்காத்து வந்து தாக்குது மனசுக்குள்ள வயசுக்குள்ள போத ஏத்துது….
என்ற குத்தாட்ட பாடல் இடம் பெற்றுள்ளது

சென்சார் செய்யப்பட்ட இப்படம்
யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது

விரைவில் திரையரங்குகளில் வெளிவர உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *