
மௌன மொழிகள் ” என்னும் திரைப்படத்தின் திரைவிமர்சனம் :-
்்்்்்்்்்்்்்்்்்்
கதைக் கரு :-
்்்்்்்்்்்்்
காதல் என்பது புற அழகைத் தாண்டி மானசீகமாக நேசிப்பது .நேசிக்கும் இந்தக் காதல் சந்தர்ப்ப சூழ்நிலையில் தடம் புரள்கிறது . இணைகிறதா ? இல்லையா ? இதனை உணர்த்துவதே இந்தக் கதையின் கதைக் கரு.
கதையும் கதையின் போக்கும் :-
்்்்்்்்்்்்்்்்்்்்
கதிர் இக் கதையின் நாயகன். இவன் விளம் பர நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றான். இவன் இந்தத் தொழிலைத் தாண்டி சமூக சேவையும் செய்து வருகிறான். அதிலும் குறிப்பாக இரத்த தானம் செய்வது முதலிடம் பிடிக்கிறது.
வாலிப வயதில் வரும் ஆசை தான் இவனுக்கும் வருகிறது. தனக்கு வர இருக்கும் மனைவி அழகாக இருக்க வேண்டும் . தன்னை நேசிப்பவளாக இருக்க வேண்டும். நியாயமான ஆசை தான்.
அவனின் கனவு இன்று நினைவாகும் விதமாக இவன் பார்வையில் சிக்குகிறாள் பவித்ரா. அழகியத் தோற்றம், இளைய பருவம். பருவப் பெண். அவளை அணுகிறான் கதிர். தன்னுடைய நிறுவனத்திற்காக சோப்பு விளம்பரத்திற்கு நடிக்க வருகிறாயா ? எனக் கேட்கிறான். அவள் மறுக்கிறாள், கோபப்படுகிறாள். இப்படி இவர்களுக்குள் மோதல் ஏற்படுகிறது.
மோதலில் தொடங்கி காதலில் முடியும். சிலரது காதல் அதையும் தாண்டி திருமணத்தில் முடியும். இது எல்லோருக்கும் நடக்குமா ? இல்லை என்றே சொல்வேன். நூற்றில் ஒன்று நடக்கும். மீதி எல்லாம் இரயில் சினேகம் மாதிரி தான்.
“மிஸ் சென்னை ” போட்டியில் கலந்து கொள்கிறாள் பவித்ரா. இவளை கதிர் காதலிக்கத் தொடங்குகிறான். இதற்கிடையில் அனிதா என்னும் இளம் பெண் ஒருதலையாக கதிரை காதலிக்கத் தொடங்குகிறாள். ஏற்கனவே கதிர் பவித்ராவைக் காதலிக்கிறான் என தெரிந்தும் அவனை நிழல் போல் தொடர்ந்து பல விதத்தில் தொல்லைக் கொடுக்கிறாள் அனிதா.
ஆரம்பத்தில் கதிரும் பவித்ராவும் எலியும் பூனையுமாக இருந்தவர்கள் நாளடைவில் மலரும் மணமும் போல காதலில் மூழ்க்கி கண்களால் பேசி ,மனத்தளவில் ஒன்றிப் போனார்கள். விதி இவர்களைத் துரத்துகிறது. ஆமாம் விபத்து ஒன்றில் பவித்ராவின் முகத்தில் பலமாக அடிப்படுகிறது. காதல் வானில் சிறகடித்து பறந்த இந்தக் காதல் பறவைகளில் ஒன்று புறத் தோற்றத்தில் காயம் ஏற்படுகிறது. அழகிய முகம் உருகுலைகிறது. அழகு பறிபோகிறது
கதிர் – பவித்ரா இவர்களின் மன நிலை மாற்றங்களைச் சுற்றிச் சுழல்கிறது மீதிக் கதை
காதல் வானில் சிறகடித்து பறந்த இந்தக் காதல் ஜோடிகள் வாழ்க்கையில் ஒன்றிணைந்தார்களா ? இல்லையா ? என்பது தான் இந்தப் படத்தின் கிளைமாக்ஸ்.
காதல் வானில் சிறகடித்து பறந்த இந்தக் காதல் ஜோடிகள் வாழ்க்கையில் ஒன்றிணைந்தார்களா ? இல்லையா ? என்பது தான் இந்தப் படத்தின் கிளைமாக்ஸ்.
திரை நட்சத்திரங்கள் :- ஷாகிர் மனோ :-
்்்்்்்்்்்்்்்்்்
கதிர் என்னும் கதாபாத்திரத்தை ஏற்று இந்தத் திரைப்படத்தின் மூலம் அறிமுக கதாநாயகனாக நடித்திருக்கிறார் ஷாகிர் மனோ .
காதல் காட்சியிலும் சரி , மோதல் காட்சியிலும் சரி தன்னுடைய உணர்வு பூர்வமான நடிப்பாலும் , உணர்ச்சிப் பூர்வமான நடிப்பாலும் இவருக்கு இது முதல் படமா ? எனக் கேட்கத் தோன்றாத வகையில் தன்னுடைய முதல் படத்திலேயே அசத்தியிருக்கிறார். இவரை நாமும் மனதாரப் பாராட்டுவோம்.
கதிர் பவித்ராவின் அழகில் மயங்கி உருகி உருகி காதலிப்பதும் , அழகு இல்லாத போதும் இந்தக் காதலில் இம்மியளவு குறையாமல் காதலை தொடர்வதும் இவரது இயல்பான நடிப்புக்கு ஒரு சலாம் !
கதிர் என்று குறிப்பிட்டது இவருடைய கதாபாத்திரத்தை. இவருடைய உண்மையான பெயர் ஷாகீர் மனோ. இவரைத் தான் சொன்னேன்
அர்ச்சனா சிங் :-
்்்்்்்்்்்்்்்்
பவித்ரா என்னும் கதாபாத்திரத்தை ஏற்று இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். இவர் இலட்சணமாக இருக்கிறார் . முக அழகு கொண்டவர். இரசிகர் மனத்தில் நிற்பவர்.இவருக்கும் ஷாகீர் மனோவுக்கும் இடையே ஏற்படும் மோதல் அதனால் விளையும் காதல் இரசிக்கும்படியாக உள்ளது.
அர்ச்சனா சிங் :-
்்்்்்்்்்்்்்்்
பவித்ரா என்னும் கதாபாத்திரத்தை ஏற்று இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். இவர் இலட்சணமாக இருக்கிறார் . முக அழகு கொண்டவர். இரசிகர் மனத்தில் நிற்பவர்.இவருக்கும் ஷாகீர் மனோவுக்கும் இடையே ஏற்படும் மோதல் அதனால் விளையும் காதல் இரசிக்கும்படியாக உள்ளது.
கதாநாயகியாக நடித்திருக்கும் அர்ச்சனா சிங் பவித்ரா என்ற கதாபாத்திரத்தை ஏற்று அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறார்.கதையின் முக்கியமான திருப்பத்திற்குப் பிறகு அவரது கதாப்பாத்திரம் உணர்ச்சிப் பூர்வமாக பரிமளிக்கிறது.முக அழகிலும் சரி , முக அழகு இல்லாத நிலையிலும் சரி மிகச் சரியாக உணர்வு பூர்வமாக நடித்திருக்கிறார். இவரை நாமும் பாராட்டுவோம் .
நகைச்சுவை நடிகர் அர்ஜூனன் :-
்்்்்்்் ்்.்்்்்்்
ஒன்பது சுவைகளுள் ஒன்று நகைச்சுவை. வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பது பழமொழி. காலந்தோறும் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகர்கள் தங்களுடைய நகைச்சுவையால் மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறார்கள். அந்த வரிசையில் இவரும் பார்வையாளர்களை தன் நடிப்பால் சிரிக்க வைத்திருக்கிறார்
பென்ஸ் பாலா என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர் .இந்தப் படத்தின் கதாநாயகன் ஷாகீர் மனோவின் நண்பனாக வருகிறார். நகைச்சுவை காட்சிகள் சிலவற்றில் இவர் தோன்றி நடித்தாலும் இவரின் நகைச்சுவை நம்மை சிரிக்க வைக்கிறது. சிந்திக்க வைக்கிறது. இவருடைய நகைச்சுவை படத்தை தூக்கிப் பிடித்து நிறுத்துகிறது.
துணை நட்சத்திரங்கள் :- ஸ்ரீமன் :-
்்்்்்்்்்்்்்்்்்்
இவர் ஸ்ரீ என்ற கதாபாத்திரத்தை ஏற்று இந்தப் படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்திருக்கிறார். இதில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து பார்வையாளர்கள் மனத்தில் இடம் பிடித்து இருக்கிறார்.
தலைவாசல் விஜய் :-
்்்்்்்்்்்்்்்்்்்்
இவர் இந்தப் படத்தில் ஷாகீர் மனோவின் தந்தையாக நடித்து இருக்கிறார். இவருக்கு எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடுவார் .
மீரா கிருஷ்ணன் :-
்்்்்்்்்்்்்்்்்்
இவர் ஷாகீர் மனோவின் தாயாக நடித்திருக்கிறார். வீணையை மீட்டுவதில் வல்லவர். நடிப்பில் அனைவர் மனத்திலும் இடம் பிடிப்பவர். இந்தப்படத்தில் இவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை ஏற்று உணர்ந்து நடித்து இருக்கிறார்
திவ்யா நாகேஷ் :-
்்்்்்்்்்்்்்்்்்்
அனிதா என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்து இரண்டாவது கதாநாயகியாக இந்தப் படத்தில் வலம் வருகின்றார். இவர் ஏகப்பட்டவருக்கு நூல் விட்டவர். ஷாகீர் மனோவுக்கும் நூல் விடுகிறார். காற்றாடி தான் சிக்கவில்லை. ஷாகீர் மனோ அர்ச்சனா சிங்கை காதலிப்பது தெரிந்தும் இவரை ஒருதலையாக காதலிக்கிறார். கதாநாயகனுக்கு பல விதத்தில் குடைச்சல் கொடுக்கிறார்.தன்னுடைய துள்ளல் நடிப்பால் இளமைத் துடிப்பால் நடித்து அசத்தியிருக்கிறார்.
திவ்யா நாகேஷ் :-
்்்்்்்்்்்்்்்்்்்
அனிதா என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்து இரண்டாவது கதாநாயகியாக இந்தப் படத்தில் வலம் வருகின்றார். இவர் ஏகப்பட்டவருக்கு நூல் விட்டவர். ஷாகீர் மனோவுக்கும் நூல் விடுகிறார். காற்றாடி தான் சிக்கவில்லை. ஷாகீர் மனோ அர்ச்சனா சிங்கை காதலிப்பது தெரிந்தும் இவரை ஒருதலையாக காதலிக்கிறார். கதாநாயகனுக்கு பல விதத்தில் குடைச்சல் கொடுக்கிறார்.தன்னுடைய துள்ளல் நடிப்பால் இளமைத் துடிப்பால் நடித்து அசத்தியிருக்கிறார்
இளவரசன் :-
்்்்்்்்்்்்்்்
இவர் கதாநாயகின் தந்தையாக நடித்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து மிகச் சிறப்பாக நடித்து இருக்கிறார்.
அஞ்சலிதேவி :-
்்்்்்்்்்்்்்்
இவர் கதாநாயகின் தாயாக நடித்து இருக்கிறார். இவரும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை ஏற்று மிகச் சிறப்பாக நடித்து இருக்கிறார்.
விஜய் கணேஷ் :-
்்்்்்்்்்்்்்்்்
இவர் தேநீர் கடை நடத்தும் வேடத்தில் நடித்து அசத்தியிருக்கிறார்.
தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
்்்்்்்்்்்்்்்்்்
ஒளிப்பதிவாளர் :- எம்.ஜி. ராய் ரகுராம் :-
்்்்்்்்்்்்்்்்்்்்
இவர் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர். இயக்குநர் எண்ணங்களை திரையில் வார்த்தெடுப்பவர். தன்னுடைய ஒளிப்பதிவு மூலம் காதல் மற்றும் குடும்பப் பின்னணியிலான காட்சிகளுக்கு ஏற்ப காட்சியமைப்பை வழங்கி தன்னுடைய கைவண்ணத்தை இதில் காட்டி அசத்தியிருக்கிறார். இவரை நாமும் பாராட்டலாமே !
இசை :- நள இளந்திரையன் :-
்்்்்்்்்்்்்்்்்்
இவர் இந்தப் படத்தின் இசையமைப்பாளர். இவருடைய இசையின் மூலம் உருவான பாடல்கள்அருமை. ஏனோ வார்த்தைகள் எல்லாம் நம் காதில் தெளிவாக வந்து விழ வில்லை அதை இவர் சற்றேக் கவனித்திருக்கலாம்.
கானாவிற்கு பெயர் போனவர் நம்ம கானா பாலா. ஆங்கிலத்தையும் தமிழையும் கலந்து பாடல் ஒன்று பாடியிருக்கிறார். இவரின் பாட்டுக்கு ரிஷா குத்தாட்டம் போட்டு இருக்கிறார். இளைஞர்களுக்கு இது தேநீர் விருந்து .
நள இளந்திரையன் இசையில் அதிரடி ஆர்ப்பாட்டம் தான். இவரின் பின்னணி இசைக் கோர்ப்பு படத்திற்கு மிக பெரிய பலம்.
படத்தொகுப்பு :- சேது ரமணன் :-
்்்்்்்்்்்்்்்்்்்்
இவர் இந்தப் படத்தின் படத் தொகுப்பாளர். படப்பிடிப்பு முடிந்ததும் இவருடைய பணி தொடங்குகிறது. வெட்டியும் ஒட்டியும் சேர்ப்பது மட்டும் இவருடைய வேலையில்லை. காட்சிகளை கோர்வையாக்கி கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் உயிர்க் கொடுப்பதும் இவரே. இவர் கொஞ்சம் சொதப்பினால் படமே சொதப்பி விடும். பொறுமையும் பொறுப்பும் இவருடையது. தன் பங்கிற்கு மிக நேர்த்தியாற படத்தை தொகுத்து கொடுத்து இருக்கிறார். பாராட்டலாம் இவரை. இவர் உழைப்பு படத்திற்கு ஓர் அங்கம்.எனவே பாராட்டுவோம் !
எழுத்து மற்றும் இயக்கம் :- ஏ.சி.சௌந்தர்
்்்்்்்்்்்்்்்்்
இவர் இந்தப் படத்தின் இயக்குநர் . இந்தப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்
அழகின் மீது தொடங்கும் காதல் ! உச்சத்தை தொடும் முன்னே ! காலம் சோதனைக்கு ஆட்படுத்த ! உண்மையான காதல் அன்பு வசப்படுமா ? இதனை அழகாக சொல்லியிருக்கிறார் இந்தப் படத்தின் இயக்குநர்.
இந்தப் படத்தில் மனத்தை ஈர்க்கும் காதல் உண்டு. வயிறு குலுங்க சிரிப்பும் உண்டு . குடும்ப பாசப் பிணைப்பும் உண்டு.
வெளித் தோற்றம் வெறும் மாயை . இளமையில் அழகாக இருப்பவள் முதுமையில் அந்த அழகு காணாமல் போகும்.புற அழகை விட அக அழகே மிகச் சிறப்பு என்பதை இந்தப் படத்தில் நிருபணம் செய்து இருக்கிறார் இந்தப் படத்தின் இயக்குநர். இவரை நாம் பாராட்டுவோம்.
” மௌன மொழிகள் ” என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனத்தில் நாம் களம் புகுந்த போது அழகை விட அன்பு தான் பெரியது என்பதை நமக்கு உணர்த்துக்கிறது இந்தத் திரைப்படம். காதல் , நகைச்சுவை , குடும்ப உறவு என பல்சுவை நிறைந்த இந்தப் படத்தை நாம் திரையரங்குகளில் சென்று பார்ப்போம். எங்களின் பத்திரிகை குழு நடுநிலையாக நின்று நல்லதொரு தீர்ப்பை வழங்கி சிறப்பித்து இருக்கிறது. மீண்டும் சந்திப்போம் உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் தோழர் கவிஞர் வேளச்சேரி அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட் ,ராஜேஷ் ஓகே டேக்