” நிறம் “திரை விமர்சனம்!

Share the post

” நிறம் ” என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் :-
்்்்்்்்்்்்்்்்்்்்்்்

கதைக் கரு :-
்்்்்்்்்்்
சமூகப் பிரச்சினைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதையே இந்தப் படக் கதையின் கரு .

கதையும் கதையின் போக்கும் :-
்்்்்்்்்்்்்்்்்்்
மருத்துவராக பணியாற்றுகிறார் கிருஷ். மருத்துவ மாணவியான கீர்த்தனாவைக் காதலிக்கிறார். சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன் கொடுமைகளை தன்னுடைய செல்போன் மூலம் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார் கீர்த்தனா. அதற்கான நியாயத்தைக் கேட்பதை வழக்கமாக்கிக் கொள்கிறார். கீர்த்தனா.

இந்தச் செயலினால் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கிறார் கீர்த்தனா. இதனால் கோபப்பட்ட மருத்துவர் கிருஷ் கீர்த்தனாவை விட்டு பிரிகிறார்.

இதற்கிடையில் கீர்த்தனா காணாமல் போகிறார்.அவரைத் தேடியலைகிறது அவரது குடும்பம். அவள் காணாமல் போகவில்லை. கடத்தப்பட்டிருக்கிறாள் என்ற தகவல் பின்னர் கீர்த்தனாவின் குடும்பத்திற்கு தெரிய வருகிறது.

கடத்தல் தகவல் காவல் நிலையத்திற்கு தெரிய வருகிறது. சந்தேகத்தின் பெயரில் கிருஷ் கைது செய்யப்படுகிறார். பின்னர் ஜாமீனில் வெளியில் வருகிறார். கடத்தப்பட்ட. தன் காதலி கீர்த்தனாவைத் தேடுகிறார் மருத்துவர. கிருஷ்.

கடத்தப்பட்ட தன் காதலியைத் தேடிக் கண்டு பிடிக்க முயற்சி செய்கிறார் மருத்துவர் கிருஷ்.

இந்தக் கடத்தலின் பின்னணியில் பலர் ஒளிந்திருப்பது தெரிய வருகிறது.

மருத்துவமனை நிர்வாகம் மற்றும் அதன் அதிகாரிகள் , அரசியல் பலம் பொருந்திய மர்ம நபர்கள் என ஒன்றன் பின் ஒன்றாக வெளிவரத் தொடங்கின.

கடத்தல் பின்னணியில் மருத்துவ நிர்வாகத்திற்கும் இந்தக் குற்றங்களுக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழுகிறது. அதுமட்டுமல்ல கடத்தப்பட்ட கீர்த்தனா என்னவானாள் ? அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கும் தலைவரின் பங்கு என்ன ? இத்தனை மர்மங்களுக்கும் விடைத் தேட முயற்சிப்பதே ” நிறம் ” என்னும் திரைப்படத்தின் மீதிக் கதை.

பல சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இக் கதையின் அடிப்படை சுவாரஸ்யமானது.

பெண்கள் கையில் ஸ்மார்ட் போன் இருப்பது ஒரு பாதுகாப்பு தான். சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை வெளிச்சத்துக்கு கொண்டு ஓர் ஆயுதமாகவும் பயன்படுத்தலாம் என்றக் கருத்து ஏற்புடையது தான்.

வலுவான கருத்தை திரைக்கதையில் மாற்றிய விதத்தில் இயக்குநர் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.

திரைக்கதையில் நிறைவும் குறைவும் :-
்்்்்்்்்்்்்்்்்்்
மனிதனின் முதுகு எலும்பைப் போன்றது திரைப்படத்தின் திரைக்கதை. திரைக்கதையில் சுணக்கம் ஏற்பட்டால் படம் அதலபாதளத்தில் போய் விழும்.

பல சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இக் கதையின் அடிப்படை சுவாரஸ்யமானது.

பெண்கள் கையில் ஸ்மார்ட் போன் இருப்பது ஒரு பாதுகாப்பு தான். சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை வெளிச்சத்துக்கு கொண்டு ஓர் ஆயுதமாகவும் பயன்படுத்தலாம் என்றக் கருத்து ஏற்புடையது தான்.

வலுவான கருத்தை திரைக்கதையில் மாற்றிய விதத்தில் இயக்குநர் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.

முதல் பாதியில் சம்பவங்கள் , கதாபாத்திரங்கள் , காட்சிகள் ஒன்றோடு தொடர்பு படுத்தி கதையை மிக நேர்த்தியாக சொல்லியிருக்கலாம். பல சம்பவங்களை ஒரே கதையில் திணிப்பது ஜீரணிக்க முடியாத நிகழ்வே என்று சொல்லலாம். சொல்ல வந்ததை இரத்தின சுருக்கமாகவும் , தெளிவாகவும் சொல்லியிருந்தால் மிகச் சிறப்பாக இருந்திருக்கும்.

பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும் , அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்றக் கருத்துக்களை வலியுறுத்தும் படம் இது.இதை நாம் ஏற்றுக் கொள்ளதான் வேண்டும். அதே சமயம் அநீதிக்கு எதிராக போராடும் பெண்ணை ஆபத்தில் சிக்க வைப்பதும் , காதலன் மட்டுமே அந்தப் பெண்ணைக் காப்பாற்ற முடியும் என்று சொன்னால் சட்டம் எதற்கு ? காவல் துறை எதற்கு ? என்றக் கேள்விகள் கேட்க இடம் அளிக்கின்றன அல்லவா !

திரை நட்சத்திரங்கள் :-
முகேன் ராவ் :-
்்்்்்்்்்்்்்்்்்்்்
கதாநாயகன் கிருஷ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இருந்தாலும் அவருக்கான அறிமுகக் காட்சிகள் , உணர்ச்சிக்கரமான தருணங்கள் இவைகளில் கொஞ்சம் கவனம் செலுத்தி நடித்து இருக்கலாம். கதையின் ஓட்டமும் கதாபாத்திரத்தின் கனமும் கருத்தில் கொண்டு அழுத்தம் கொடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

ப்ரீத்தி அஸ்ரானி :-
்்்்்்்்்்்்்்்்்்
கீர்த்தி என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ப்ரீத்தி அஸ்ரானி துணிச்சலான பெண்ணாக நடித்து இருக்கிறார்.

அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பது மன தைரியத்தை நிச்சயமாக பாராட்டியே ஆக வேண்டும்.

ஆனால் பிற் பகுதியில் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம்.

நிதின் சத்யா :-
்்்்்்்்்்்்
இந்தப் படத்தில் வில்லனாக ஏற்று மிகச் சிறப்பாக நடித்து இருக்கிறார் நிதின் சத்யா.

வில்லத்தனமான வேடத்தில் நடித்திருக்கும் இவரது பார்வை , உடல்மொழி மற்றும் நடிப்பு இவற்றின் மூலம் மிரட்டு மிரட்டு என மிரட்டுகிறார் நிதின் சத்யா.

எதிர்மறை கதாப்பாத்திரத்தில் தான் நெருக்கமாகி தன்னால் அழுத்தமாக பயணிக்க முடியும் என்பதை நிரூபித்திக் காட்டியிருக்கின்றார்.

துணை நட்சத்திரங்கள் :-
்்்்்்்்்்்்்்்்்
படத்திற்கு பக்க பலமாக நிற்பவர்கள் இந்தத் துணை கதாபாத்திரங்களே !

தான்யா ஹோப் :-
்்்்்்்்்்்்்்்்்்
இவர் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் பொருந்துகிறார் தன்னுடைய நடிப்பால் மக்கள் மனத்தை தொட்டு இருக்கிறார் .

சுரேகா வாணி , கஜராஜ் உள்ளிட்ட நடிகர்களும் கதையின் ஓட்டதிற்கு வலு சேர்க்கின்றனர்.

தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
்்்்்்்்்்்்்்்்்்
ஒளிப்பதிவாளர் :-
சான்டோனியோ டெர்சியோ :-
்்்்்்்்்்்்்்்்்்்்்்்

பல கோணங்களில் உருவான சம்பவங்களை ஒருங்கிணைத்து தன்னுடைய கை வண்ணத்தால் ஒளிப்பதிவு செய்து படத்திற்கு மேலும் வலு சேர்த்து இருக்கிறார்.

படத்தொகுப்பு :- V.J.சாபு ஜோசப் :-
்்்்்்்்்்்்்்்்்
படத்திற்கு உயிர்க்காப்பு இந்தப் படத் தொகுப்பு. படத்தொகுப்பாளர் படத்தின் ஓட்டத்திற்கு ஏற்ப வெட்டி ஒட்டி நிறைவு செய்ய தடுமாறியிருக்கிறார்.

இசை :- D.இமான் :-
்்்்்்்்்்்்்்்்்்
இமானின் இசையில் பாடல்கள் கேட்கும் வண்ணம் உள்ளன. பின்னணி இசை த்ரில்லருக்கு ஈடு கொடுத்து வேறு உலகத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

இயக்கம் :- கிருஷ்ண பலராம் :-
்்்்்்்்்்்்்்்்்்்்்
பரபரப்பான நாவல் ஒன்றை படிக்கும் உணர்வைத் தரும் வகையில் வெவ்வேறு திசைகளில் இருந்து பயணிக்கும் சம்பவங்களை ஒருங்கிணைத்து சமூகத்திற்கு தேவையான கருத்தை ஆணித்தரமாக வலிவுறுத்துகிறார் இப்படத்தின் இயக்குநர் கிருஷ்ண பலராம்.

நிறம் என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனத்தில் களம் புகுந்ததில் நல்லவர்கள் தீமையைக் கண்டு ஒதுங்குவது தான் சமூகத்திற்கு பெரிய ஆபத்து என்ற சிந்தனையைத் தூண்டும் வகையில் படத்தை உருவாக்கி திரைக்கு கொண்டுவந்த இயக்குநரை எத்தனை முறை வேண்டுமானாலும் பாராட்டலாம். எங்களின் பத்திரிகை குழு நடுநிலையாக நின்று நல்லதொரு தீர்ப்பை வழங்கியுள்ளது.மீண்டும் சந்திப்போம் அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் தோழர் கவிஞர் வேளச்சேரி அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட், ராஜேஷ் ஓகே டேக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *