” ஜெடூசி ” திரை விமர்சனம்!

Share the post

” ஜெடூசி ” என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் :-:
்்்்்்்்்்்்்்்்்்்்
கதைக் கரு :-
்்்்்்்்்்்்
மர்மக் கொலைகளை மையமாக வைத்து மனித வாழ்க்கையின் வலிகளையும் , சமூகத்தில் தோன்றும் அவலங்களையும் திரைப்படமாக உருவாக்கப்பட்ட கதையின் கதைக் கரு.

கதையும் அதன் போக்கும் :-
்்்்்்்்்்்்்்
மர்மத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் மனித வலியின் கதை .எதிர்பாராத திருப்பங்கள் .உணர்ச்சிகரமான சம்பவங்கள் இணைந்து உருவாக்கப்பட்ட த்ரில்லர் கதை தான் இந்தப் படத்தின் கதை.

தொடர்ச்சியாக நடைபெறும் மர்மக் கொலைகள் , அதனைச் சுற்றி எழும் சந்தேகங்கள் .காவல் துறையின் தொடர் விசாரணை என ஆரம்பக் கட்டத்திலேயே கதைக்குள் பார்வையாளர்களை அழைத்துச் செல்லுகிறது இந்தப் படத்தின் திரைக்கதை. ஒவ்வொரு சம்பவம் நடக்கிறது அதற்குப் பின்னால் உண்மை ஒளிந்திருக்கிறது. அந்த உண்மை என்ன ? என்ற ஆவல் மனத்தை பாடா படுத்தும் வகையில் காட்சிகள் அமைத்திருப்பது வெகு சிறப்பு.

முன்பெல்லாம் கொலையாளியையும் , குற்றாவாளியையும் தேடிக் கண்டுபிடிப்பதற்கு காவல் துறைக்கு பெரும் சவாலாக இருந்தது. தொழில் நுட்பம் வளர வளர கொலையாளியையும் , குற்றவாளியையும் சுலபமாக கண்டு பிடிப்பதற்கு ஏதுவாக இருப்பதால் இவர்கள் உடனடியாக பிடிப்பட்டு விடுகிறார்கள்.

சிசிடிவி பதிவுகள் மற்றும் தொழில் நுட்பத் தடயங்கள் இவற்றின் அடிப்படையில் விசாரணை முடிக்கி விடப்படும் விதம் படத்திற்கு பக்க பலமே என்று சொன்னால் அது மிகையாகாது.

கொலையாளிகள் யார் யார் ? அவர்களின் பின்னணி என்ன ? யார் யாரெல்லாம் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள் ? என்ற கேள்விகளுடன் சக்தி என்ற இளைஞனின் வாழ்க்கைக்குள் கதை நுழையும் போது எதிர்ப்பும் மின்னல் வேகத்தில் பயணிக்கிறது.

படம் முழுவதும் குற்றச் சம்பவங்களையும் மர்மங்களையும் மட்டுமே முன்னிறுத்தி பார்வையாளர்களை பயமுறுத்தவில்லை.

இரண்டாம் பாதியில் மலைக் கிராமம். அக் கிராமத்தின் இயற்கைச் சூழல். இதற்குள் பயணிக்கும் கதை . அங்குள்ள மனிதர்களின் வாழ்க்கை முறை , குடும்ப உறவுகள் அவர்களுக்கு இடையே தோன்றும் அன்பு , பாசம் என முற்றிலும் வேறொரு உணர்வை பார்வையாளர்களுக்குத் தருகிறது. இந்த மாற்றமே படத்தின் முக்கியமான சிறப்பு அம்சமாக அமைகிறது.

காவேரியின் வாழ்க்கையில் ஏற்படும் துயரமான சம்பவத்தின் திருப்பவமே கதையின் போக்கை மாற்றுகிறது. அந்தத் துயரச் சம்பவத்தை தொடர்ந்து உருவாகும் மனப் போராட்டங்களும் அதனால் ஏற்படும் விளைவுகளும் பார்வையாளர்களை மிகவும் மனத்தில் பாதிக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது.

மனிதர்களின் சிலரின் வாழ்க்கையில் நிகழும் அநீதிகள் அவர்களின் எதிர் காலத்தையே எப்படி புரட்டிப் போடுகின்றன என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது இந்தத் திரைப்படம்.

திரை நட்சத்திரங்கள் :-
ஸ்ரீதர் :-
்்்்்்்்்்்்்்்்்்்
சக்தி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீதர் கதையின் மையத்தைத் தாங்கிச் செல்லும் வகையில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியுள்ளார் ஸ்ரீதர். பாசத்தை வெளிப்படுத்துவதிலும் , கோபத்தை வெளிப்படுத்துவதிலும் , வேதனையை வெளிப்படுத்துவதிலும் , மன உளைச்சலில் குமைவதிலும் தனக்கென ஒரு பாணியைக் கடைப்பிடித்து ஒவ்வொரு உணர்வுகளுக்கு ஏற்றவாறு தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியிருப்பது பார்வையாளர்களின் இதயத்தை பிழிகின்ற உணர்வை ஏற்படுத்துகின்றன.

ஸ்வேதா ஸ்ரிம்ப்டன் :-
்்்்்்்்்்்்்்்்்்்்
காவேரி என்னும் கதாபாத்திரத்தில் ஸ்வேதா ஸ்ரிம்ப்டன் நடித்து தனது இயல்பான உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது எதார்த்தமான நடிப்பு கதைக்கு வலிமை சேர்ப்பதுடன் பார்வையாளர்கள் மனத்திலும் இடம் பிடித்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

துணை நட்சத்திரங்கள் :-
்்்்்்்்்்்்.்்்்
அனு கதாபாத்திரத்தில் சினியுதனும் தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

பிளாக் பாண்டி :-
்்்்்்்்்்்்்்்்்
சின்னா கதாபாத்திரத்தில் தனது இயல்பான நடிப்பால் காட்சிகளுக்குத் தேவையான இடங்களில் கலகலப்பையும் , உயிரோட்டத்தையும் கலந்து கொடுத்து பார்வையாளர்களை சிரிக்க வைத்திருக்கிறார்.

கொம்பனாக வரும் பாவா செல்லதுரை , வள்ளியாக வரும் ஜெயந்திமாலா ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை ஏற்று மிகச் சிறப்பாக நடித்து கதைக்கு வலு சேர்த்து இருக்கிறார்கள்.

ஏ.வெங்கடேஷ் :-
்்்்்்்்்்்்்்்்
வில்லன் ஜெயப் பிரகாஷ் கதாபாத்திரத்தில் ஏ.வெங்கடேஷ் தனது இயல்பான நடிப்பால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறார்.

அருவி மதன் டி.எஸ்.பி விக்ரமாக நடித்து இருக்கிறார். அசோக் குமார் கண்ணபிரானாக நடித்து இருக்கிறார்.

தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
்்்்்்்்்்்்்்்்
இயக்குநர் :- நட்ராஜ் ஏகாம்பரம் :-
்்்்்்்்்்்்்்்்்்்
நல்லதொரு கதையை தெரிவு செய்து கதையின் ஓட்டத்திற்கு ஏற்றவாறு திரைக்கதை அமைத்து நச்சு என்று வசனத்தை எழுதி திக்கென பற்றிக் கொள்ளும் நெருப்பைப் போல தன் இயக்கத்தால் படத்தை தெறிக்க விட்டிருக்கிறார் பாராட்டலாம்.

தான் எழுதிய கதையில் மர்மம் உண்டு ; உணர்வும் உண்டு ; சமூகச் சிந்தனையும் உண்டு. எதிர்காலத்தில் நல்ல இயக்குநராக வலம் வருவார்.

முதல் பாதியில் ஏற்படும் பரபரப்புக்கும் இரண்டாம் பாதியில் உணர்ச்சிக்கரமான அணுகுமுறைக்கும் இடையே வித்தியாசத்தை உருவாக்கியிருப்பது கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய காட்சிமை இவை .

ஒளிப்பதிவாளர் :- நாக அர்ஜூன் V.S.
்்்்்்்்்்்்்்்்்்்்்
இந்தத் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் இவரே ! மலைப் பகுதிகளின் இயற்கை அழகையும் , கிராமப் புற வாழ்க்கையின் எதார்த்தத்தையும் அழகாகத் திரையில் பதிவு செய்து இருப்பது வரவேற்கக் கூடிய நற் செயலாகும்.

மர்மம் மிகுந்த காட்சிகளை ஒளிப்பதிவு செய்த உத்தியும் , இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளை ஒளிப்பதிவு செய்த உத்தியும் அவரது ஒளிப்பதிவின் தனித் தன்மையை தெள்ளென தெரிகிறது. இவருக்கு ஒரு சபாஷ் போடலாமே !

இசை :- விக்னேஸ்வரன் :-
்்்்்்்்்்்்்்்்
இசைக்கு மயங்காத உயிரினங்களும் உண்டு. பின்னணி இசை கதையின் ஓட்டத்திற்கு துணையாக நின்று செவ்வெனவே படம் சிறப்புற்று வெற்றிக் கொடி நாட்ட வழி செய்கிறது.

திரைப்படத்தின் தனித்துவம் :-
்்்்்்்்்்்்்்்்்
மர்மத்தைக் கண்டுபிடிக்கத் தொடங்கும் பயணம் , மனித மனங்களின் வலியைப் புரிந்து கொள்ளும் அனுபவமாக மாறுகிறது. பட்டறிவு தான் அனுபவம். அதுவே ஜெடூசி திரைப்படத்தின் தனித்துவம் .

” ஜெடூசி ” என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனத்தில் களம் புகுந்த போது நமக்கு புலப்படும் செய்திகள் :- மர்மம் , த்ரில்லர் ,காதல் , சமூகத்தின் பார்வை , உணர்வும் உணர்ச்சியும் இதனை மையமாகவே பல படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் இந்தப் படமும் ஒன்று . பார்க்க வேண்டிய படம். அனைவரும் திரையரங்குகளில் சென்று படத்தைப் பாருங்கள். திரையுலகத்தாருக்கு நல்லதொரு தீர்ப்பை வழங்குங்கள். எங்களின் பத்திரிகை குழு நடு நிலையாக நின்று நல்லதொரு தீர்ப்பை வழங்கி சிறப்பித்துள்ளது. மீண்டும் சந்திப்போம் . அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் தோழர் கவிஞர் வேளச்சேரி அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட், ராஜேஷ் ஓகே டேக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *