“மக்கள் தலைவா” திரைப்பட விமர்சனம்…

Share the post

“மக்கள் தலைவா” திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள்:-
ரவிமரியா, ராதாரவி, நாஞ்சில் சம்பத்,
பழ.கருப்பையா,

அக்னி.எஸ்.வருண், கஞ்சா கருப்பு, இயக்குனர் பேரரசு, பயில்வான் ரங்கநாதன்,

இயக்குனர் ரங்கநாதன், அக்ஷரா விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டைரக்டர்:-
ராம் தேவ்.

மியூசிக்:-
துளசி ராமன்.

ஒளிப்பதிவு:-
கார்த்திக் நாயர்.

படத்தொகுப்பு:-
துர்கேஷ்

தயாரிப்பாளர்கள்:-
கவிதாலயா சரவணன்.

ஒரு வேலைக்கும் செல்லாமல், செய்யாமல் சோம்பேரியாக ஊர் சுற்றுவது

போலியான போராட்டங்கள் செய்வது மூலம் கிடைக்கும் பணத்தால்

வாழ்க்கையை ஓட்டும் ரவி மரியாவுக்கு, பெரும் செல்வந்தரான

ராதாரவி மூலம் அதிஷ்ட்டம் கிடைக்கிறது. தன் பணத்தை வைத்து

தமிழகத்தில் அரசியல் விளையாட்டு விளையாட திட்டம் போடுகிறார்
ராதாரவி,

அதற்காக ரவி மரியாவை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்கிறார்.

அதன்படி, ரவி மரியாவை சினிமாவில் நாயகனாக்கிறார். பிறகு அவரது

தலைமையில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்குகிறார்.

ராதாரவி சொல்வதை கேட்டு அப்படியே செய்யும் ரவி மரியா, அவரது

திட்டத்தின்படி மக்களுக்கு சேவை செய்வதை காட்டிலும், போலியான

விளம்பரங்கள் மூலம் மக்களிடம் எளிதில் சென்றடைவது, குறுகிய

காலக்கட்டத்தில் மக்கள் தலைவராக உருவெடுக்கிறார்.

தேர்தல் நாள் நெருங்கும் போது ராதாரவியும் கட்சியில் தன்னை

இணைத்துக்
கொள்ள, ரவிமரியா விபத்தில் சிக்கி

மேல் சிகிச்சைகாக வெளிநாட்டுக்கு அனுப்பப்படுகிறார்.

இதனால், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் ? என்ற கேள்வி எழுகின்றது. அப்போது

ராதாரவி எடுக்கும் ஒரு அதிரடி முடிவு, தமிழகத்தின் அரசியல்

வரலாற்றையே திருப்பிப் போட, அதன் மூலம் எந்த

மாதிரியான விளைவுகள் ஏற்படுகின்றன,

ராதாரவியின் இந்த அரசியல் விளையாட்டுக்கான காரணம் என்ன,

என்பதை சமக்கால அரசியலை நையாண்டி செய்யும்

விதத்தில் சொல்வது தான் “மக்கள் தலைவா”என்ற திரைப்பட கதைக்களம்.

வில்லன் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ள ரவி மரியா,

கதையின் நாயகனாக தனக்கான பணியை குறையில்லாமல்

செய்திருக்கிறார். காதல் பாடல், அரசியல் மேடை பேச்சு, என்று

இதுவரை பார்க்காத ரவி மரியாவை திரையில் பார்க்க முடிகின்றது. நடிப்பில்

எந்தவித மாற்றமும் வெளிக்காட்டவில்லை என்றாலும், தான் ஏற்ற தமிழ்

குடிமகன் என்ற கதாபாத்திரத்தை எந்தவித குறை
இல்லாமல்

கையில் எடுத்துக்கொண்டு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

உலகளவில் முன்னணி வெளிநாட்டு நிறுவனத்தின்

உயரிய பதவியில் இருக்கிற தமிழர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ராதாரவி, பணமும், அதை எப்படி பயன்படுத்தினால் நாம் எப்படி நாம் நினைத்து.

நடக்கும் என்பதை அறிவு இருந்தால், அரசியலில் எளிதில் வெற்றி பெறலாம்

என்ற எண்ணம் உண்மைக்கு தனது நடிப்பின் மூலம் உயிர் கொடுத்திருக்கிறார்.

தற்போதைய நவீன தொழில்நுட்ப காலக்கட்டத்தில், பழமையான

அரசியல் பாதையில் பயணிக்கும் அரசியல்வாதிகளின் அவலநிலையையும்,

அவர்களால் அபாயக் கட்டத்தில் சிக்கும் அரசியல் கட்சிகளின் பரிதாப

நிலையையும் வெளிக்காட்டும் கதாபாத்திரத்தில்

நடித்திருக்கிறார் .பழ கருப்பையா, தனது நடிப்பில் மற்றும்

வசன உச்சரிப்பின் மூலம் அதிர வைக்கிறார்.

பெட்டி வாங்கும் நடுநிலை அரசியல்வாதிகளின் அடையாளமாக நடித்திருக்கிறார்.

நாஞ்சில் சம்பத், நாயகனின் நண்பர் என்பதால் அமைச்சராகும் அதிஷ்ட்டம் பெற்ற

கஞ்சா கருப்பு, மற்றொரு நண்பராக நடித்திருக்கிறார். அக்னி எஸ்.வருண், பாட்டிலுக்கு 10

ரூபாய் கூடுதலாக வாங்குவதை தட்டிக்கேட்கும் ஆட்டோ ஓட்டுநராக

நடித்திருக்கிறார். இயக்குநர் பேரரசு, யூடியுபராக

நடித்திருக்கிறார். பயில்வான் ரங்கநாதன், இயக்குநர் ரங்கநாதன்,

கதாநாயகி என்ற பெயரில் ஒரு பாடல் காட்சியில் மட்டும் வந்து போகும்

அக்‌ஷரா விஜய் ஆகியோர் கதாபாத்திரங்களு
க்கு ஏற்ப

பொறுத்தமான தேர்வாக பயணித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கார்த்திக் எஸ்.நாயர், தன்னிடம் இருக்கிற வசதிகளை வைத்து

காட்சிகளை தரமாக படமாக்கியிருக்
கிறார். குறிப்பிட்ட

ஒரு லொக்கேஷன் என்றாலும் அதை வெவ்வேறு பல

கோணங்களில் படமாக்கி வித்தியாசத்தை காட்டியிருக்கிறார்,

எளிமையான இடங்களை கூட ரசிக்கும்படி காட்சிப்படுத்தியிருக்கிறார்.

துளசிராமன் இசை மற்றும் வரிகளில் பாடல்கள்

கமர்ஷியல் அம்சங்களுடன் கேட்க வைக்கின்றன. பின்னணி இசையும்

காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்
கின்றன.

அதிகமான வசன காட்சிகள் இருப்பினும்

காட்சிகளின் நீளத்தை குறைத்து, முழு படத்தின்

நீளத்தை இரண்டு மணி நேரத்திற்குள் அடக்கிய

படத்தொகுப்பு துர்கேஷை பாராட்டி ஆகவேண்டும்

தற்போதைய தமிழக அரசியலில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் மற்றும்

புதியவர்களின் வருகையை கதைக்களமாக கொண்டு

திரைக்கதையை அமைத்திருக்கிறார். இயக்குநர் ராம்தேவ், வெற்றி பெற்றவர்களின்

பின்னணியில் நடந்த அரசியல் வியாபாரத்தை தைரியமாக

சொல்லியிருக்கிறார்அவரது துணிச்சலான.

கதையும், காட்சிகளும் கற்பனை என்றாலும், தற்போதைய

காலக்கட்ட அரசியல் சம்பவங்களின் பிரதிபலிப்பாக இருப்பது படத்தை

சுவாரஸ்யமாக பயணிக்க வைத்திருக்கிறார், சில இடங்களில்

தான் சொல்ல வந்ததை மறந்து, படத்தில் தான் நடித்த

கதாப்பாத்திரம் போல் இயக்குநர் ராம்தேவ்

திரைக்கதையின்
கதையில் தெரிகிறது.

பல அரசியல் நையாண்டி படங்களை பார்த்திருக்கிற தமிழ்

சினிமா பார்வையாளர்
களுக்கு,

தற்போதைய அரசியல் மாற்றத்தை சரி செய்த

நையாண்டியாக சொல்லி இருப்பது போல கொஞ்சம் சிந்திக்க வைக்கவும்

செய்திருக்கிறார் இயக்குநர் ராம்தேவ், திரைக்கதை மற்றும் காட்சியமைப்பு விறுவிறுப்பாக

கூடுதல் கவனத்தை செலுத்தி நல்ல

மக்கள் ஆட்சியை போல் பெரும் அரசியல் அதிர்வலையை ஏற்படுத்தியது.

படம்‌ பார்த்தத்தில், “
தெரிகிறது
“மக்கள் தலைவா” மக்கள் மனதில் நிற்கும் கூடிய அரசியல்வாதி

அமைப்புக்களின் மக்கள் ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தது இல்லாமல் ‌இல்லை

அனைவரும் திரையரங்குகளில் பார்க்க வேண்டிய திரைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *