“ஆலி”முற்றிலும் புது முகங்களின் ஆக்கிரமிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் !.

Share the post

தமிழ் மலையாளத்தில் ஆகஸ்ட் 14ஆம் தேதி “ஆலி” ரிலீஸ்

புதியவர்களின் கூட்டணியில் ‘ஆலி’

முற்றிலும் புது முகங்களின் ஆக்கிரமிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ஆலி’..

மலையாளத்தில் ஒரு பக்கம் நட்சத்திரங்களின் படங்கள் வெற்றி பெற்றாலும் இன்னொரு பக்கம் புதிய இளைஞர்களின் புதிய சிந்தனையில், புதிய பார்வையில், புதுவிதமான கதைகளில் உருவாகி வரும் பல படங்கள் புதிய திசையிலான பாய்ச்சலில் வெற்றிகளைக் குவித்து வருகின்றன .அந்த வரிசையில் அமையும் வகையில் மலையாளப் படக் குழுவினர் உருவாக்கி இருக்கும் திரைப்படம் தான் ‘ஆலி’.இது தமிழ், மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் உருவாகி இருக்கிறது.

ஆலி – கதைச் சுருக்கம்

தமிழ்நாடு – கேரள எல்லைப்பகுதியில் வசிக்கும் இளம் கதை – பெண் காதல், குடும்பம், மதம், கலாச்சாரம் மற்றும் வாழ்க்கையின் எதிர்பாராத திருப்பங்களை உணர்வுபூர்வமாகச் சொல்லும் “ஆலி கதாநாயகி திருமணம் மதம் ஜாதி கடந்து நடைபெறுகிறது என்பதே படத்தின் விறுவிறுப்பான உச்சக்கட்டம்.

இப்படத்தில்
பிரஜின், டாக்டர் கிருஷ்ணா பிரியதர்ஷன், கைலாஷ், கிருஷ்ண பிரசாத், லதா தாஸ் ,டாக்டர் ரஜித் குமார், சௌரவ் ஷ்யாம், ஆத்யா பிரசாத் (சுருதி), மன்ஹர் பிரியதர்ஷன், ஜோபி ,மன்சாட் லீலா, சுரேஷ் திருவல்லா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார்
டாக்டர் கிருஷ்ணா பிரியதர்ஷன்.ஒரு பெண்மணியாக இருந்து படத்தை இயக்கி இருக்கும் அவரே படத்திற்கான பாடல்களையும் எழுதி உள்ளார்.
மன்ஹர் சினிமாஸ் தயாரித்துள்ளது.

இப்படத்திற்கு
ஒளிப்பதிவு செய்துள்ளார் ரினாஸ் நாசர்.
அபு ஜியாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.
இசையமைப்பாளர்கள்
ராமவர்மா தம்புரான் , சுரேஷ் ரத்தீஷ் ராய் ,ஆர் ஆர் பிரதர்ஸ், ஷ்ரத்தா பார்வதி என ஒரு நட்புக் குழுவே இணைந்து இசையமைத்துள்ளது.

படத்தில் அரபிப் பாடகர் ஹுசைன் ,ஹிந்திப் பாடகர் சம்பத் மற்றும் அரவிந்த் வேணுகோபால், ரித்து கிருஷ்ணா, சரிதா ராஜீவ் பாடியுள்ளார்கள்.
அரபி, இந்திப்பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் ரத்தீஷ் ராய்.
ஒலியமைப்பு (SFS) – என். ஷாபு செருவல்லூர், டி ஐ – சஜய் சி.ஆர்.
நடனக் காட்சிகளை
அதுல் ராதாகிருஷ்ணன், சுனிதா நோயல் ஹாய் ஆகியோர் அமைத்துள்ளனர்.
கலை இயக்கம் – அகிலேஷ் • ஷிஜு அபாஸ்கர்,
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர் – ஸ்ரீதர் , திறமையானவர்கள் இணைந்து இயங்கி இருக்கிறார்கள்.

இந்தப் படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *