இஞ்சி சாயிலிருந்து பீச் டீ வரை: ரெடி–டூ–டிரிங் டீ 109% வளர்ச்சி; பீச் டீக்கு 62% உயர்வு
● ரெடி-டூ-டிரிங் (RTD) டீ பிரிவு ஆண்டுக்கு ஆண்டு (YoY) 109% வளர்ச்சியுடன் மிக வேகமாக வளர்ந்த பிரிவாக உருவெடுத்துள்ளது.
● பீச் டீ 62% வளர்ச்சியைப் பதிவு செய்து, இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் டீ சுவையாக மாறியுள்ளது.
● துளசி டீ, கிரீன் டீ மற்றும் ப்ளூ பீ டீ ஆகியவற்றின் ஆதரவால் வெல்னஸ் டீகள் 26% வளர்ச்சி கண்டுள்ளன.
● புவனேஸ்வர், ஆண்டுக்கு ஆண்டு 64% வளர்ச்சியுடன் இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் டீ நகரமாக திகழ்கிறது.
● இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் இஞ்சி சாய் (Adrak Chai) இன்னும் மிகவும் விரும்பப்படும் டீ வகையாக உள்ளது.
● கொம்புசா (Kombucha) இந்தியாவின் முதல் ஐந்து வேகமாக வளர்ந்து வரும் டீ போக்குகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
சென்னை, ஜூன் 19, 2026:
இந்தியா இன்னும் ஒரு நல்ல கப் சாயை நம்பியே நாளைத் தொடங்குகிறது. ஆனால், இந்தியர்களின் டீ குடிக்கும் பழக்கங்களில் புதிய மாற்றங்கள் தென்படத் தொடங்கியுள்ளன. வெல்னஸ் டீகள், கொம்புசா, பழச்சுவை கொண்ட ரெடி-டூ-டிரிங் டீகள் போன்ற புதிய வகைகள் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. அதே சமயம், தலைமுறைகள் கடந்தும் தொடரும் பாரம்பரிய டீ கலாச்சாரம் தனது முக்கியத்துவத்தை இழக்கவில்லை.

இஞ்சி சாய் (Adrak Chai) இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் டீ வகையாக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. அதனைத் தொடர்ந்து பிளாக் டீ, ஏலக்காய் டீ, கிரீன் டீ மற்றும் மசாலா சாய் ஆகியவை அதிகம் விரும்பப்படும் வகைகளாக உள்ளன. பாரம்பரிய டீ இன்னும் ஆதிக்கம் செலுத்தினாலும், ரெடி-டூ-டிரிங் டீ போன்ற புதிய வடிவங்கள் இந்தப் பிரிவில் புதிய வளர்ச்சியை உருவாக்கி வருகின்றன. குறிப்பாக, இந்தப் பிரிவு ஆண்டுக்கு ஆண்டு 109% வளர்ச்சி கண்டுள்ளது.
இந்தியாவின் டீ உலகம் புதிய சுவைகளைத் தேடுகிறது
டீயில் புதிய சுவைகளை முயற்சிப்பது இனி கஃபேக்கள் அல்லது சிறப்பு டீ கடைகளில் மட்டுப்படவில்லை. பீச் டீ 62% வளர்ச்சியுடன் இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் டீ சுவையாக உருவெடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து ப்ளூ பீ டீ, கொம்புசா, துளசி டீ மற்றும் கிரீன் டீ போன்றவை வேகமாக பிரபலமடைந்து வருகின்றன.
இந்தப் போக்கு, ஆரோக்கியம் சார்ந்த பானங்கள், செயல்பாட்டு (functional) பானங்கள் மற்றும் உலகளாவிய சுவைகளின் மீது இந்திய நுகர்வோரின் அதிகரித்து வரும் ஆர்வத்தை பிரதிபலிக்கிறது.
அதே நேரத்தில், வசதியும் முக்கிய காரணியாக மாறியுள்ளது. பிஸியான வாழ்க்கை முறைக்கு ஏற்ற வகையில் உடனடியாக அருந்தக்கூடிய ரெடி-டூ-டிரிங் டீகளின் தேவை அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, Instamart-இல் இந்தப் பிரிவு 109% வளர்ச்சி பெற்று, மிக வேகமாக வளர்ந்து வரும் டீ பிரிவாக மாறியுள்ளது.
ஆனால் இந்தியாவின் இதயம் இன்னும் சாயில்தான்
புதிய சுவைகள் மற்றும் வடிவங்கள் வளர்ந்து வந்தாலும், பாரம்பரிய டீ இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே தொடர்கிறது.
● நாடு முழுவதும் அதிகம் விரும்பப்படும் முதல் ஐந்து டீ வகைகள்: இஞ்சி சாய், சாதாரண பிளாக் டீ, ஏலக்காய் டீ, கிரீன் டீ மற்றும் மசாலா சாய்.
● இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் இஞ்சி சாய் மிகவும் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட டீ வகைகளில் ஒன்றாக உள்ளது. இது இந்தியர்களின் பொதுவான டீ விருப்பமாக தொடர்ந்து விளங்குகிறது.
● இந்தியாவின் “டீ தலைநகரம்” என்றால் அது பெங்களூரு. அதனைத் தொடர்ந்து மும்பை மற்றும் ஹைதராபாத் நகரங்கள் உள்ளன.
● மாபெரும் நகரங்கள் இன்னும் அதிகளவு டீ ஆர்டர்களை உருவாக்கினாலும், புவனேஸ்வர், திருவனந்தபுரம் மற்றும் கொச்சி போன்ற நகரங்களில் வளர்ச்சி வேகம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
● இந்தியர்கள் டீ வாங்க அதிகம் விரும்பும் நாள் ஞாயிற்றுக்கிழமை. அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை மற்றும் வியாழக்கிழமை உள்ளன.
இந்த ஆய்வுக்கான அனைத்து தகவல்களும் ஜூன் 2025 முதல் ஜூன் 2026 வரை இந்தியாவின் 130-க்கும் மேற்பட்ட நகரங்களில் Instamart-இல் பதிவு செய்யப்பட்ட டீ ஆர்டர்களின் பகுப்பாய்வின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை. அனைத்து கணக்குகளும் ஒப்பீட்டு மற்றும் குறியீட்டு (indexed) தரவுகளாகும்; முழுமையான ஆர்டர் எண்ணிக்கைகள் வெளியிடப்படவில்லை.