டார்க் ஜியண்ட்” திரைப்பட விமர்சனம்…( Dark Giant. review )

Share the post

“டார்க் ஜியண்ட்” திரைப்பட விமர்சனம்…
( Dark Giant. review )

நடித்தவர்கள் :-
ஆதர்ஷ் மதிகாந்த்,
ஜோவிதிகா லிவிங்ஸ்டன்,

அருவி மதன், சோனியா அகர்வால்,
ரபிக் பாட்ஷா, அமுத வண்ணன்,

கே.பாக்யராஜ் ,
லிவிங்ஸ்டன், மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டைரக்டர்:-
கே.எஸ்.கிஷான்.

மியூசிக்:-
விக்னேஷ் ராஜா.

ஒளிப்பதிவு:-
சங்கீத் மணி கோபால்.

படத்தொகுப்பு:-
ஜி.ஜெ. திருச்செல்வம்.

தயாரிப்பாளர்கள்:-
பி.ஆர்.கிரியேஷ்ன்.
படத்தின்
நாயகன் ஆதர்ஷ் மதிகாந்த், தனது மனைவி மற்றும்

தங்கையுடன் குடும்ப த்துடன் சென்னையில் வசித்து வருகிறார்.

கடன் பிரச்சனையில் சிக்கி தவிக்கிறார்

ஆதர்ஷ் மதிகாந்தை தொலைப்பேசியில் திடீரென்று தொடர்பு

கொள்ளுகிறார் அவர் ஒருவர், கோவை

மாவட்டத்தில் இருந்து உள்ள கிராமம் ஒன்றில், அவரது தாத்தா இருப்பதாக,

அவர் தனது சொத்துக்களை தனது பேரன், பேத்திகளுக்கு

கொடுக்க வேண்டும் என்பதை விரும்புவதாக சொல்கிறார்.

தனக்கு சொத்து கிடைத்தால் தன்னுடைய கடன் பிரச்சனை எல்லாம் தீர்ந்துவிடும் என்ற

எண்ணத்தில், தனது மனைவி மற்றும் தங்கையை அழைத்துக் கொண்டு அந்த

கிராமத்துக்கு செல்லுகிறார்.
ஆதர்ஷ் மதிகாந்த்,

சொத்துக்காக படுத்த படுக்கையாக இருக்கும் தாத்தா உடன் சில நாட்கள்

தங்க முடிவு செய்கிறார். அப்போது அந்த வீட்டில் எதிர்பார்க்காத சில பயங்கரமான அமானிஷய

சம்பவங்கள் நடக்கின்றன, அவர்களை கிராமத்திற்கு

வர வைத்த நபரும், படுத்த படுக்கையாக இருந்த அவரது தாத்தாவும், பல வருடங்களுக்கு முன்பே

இறந்துவிட்டார் என்ற உண்மை தெரிய வருகின்றது. அதன் பிறகு நடக்கிற சம்பவங்களை,

நாயகனின் குடும்பத்தை கிராமத்திற்கு வர வைத்ததற்கான

பின்னணியையும், நெஞ்சம் பதறும் வகையில் சொல்வது

தான் ‘டார்க் ஜியண்ட்’. திரைப்பட கதைக்களம்.

தொடர்ந்து திகில் மற்றும் வித்தியாசமான அமானுஷ்ய

கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஆதர்ஷ் மதிகாந்த், இந்த முறையும்

சுவாரஸ்யமான ஒரு திகில் கதையில் தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தை

மிக சிறப்பாக கையாண்டுள்ளார். அவரது தலைமுடி அலங்கோலமாக

இருந்தால், கடன் பிரச்சனையில் சிக்கி தவிப்பது, சாத்தான் தன்னுடைய உடலில் மீது புகுந்த பிறகு தனது சூழ்நிலையை

மறந்து நடப்பது, பிறகு தனதுசூழ்நிலை அறிந்து கலங்குவது, என்று பல உணர்வுகளை

அருமையாக நடித்து வெளிப்படுத்தி கிறார்.

நாயகனின் மனைவியாக நடித்திருக்கிறார். ஜோவிதா லிவிங்ஸ்டன்,

குடும்பபாங்கான கதாபாத்திரத்திற்கு பொறுத்தமான தேர்வாக

இருக்கிறார். பயமும், பதற்றமும் கலந்த நடிப்பால் பார்வையாளர்களின் கவனம் ஈர்க்கபடுகிறார்.

கதையின் மையப்புள்ளியாக நடித்திருக்கிறார். அருவி மதன் மற்றும் சோனியா அகர்வால், குறைந்த

காட்சிகள் வந்தும் பார்வையாளர்கள் மனதில் நிற்கும்படி விதத்தில் நடித்திருக்கிறார்கள்.

நாயகனின் தங்கையாக நடித்திருக்கிறார்

நடிகை கொடுத்த வேலையை சரியாக நடித்திருக்கிறார்.

நாயகனின் நண்பராக நடித்திருக்கிறார் அமுதவாணன், போலீஸ் இன்ஸ்பெக்டராக

நடித்திருக்கிறார். ரபிக் பாட்ஷா, சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

கே.பாக்யராஜ் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர்

திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சங்கீத் மணிகோபால் திகில் காட்சிகளை பீதி அடைய செய்யும்

வகையில் காட்சிப்படுத்தி பார்வையாளர்களை நெஞ்சை படபடக்க வைக்கிறார்.

விக்னேஷ் ராஜாவின் பின்னணி இசை

காட்சிகளில் இருக்கிற பயங்கரத்தை பார்வையாளர்களிடம் கடத்தி சென்று பயத்தை‌ ஏற்படுத்துகின்றன.

படத்தொகுப்பாளர் ஜி.ஜெ.திருச்
செல்வம், பி.ஆர்.கிரியேஷன் ஸ்டுடியோஸின் வி.எஃப்.எக்ஸ் பணி,

கலை இயக்குநர் பணி ஆகியவை படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த் திருக்கின்றன.

எழுதி இயக்கியிருக்கிறார் கே.எஸ்.கிஷான், திகில் கதைக்களத்தை சரியான முறையில்

எடுத்திருக்கிறார். பார்வையாளர்களை மிரள செய்திருக்கிறார்.

ஒரு வீட்டில் நடக்கிற சம்பவங்கள் என்றாலும் அதை அச்சத்துடன் பார்க்க‌ வைத்து.

கதை சில மர்மங்கள் செய்து, திகில் காட்சிகளை தொழில்நுட்ப

ரீதியாக தரமாக கொடுத்திருக்கிறார். இயக்குநர் கே.எஸ்.கிஷான்,

திகில் பட ரசிகர்களை கொஞ்சம் திருப்திப்படுத்தியிருக்கின்றன.

படம் பார்த்தத்தில், “டார்க் ஜியண்ட்” ஒரளவுக்கு எல்லோரும்

பார்க்கும் அளவில் திகிலடைய வைக்கின்றன. திரையரங்குகளில் பார்க்க வேண்டிய திரைப்படம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *