நேற்று இந்த நேரம்’ திரை விமர்சனம் !!
கிளாபின் ஃபிலிமோடெயின்மென்ட் – கே.ஆர். நவீன் குமார் தயாரித்து,சாய் ரோஷன் கே.ஆர்,இயக்கி வெளிவந்திருக்கும் படம்,நேற்று இந்த நேரம் !
ஷாரிக் ஹாசன், ஹரிதா, மோனிகா ரமேஷ், காவ்யா அமைரா, திவாகர் குமார், நிதின் ஆதித்யா, ஆனந்த், அரவிந்த் செல்வா, பாலா மற்றும் பலர் நடித்துள்ளனர் !
இசை: கெவின்.என் !
நாயகன் ஷாரிக் ஹாசன், அவரது காதலி ஹரிதா மற்றும் அவர்களது நண்பர்கள் ஊட்டிக்கு சுற்றுலா செல்கிறார்கள்.!
அங்கு காதலர்களுக்கு இடையிலும், நண்பர்களுக்கு இடையிலும் சில மோதல்கள் ஏற்படுகிறது.!
அந்த மோதலுக்குப் பிறகு நாயகன் ஷாரிக் ஹாசன் திடீரென்று மாயமாகி விடுகிறார்.
அதுபற்றி போலீசில் புகார் அளிக்க, போலீஸ் நண்பர்களிடம் விசாரணை நடத்திக்கொண்டிருக்கும் போது, புகார் கொடுத்த நண்பரும் திடீரென்று மாயமாகி விடுகிறார்.!
மாயமான இரண்டு பேர் பற்றியும் போலீஸ் விசாரிக்கும் போது, நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்ல, இறுதியில் காணாமல் போனவர்கள் கிடைத்தார்களா?, அவர்கள் மாயமானதற்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை போலீஸ் கண்டுபிடித்ததா? இல்லையா?
என்பதை இப்படத்தின் கதை!
வில்லத்தனம் கலந்த நாயகன் வேடத்தில் நடித்திருக்கும் ஷாரிக் ஹாசன், நாயகியாக நடித்திருக்கும் ஹரிதா மற்றும் நண்பர்களாக நடித்திருக்கும் மோனிகா ரமேஷ், காவ்யா அமிரா, திவாகர் குமார், நிதின் ஆதித்யா, ஆனந்த், அரவிந்த் மற்றும்
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் செல்வா மற்றும் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் பாலா அனைவரும் கொடுத்த கதாபாத்திரம் ஏற்று சிறப்பாக நடித்துள்ளனர்
.
இயக்குநர் சாய் ரோஷன்.கே.ஆர்,
ஒரே சம்பவதை பல கோணங்களில் விவரித்து திரைக்கதையை வித்தியாசமாக அமைத்திருக்கிறார்
இடையில் வரும் சைக்கோ கொலையாளி உள்ளிட்டவை படத்தின் நீளத்தை அதிகரித்து உள்ளது
விஷாலின் ஒளிப்பதிவும், கெவினின் இசையும் , கோவிந்த், படத்தொகுப்பு படத்துக்கு பலம்
மொத்தத்தில், ‘
*நேற்று இந்த நேரம்’ பார்க்கலாம்*
..