இடி மின்னல் காதல்’ திரை விமர்சனம் !!

Share the post

இடி மின்னல் காதல்’ திரை விமர்சனம் !!

ஜெயச்சந்தர் பின்னம்நேனி, பாலாஜி மாதவன்தயாரித்து, பாலாஜி மாதவன் இயக்கி வெளிவந்திருக்கும் படம் இடி மின்னல் காதல்!

சிபி, பவ்யா த்ரிகா, யாஸ்மின் பொன்னப்பா, ராதா ரவி, பாலாஜி சக்திவேல், ஜெகன், ஜெயதித்யா, வின்சென்ட் நகுல் மனோஜ் முல்லத் மற்றும் பலர் நடித்துள்ளனர்!

இசை: சாம் சிஎஸ்

அமெரிக்காவுக்கு செல்ல இருக்கும் நாயகன் சிபி, அதற்கு முன்பாக தனது காதலி பவ்யா ட்ரிகாவுடன் காரில் ஜாலியாக வலம் வர, திடீரென்று குறுக்கே வருபவர் மீது மோதி !

இந்த விபத்தில் அந்த நபர் உயிரிழந்துவிடுகிறார்!

தெரியாமல் நடந்த விபத்து என்றாலும், தன்னால் ஒரு உயிர் பலியானதை நினைத்து சிபி வருத்தப்பட்டாலும், அவர் அமெரிக்கா செல்வதற்கான அனைத்து உதவிகளையும் காதலி பவ்யா ட்ரிகா செய்து !

இதற்கிடையே, உயிரிழந்த நபரின் மகன் ஆதித்யா தனது அப்பா இறந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் மன அழுத்தத்திற்கு !

அவருக்கு பாலியல் தொழிலாளி யாஷ்மின் பொன்னப்பா ஆதரவளிக்க, இறந்து போனவர் வாங்கிய கடனுக்காக அவருடைய மகன் ஆதித்யாவை தாதா வின்செண்ட் நகுல் அழைத்துச் செல்ல !

இந்த இரண்டு கதைகளும் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரே நேர்கோட்டில் பயணிக்க, தன்னால் உயிரிழந்தவரின் மகன் தான் ஆதித்யா என்பது தெரியாமலேயே அவரை காப்பாற்றும் முயற்சியில் நாயகன் சிபி !

ஆனால், தனது தந்தை இறந்ததற்கு காரணம் சிபி தான் என்பதை தெரிந்துக்கொள்ளும் சிறுவன் ஆதித்யா, சிபி மீது கொலை வெறிக்கொள்ள, அதனால் எப்படிப்பட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது என்பதை இப்படத்தின் கதை!

சிபி, ஆக்‌ஷன் நாயகனாக நடித்திருக்கும்   காட்சிகள் அனைத்து சிறப்பு !

நாயகியாக நடித்திருக்கும் பவ்யா ட்ரிகா, அளவான நடிப்பு மற்றும் அழகோடு ரசிகர்களை கவர்கிறார். கமர்ஷியல் நாயகியாக அல்லாமல் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள வேடத்தில் நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்!

வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் வின்செண்ட் நகுல்,கவனம் தேவை!

சிறுவன் ஆதித்யா அப்பா இறந்த துக்கத்தை தாங்காமல் மன ரீதியாக பாதிக்கப்பட்டு தடுமாறும் காட்சிகள் அனைத்தும் தரம் மிக்கவையாக உள்ளது !

சிபி தான்  அப்பாவின் மரணத்திற்கு காரணம்
என்றதுமே அவர் மீது கொலை வெறிக்கொண்டு அவர் வெளிப்படுத்தும் காட்சிகள் அனைத்தும் அருமை !

பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கும் யாஷ்மின் பொன்னப்பா கதாபாத்திரம் ஏற்ற நடித்துள்ளார்  !

.
ராதாரவி ,பாலாஜி சக்திவேல் இருவரும் அனுபவம் வாய்ந்த நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.!

ஜெகன், காமெடி நடிகராக இல்லாமல் குணச்சித்திர நடிகராக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்!

.
ஜெயசந்தர்  ஒளிப்பதிவு படத்துக்கு பலம் சேர்த்து இருக்கிறது !

சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் , பின்னணி இசை யும் அருமை!.

அறியாமல் செய்த தவறுக்கு நாயகன் பரிகாரம் செய்வதாக நினைத்து,
இறந்தவரின் மகன் தான் அந்த சிறுவன் என்று தெரியாமலேயே அவனை காப்பாற்ற நினைப்பது மற்றும் இரண்டு கதைகளை ஒரே நேர்கோட்டில் பயணிக்க வைத்திருப்பது படத்தை சுவாரஸ்யமாக உள்ளது !

ஒரு விபத்தை வைத்துக்கொண்டு, பல  கதாபாத்திரங்களின் உடன் திரைக்கதை  அமைத்திருப்பது சிறப்பு !

மொத்தத்தில்,

*இந்த ‘இடி மின்னல் காதல்’ சிறப்பாக உள்ளது!!

*


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *