ஊமைசெந்நாய் திரை விமர்சனம்

Share the post

ஊமைசெந்நாய். குறைந்த பொருட் செலவில் படம் எடுக்கப்பட்ட படம்

மைக்கேல் தங்கதுரை, சனம் ஷெட்டி, கஜராஜ் உள்ளிட்டோர் நடித்து இருக்கிறார்கள்

 நல்ல த்ரில்லர் சினிமாவை எடுத்திருக்கிறார் இயக்குநர் அர்ஜுனன் ஏகலைவன்.

நகரின் முக்கியஸ்தர்களை பின் தொடரும் ஒரு டிடக்டிவ் குழு அதில் வேலை செய்யும் நாயகன், அரசியல்வாதி, காவல்துறை அதிகாரி என  கதாபாத்திரங்களை உருவாக்கி அவர்களுக்குள் நடக்கும் வன்முறை துரோகம் என ஒரு சஸ்பன்ஸ் சினிமாவாக இது உருவாக்கப்பட்டிருக்கிறது. நாயகன் மைக்கேல் தங்கதுரைக்கும் நாயகிக்கும் இடையில் நடக்கும் காதல் காட்சிகள் இதம். அவர்கள் இருவருக்கும் இடையில் கெமிஸ்ட்ரி நன்றாக வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. ஆனால் தன்னை தேடி வரும் பெண்ணின் அன்பை புரிந்து கொள்ளாமல் ஏன் அவ்வளவு இறுக்கமாக இருக்கிறார் நாயகன் என்றுதான் புரியவில்லை. டிடக்டிகவ் குழு தலைவராக கஜராஜின் தேர்வு மிகச்சரி. பெட்ரோல் பங்க் முதலாளி கதாபாத்திரம் அவரது மனைவி விஜய ஸ்ரீ மற்றும் மகள் பாத்திரம் என எல்லாமே கதைக்குத் தேவையாக உள்ளது.

ஒளிப்பதிவு சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

சிவாவின் பாடல் ரசிக்க வைக்கிறது. 

பல காட்சிகள் உலகசினிமா படத்துக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

சண்டை காட்சிகள்.. சிறப்பாக உள்ளது, வில்லன் நடிப்பு சிறப்பு, எதார்த்தமானகதையை திரைக்கதை அமைத்துள்ளார்.

அனைத்து விஷயத்துக்கும் பணமே என்று உணர வைத்திருக்கிறார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *