ஜூன்-12ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்ட ‘ஆட்டி’ படத்தின் ரிலீஸ் !

Share the post

ஜூன்-12ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்ட ‘ஆட்டி’ படத்தின் ரிலீஸ்

லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆட்டி’. இந்தப் படத்தில் தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணனே கதையின் நாயகனாக ஒரு காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.. ‘அயலி’ புகழ் அபி நட்சத்திரா கதாநாயகியாக நடிக்க, காதல் சுகுமார், சௌந்தர், பிரவீன் பழனிச்சாமி மற்றும் பல முக்கிய நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

எங்கள் குல\த்தில் பெண்களே முதலானவர்கள் என்கிற கருத்தை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளது.. பழந்தமிழ் வரலாற்றில் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி வெற்றி பெற்றதைப் பற்றியும், அதில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளையும் தாண்டி வந்ததைப் பற்றியும், அவர்கள் எதிர்நோக்கிய பாலியல் சீண்டல்களையும் அதை கையாண்ட விதம் பற்றியும் பேசுகிறது.

ஜூன்-5 ஆம் தேதி ரிலீஸாக இருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் ஜூன்-12ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு திரைக்கு வர இருக்கின்றது.

தற்போது சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ மற்றும் அர்ஜூன் நடித்துள்ள ‘BLAST’ திரைப்படங்கள் சிறப்பான வரவேற்பைப் பெற்று அதிக திரையராங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கின்றன.

ஆனால் ‘ஆட்டி’ ஒரு ஆகச்சிறந்த படமாக உருவாகி இருக்கின்றது என்பதால் ‘ஆட்டி’ படத் தயாரிப்பாளரும் கதையின் நாயகனுமான இசக்கி கார்வண்ணன் குறைந்தபட்சம் நூற்றுக்கும் மேற்பட்ட தியேட்டர்களிலாவது இத்திரைப்படம் வெளிவரவேண்டும் என்பதிலும் மிகவும் உறுதியாக உள்ளார்.

இதனால் இத்திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையினைப் பெற்றுள்ள ‘வி ஹவுஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவுனர் சுரேஷ் காமாட்சியுடன் கலந்து ஆலோசித்து, அதன் அடிப்படையில் சுரேஷ் காமாட்சி விநியோகஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களும் சிறந்த கால அவகாசத்துடன் அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் ‘ஆட்டி’ படம் வருவதே அந்த படைப்புக்கு கொடுக்கும் மரியாதையாகும் என ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் இப்படத்தை ஜூன்-12ஆம் தேதிக்கு ரிலீஸ் செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *