
சர்தார்-2 என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் :-
படத்தின் துவக்கம் சுவாரஸ்யமாக அமைந்து எவ்வித தயக்கமும் இல்லாமல் நேராக கதைக்குள் நுழைந்து பார்வையாளர்களுக்கு குழப்பம் இல்லாமல் படத்தினை கொண்டு செல்கின்றனர் படக்குழுவினர். இதற்கு கேப்டன் இயக்கநர் பி.எஸ். மித்ரன்.
அடுத்து அடுத்து வரும் காட்சிகளில் வரும் ஓவர் தி டாப் ட்ரீட்மென்ட் காரணமாக அந்த சுவாரஸ்யம் நெடு நேரம் நீடிக்காமல் கதையை குழப்புகிறது. என்பதனை விட காட்சியைக் குழப்புகிறது.
இன்றைய சூழ்நிலையில் படத்தின் நீளத்தினை யாரும் விரும்புவது இல்லை. திரையரங்கின் காட்சிக் கட்டணம் உயர்ந்த நிலையில் அதிக விலைக் கொடுத்து பார்க்கும் மன நிலையில் பார்வையாளர்கள் இன்று இல்லை.
படத்திற்கு பிரமாண்ட காட்சிகளை அமைத்திருப்பது பார்வையாளர்களுக்கு ஒரு திருப்தி. சிலர் திருப்தியின் உண்மையான அர்த்தம் தெரியாமல் கிண்டல் செய்கின்றனர். அது வருந்தக் கூடிய நிகழ்வே. சிலருடைய வருத்தம் அதில் பலருக்கு மகிழ்ச்சி… நாடு அந்த நிலைமையில் போகிறது நாம் என்ன செய்ய முடியும் ?
படத்தில் சில ஆக்ஷன் காட்சிகள் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல தாக்கத்தினை ஏற்படுத்துகிறது. மொத்தத்து் சுமாரான படமே !
திரை நட்சத்திரங்கள் :-
கார்த்திக் – இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். நடிப்பில் நேர்த்தி , உடல் மொழியில் ஓர் அசத்தல். வசன உச்சரிப்பில் கம்பீரம். தனக்கே உரிய பாணியில் நடித்திருக்கிறார்.
எஸ்.ஜே. சூரியா , ரெஜிஷா விஜயன் , ஆஷிகா , மாளவிகா மோகனன் போன்றோர் நடித்துள்ளனர் இப் படத்தில்.
தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
இசை :- சாம்.சி.எஸ் . எதிர்ப்பார்த்த தாக்கத்தை இவர் இசையில் ஏற்படுத்தவில்லை.
கிராஃபிக்ஸ் எடுபடவில்லை. பின்னணி இசை கதையோடு ஒட்டவில்லை. ஆண்டிபயாடிக்ஸ் மெசேஜ் அருமை.
ஆக்ஷனில் மிரட்டி இருக்கிறார் கார்த்திக். இவருடன் கரம் கோர்த்திருக்கிறார் எஸ்.ஜே .சூரியா.
இயக்குநர் :- பி.எஸ். மித்ரன். நல்ல கருத்துக்களை இப் படத்தில் சொல்லியிருக்கிறார்.
கார்த்திக் – பி.எஸ். மித்ரன் கூட்டணி கடந்த 2022 ஆம் ஆண்டில் வெளியான சர்தார் முதல் பாகம் அமோக வெற்றியைக் கண்டது. அதனைத் தொடர்ந்து சர்தார் பாகம் இரண்டை வெளியிட்டு தன்னை தக்க வைத்துள்ளார் இப் படத்தின் இயக்குநர் பி.எஸ். மித்ரன்.
சர்தார் – 2 என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனத்தில் பார்வையாளர்களை கவரும் வண்ணம் படத்தினை எடுத்துள்ளனர் படக் குழுவினர். படம் பார்க்கலாம். வசூல் வேட்டையில் அள்ளினாலும் கதை ஓட்டத்தில் சுமாரான படம் தான். எங்கள் பத்திரிகை குழு நடுநிலை நின்று உள்ளதை உள்ளபடி சொல்லியிருக்கிறது. மீண்டும் அடுத்த திரை விமர்சனத்தில் சந்திப்போம் என்றும் உங்கள் கவிஞர் மாத்தூர் அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட், ராஜேஷ் ஓகே டேக்