
” டோண்ட் டிரபிள் தி டிரபிள் ” என்னும் திரைப்படத்தின் திரைவிமர்சனம் :-
கதைக் கரு :- மேஜிக் லாக்டெட்டை மைய மாக வைக்கப்பட்ட கதைக் கரு.
கதைக் கரு :- மேஜிக்கை மையமாக வைத்து கதை சொல்வதே இக் கதையின் கரு.
சூரி ஓர் ஆம்புலன்ஸ் டிரைவர். இவர் பந்தயம் கட்டி ஆம்புலன்ஸ் ஓட்டி பணம் சம்பாதிக்கின்றார். பழைய ஸ்மக்ளர் அஸ்லாமுடன் இவருக்கு பிரச்சினை ஏற்படுகிறது. அது என்ன பிரச்சினை என்பதை தியேட்டரில் பார்த்து கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் . கதைக்கு வருவோம். மூன்று நாட்களுக்குள் ரூபாய் 25 இலட்சம் தனக்கு கொடுக்க வேண்டும் என அஸ்லாம் இவரை மிரட்டுகிறார். பணத்திற்காக பலர் தவறான வழியில் போய் தன் பெயரையும் , தன் மானத்தையும் இழந்து விடுகின்றனர். அந்த வகையில் சூரியும் தவறான பாதையில் பயணம் செய்கிறார். அதனாலே தப்பு மேலே தப்பு மேலே தப்பு பண்ணுகிறார். அப்பொழுது அவருக்கு மேஜிக் லாக்டெட் ஒன்று கிடைக்கின்றது. அதில் இருந்து திவ்யா என்ற சின்னப் பொண்ணு வருகிறாள். அந்தப் பொண்ணு சூரியின் கண்ணுக்கு மட்டும் புலப்படுவாள்.மற்றவர் கண்களுக்கு புலப்பட மாட்டாள். தன்னுடைய மேஜிக் சக்தியால் காணாமல் போன தன்னுடைய தாய் தகப்பனை கண்டுபிடித்துத் தரும்படி அந்தச் சின்னப் பொண்ணு சூரியிடம் மன்றாடுகிறாள். கெஞ்சிக் கூத்தாடுகிறாள்.
அந்தச் சின்னப் பொண்ணுவை வைத்து சூரி எப்படி பணம் சம்பாதிக்க நினைச்சாருங்கிறது தான் கதை.
திரை நட்சத்திரங்கள் :-
சூரி வேடத்தில் ஃபகத் ஃபாசில் நடித்திருக்கின்றார். இப் படத்தின் கதைநாயகனான் இவர் எவ்வளவு கஷ்டப்பட்டு நடித்தாலும் கதையில் எந்த விஷயமும் இல்லை அதனால் இவருடைய நடிப்பு எடுபடவில்லை. காரண காரியம் இல்லாத காட்சிகளினால் படம் ரொம்பவே தொய்வாகி நிற்கிறது.
சூரி வேடத்தில் நடித்திருக்கும் ஃபகத் ஃபாசில் வசனம் பேசுவதிலும் வார்த்தைகளை உச்சரிப்பதிலும் செயற்கைத் தனம் தெரிகிறது. சில வார்த்தைகள் பார்வையாளரின் காதுகளுக்கு எட்டவில்லை. சரியாக சொன்னால் புரியவில்லை. வசன உச்சரிப்பில் சிறு குழப்பம்.
சிறுமி திவ்யா கதாபாத்திரத்தில் பேபி சாரா நடித்துள்ளார்
படம் முழுவதும் பேபி சாராவையே சுற்றி வருகிறது. இது குழந்தைப் படமோ என்ற எண்ணம் நமக்கு வருகிறது. படத்திலே அந்தச் சின்னப் பொண்ணோட மேஜிக் பிளஸ் தான் பாராட்டலாம்.
பேபி திவ்யா கதாபாத்திரத்திலே பேபி சாரா ரொம்ப கியூட்டா நடிச்சு நம்மை அசத்தி இருக்கா…. பாராட்டலாமே !
கதாநாயகனின் நண்பனாக வெங்கடேஷ் நடிச்சு இருக்காரு. போலீஸ்ஸா சுப்புராஜ் நடிச்சு இருக்காரு. வில்லன் அஸ்லாமா மகேஷ் மஞ்ச்ரேக்கர் நடிச்சு இருக்காரு. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை உணர்ந்து நடிச்சு இருக்காங்க …
தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
இயக்குநர் :- ஷசாங்க் ஏலேட்டி. முதலில் இவர் கதைக்கு ஏற்ற பெயரை தேர்ந்தெடுக்க தவறிவிட்டார். இந்தத் தவறு எங்கெல்லாம் வருகிறது கொஞ்சம் பாருங்கள். கதையிலே நகைச்சுவை கதையோட ஒட்டலே ! எமோஷன் , மேஜிக் இதை இவர் சரியா(க) பயன் படுத்தாமல் படத்தைக் குழப்பி விட்டார். முதல் பகுதியில் கதாநாயகனுக்கு அழுத்தம் கொடுத்து விட்டு இரண்டாம் பாதியில் பஞ்சு மிட்டாய் கணக்கில் கதையை இழுத்து விட்டு கதாநாயகனையும் இழுவை ஆக்கிவிட்டார். அந்தச் சின்னப் பொண்ணோட நடிப்பு பிரமாதம். மற்றப்படி பிற காட்சிகளும் கதாபாத்திரங்களின் பங்களிப்பும் சுமார் தான்.இப் படத்தின் இயக்குநர் சரிவர காட்சிமைப்படுத்த தவறிவிட்டார்.
டோண்ட் டிரபிள் த டிரபிள் என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனத்தில் ஆய்ந்த போது மிகப் பெரிய ஜாம்பவான்களும் சில வேளையில்கோட்டை விடுவார்கள் என்பதற்கு இந்தப் படமே சாட்சி. கதையை கதையா( க) எடுங்க அதை விட்டுவிட்டு படம் பண்றோம் என்ற பெயரிலே கதைப் பண்ணாதிங்க ! எங்களின் பத்திரிகைக் குழு ஆய்ந்து நடுநிலையாக நின்று நல்லதொரு தீர்ப்பை வழங்குகிறது. இனி அடுத்த திரை விமர்சனத்தில் சந்திப்போம். என்றும் நட்புடன் கவிஞர் வேளச்சேரி அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட் ,ராஜேஷ் ஓகே டேக்