
” சம்ஹாரம் ” திரைப்பட விமர்சனம்…
நடித்தவர்கள்:-
பிரஜின்,ஷருமிஷா,
கணேஷ் சாவரட்டில்,நியா வர்கீஸ் ராஜ்குமார்,
தென்றல் ராஜா,ராம்பிரபா, மற்றும் பலர் நடித்துள்ளனர்.
டைரக்டர்:-
ராம் பிரபா.
மியூசிக்:-
வி.ஜி.ஹரி கிருஷ்ணன்.
ஒளிப்பதிவு:-
சுரேஷ் சுந்தரம்.
படத்தொகுப்பு
ராம் நாத்.
தயாரிப்பாளர்கள்:-
வித்யா புரொடக்சன்ஸ் சார்பில் வேல்முருகன்.
படத்தின் நாயகன் பிரஜின் ஏற்பாடு செய்திருந்த திருமணத்தை பிடிக்காமல்
அவருடைய தங்கை நாயகி ஷருமிஷா வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
அதே சமயம், தான் நினைத்தது போல் காலை திருமணம் நடந்தே ஆக வேண்டும் என்பதில்
பிரஜின் உறுதியாக இருக்கிறார், அவரது தங்கை எப்படியாவது அந்த வீட்டிலிருந்து
இரவோடு தனது காதலனுடன் தப்பித்து விட வேண்டும் என்று முடிவு செய்கிறார்.
இதற்கிடையே, ஒருவர் தனது மகளுடன் இரவு மட்டும் பிரஜின்
வீட்டில் அடைக்கலம் கேட்க, அதற்கு பிரஜின் சம்மதிக்கிறார்.
பிரஜின் நினைத்தது போல் அவரது தங்கையை
திருமணம் செய்து கொள்பவர் அவரது வீட்டுக்கு வருகிறார். தப்பிச் செல்ல
நினைத்த அவரது தங்கையும், அவரது காதலனும் சேர்ந்து
மாப்பிள்ளையை கொலை செய்ய முடிவு செய்கிறார்கள்.
மறுபக்கம், அடைக்கலம் கேட்டு வந்த அப்பா, மகளும் அந்த
மாப்பிள்ளையை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். இதற்கிடையில்
பிரஜின் தனது வீட்டு காவலாளியுடன் இணைந்து ஏதோ சில மர்மமான
விஷயங்களை செய்துக் கொண்டிருக்கிறார். இப்படி இரவு
முழுவதும் மர்மான சம்பவங்கள் நடக்கின்றன.
அந்த வீட்டில் இறுதியில் திருமணம் நடந்ததா இல்லையா?
சிலர் திட்டம் போடுவது போல்
கொலை நடந்ததா ? இல்லையா?
என்பதை படத்தின் மீதிக்கதைக்களம்
நல்லவரா, இல்லையா? கெட்டவரா என்பதை தெரியாதபடி
வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரத்தில் பிரஜின் சரியாக
நடித்து கதாபாத்திரத்திற்கு பெரிய பலம் சேர்த்திருக்கிறார்.
பிரஜினின் தங்கையாக கதையின்
நாயகியாக நடித்திருக்கிறார். ஷருமிஷா
உணர்வுப்பூர்வமாக நடித்து நல்ல ஸ்கோர் செய்திருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கிறார். கணேஷ் சாவரட்டில், பார்த்தாலே பயம்
ஏற்படும் அளவுக்கு முரட்டுத்தனமாக இருப்பது, தன் முரட்டுத்தனமான நடிப்பின் மூலம்
அட்டகாசமான வில்லனாக நடித்திருக்கிறார்.
பிரஜினின் மனைவியாக நடித்திருக்கிறார்.
நியா வர்கீஸ், ராஜ்குமார் , தென்றல் ராஜா, ரம்
பிரபா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை
குறை இல்லாமல் செய்திருக்கிறார்கள்.
சுரேஷ்குமார் சுந்தரம் ஒரே வீட்டுக்குள் முழு
படத்தையும் படமாக்கியதில், அந்த வீட்டையே பல
கோணங்களில் காட்சிப்படுத்தி பார்வையாளர்களை
பதற வைத்திருக்கிறார். கதை முழுவதும்
இரவு நேரத்தில் பயணித்து காட்சிகளை தரமாக படமாக்கியிருக்
கிறார்.
படத்தில் பாடல் இல்லை என்பதால், பின்னணி இசையில்
தனது எல்லா வித்தையை கொண்டு
இசைத்திருக்கிறார் இசையமைப்பாளர் வி.ஜி.ஹரி கிருஷ்ணன்.
ஆனால், பல இடங்களில் பார்வையாளர்களின் காதை காயமாக்கி
விடுகின்றன. கொஞ்சம் அளவில் சத்தம் கொடுத்து இசைத்திருக்கலாம்.
ராம்நாத்தின் படத்தொகுப்பு படத்தின் நீளத்தை
குறைத்து பார்வையாளர்களை காப்பாற்றியிருக்
கிறார்
எழுதி இயக்கியிருக்கிறார். ராம் பிரபா, ஒரு வீட்டுக்குள், ஒரு
இரவில் நடக்கும் கதையை பல்வேறு திருப்பங்கள்
கொண்ட திரைக்கதை மூலம் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் நகர்த்தி சென்றிருக்கிறார்.
படத்தின் சில இடங்களில் சின்ன சிறு குறைகள் இருந்தாலும், யூகிக்க முடியாத
திருப்பங்கள் அந்த குறையை மறக்கடித்த படத்தை ரசிக்க வைக்கின்றன
படம் பார்த்ததில், ‘சம்ஹாரம்’ ரசித்து பார்க்க முடியவில்லை.