‘மெகா சுப்ரீம் ஹீரோ’ சாய் துர்கா தேஜ் நடிக்கும் ‘சம்பராலா ஏடி கட்டு- SYG ‘ படத்தின் படப்பிடிப்பு நிறைவு : 2027 ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது!

Share the post

‘மெகா சுப்ரீம் ஹீரோ’ சாய் துர்கா தேஜ் நடிக்கும் ‘சம்பராலா ஏடி கட்டு- SYG ‘ படத்தின் படப்பிடிப்பு நிறைவு : 2027 ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது

‘மெகா சுப்ரீம் ஹீரோ’ சாய் துர்கா தேஜ் நடிப்பில் ரோஹித் கே. பி. இயக்கத்தில் பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் ‘சம்பராலா ஏடி கட்டு – SYG திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த திரைப்படம் 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி சங்கராந்தி பண்டிகையையொட்டி வெளியாகிறது

‘மெகா சுப்ரீம் ஹீரோ’ சாய் துர்கா தேஜ் நடிப்பில் பெரிதும் எதிர்பார்ப்பில் உள்ள பான் இந்தியா திரைப்படமான ‘சம்பராலா ஏடி கட்டு- SYG திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.

அறிமுக இயக்குநர் ரோஹித் கே. பி. இயக்கத்தில் பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி ஆகியோர் இணைந்து தயாரித்து வரும் இந்த பிரம்மாண்டமான ஆக்சன் திரைப்படம்- தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளில் ( போஸ்ட் புரொடக்ஷன்) படக்குழுவினர் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்தத் திரைப்படம் 2027 ஆம் ஆண்டு சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என்றும் படக் குழுவினர் அறிவித்துள்ளனர். பண்டிகை கால வெளியீடு என்பதால்.. இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் சாய் துர்கா தேஜ் மிகவும் தீவிரமான மற்றும் கரடு முரடான தோற்றத்தில் தோன்றுகிறார். உடல் முழுவதும் ரத்தம் மற்றும் காயங்களுடன் கையில் ஆயுதத்தை ஏந்தி ஆக்ரோஷமான முகபாவனையுடன் தீப்பிழம்புகள் சூழ்ந்த பின்னணியில் அவர் அச்சமின்றி நடந்து செல்வது போல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. எரியும் கட்டிடங்கள்- புகை – பரபரப்பான சூழல் – ஆகியவை மோதல்கள் மற்றும் அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்த ஒரு உலகத்தை பிரதிபலிக்கிறது.

‘அசுர ஆகமன’- Asura Aagamana எனும் முன்னோட்ட காட்சி மற்றும் பிற விளம்பரப்படுத்தப்பட்ட போஸ்டர்கள் மூலம் கிடைத்த சிறப்பான வரவேற்பின் ஊடாக இப்படம் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. தற்போது படப்பிடிப்பு வெற்றிகரமாக முழுமையாக நிறைவடைந்த நிலையில், படக் குழுவினர் போஸ்ட் புரொடக்ஷன் எனப்படும் படபிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றனர். ஒரு பிரம்மாண்டமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் வகையில் படத்தின் தொழில்நுட்ப மற்றும் காட்சி அம்சங்களுக்காக தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

மிகவும் பிரம்மாண்டமான முறையில் உருவாக்கப்பட்டுள்ள ‘ சம்பராலா ஏடி கட்டு- SYG’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பல இடங்களில் நடைபெற்று உள்ளது. இதில் பிரம்மாண்டமான அரங்கங்கள் மற்றும் பெரிய அளவிலான ஆக்சன் காட்சிகள் ஆகியவை படத்தின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளன. நீண்ட தயாரிப்பு பயணம்… தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இது படக்குழுவினருக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

சாய் துர்கா தேஜ் இதில் ஒரு சக்தி வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இது அவரை முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வலுவான- உணர்ச்சிகரமான- அம்சங்கள்… கண்களை கொள்ளை கொள்ளும் காட்சிகள்…. விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகள்… ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒரு பிரம்மாண்டமான ஆக்சன் திரைப்படமாக இயக்குநர் ரோஹித் கே. பி. உருவாக்கி வருகிறார்.‌

பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஒருவர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது இப்படத்தின் பான் இந்திய அளவிலான ரசிகர்களின் கவன ஈர்ப்பை மேலும் அதிகரிக்கிறது. இவர்களுடன் ஐஸ்வர்ய லெட்சுமி, ஜகபதி பாபு, சாய்குமார், ஸ்ரீகாந்த், அனன்யா நாகல்லா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.‌

இந்தத் திரைப்படத்தில் திறமை மிக்க தொழில்நுட்ப குழுவினரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர். வெற்றிவேல் பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்ய , பி. அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். நவின் விஜய் கிருஷ்ணா படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, காந்தி நதிக்குடிகர் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். சண்டை பயிற்சி இயக்குநர்கள் பீட்டர் ஹெய்ன்- ராம் லக்ஷ்மன்- சேத்தன் – ப்ருத்வி ஆகியோர் பிரம்மாண்டமான ஆக்சன் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். இவர்கள் அனைவரும் படத்தின் பிரம்மாண்டத்திற்கு தங்களுடைய பங்களிப்பை முழுமையாக வழங்கி உள்ளனர்.

நடிகர்கள் : சாய் துர்கா தேஜ், ஐஸ்வர்யா லட்சுமி, ஜகபதி பாபு , சாய்குமார், ஸ்ரீகாந்த், அனன்யா நாகள்ள

தொழில்நுட்பக் குழு :

எழுத்து & இயக்கம் : ரோஹித் கே. பி.
தயாரிப்பாளர்கள் : கே நிரஞ்சன் ரெட்டி- சைதன்யா ரெட்டி
தயாரிப்பு நிறுவனம் : ப்ரைம் ஷோ என்டர்டெயின்மென்ட்
ஒளிப்பதிவு : வெற்றி பழனிச்சாமி
இசை : பி. அஜனீஷ் லோக்நாத்
படத்தொகுப்பு : நவின் விஜய் கிருஷ்ணா
தயாரிப்பு வடிவமைப்பாளர் : காந்தி நதிக்குடிகர்
சண்டை பயிற்சி இயக்குநர்கள்: பீட்டர் ஹெய்ன்- ராம் லக்ஷ்மன் – கேத்தன் – ப்ருத்வி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஹாஷ்டாக் மீடியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *