“பரிமளா அண்ட் கோ” திரைப்பட விமர்சனம்…

Share the post

“பரிமளா அண்ட் கோ” திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள்:-
ஜெயராம்,‌
ஊர்வசி, சஞ்சனா, கிருஷ்ணமூர்த்தி, அனந்திகா சனில், சாண்டி மாஸ்டர்,
மிஷ்கின், காயத்ரி,

ஜி.கே.எம் தமிழ் குமரன், யோகி பாபு,பக்ஸ், சிங்கம்புலி பூர்ணிமா ரவி, மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டைரக்டர் :-
பாண்டிராஜ்.

மியூசிக்:-
ஃபாக்ஸன்.

ஒளிப்பதிவு:-
ஜார்ஜ்.சி.
வில்லியம்ஸ்.

படத்தொகுப்பு:-
பிரதீப் ஈ.ராகவ்.

தயாரிப்பாளர்கள்:-
லைக்கா புரொடக்ஷன்
சுபாஸ்கரன்
தமிழ் க்குமரன்.

அப்பாவாக ஜெயராம், அம்மாவாக ஊர்வசி, நடித்துள்ளனர் இவர்கள் அடிக்கடி

சண்டை போட்டுக் கொள்ளுவது‌ மீடில்கிளாஸ் ஃபேமிலி வழக்கம் அவர்களது இரண்டு

மகள்கள், அளவான குடும்பம் மற்றும் நிம்மதியாக வாழும் நடுத்தர குடும்பம்.

இதற்கிடையே, ஜெயராமின் மகளுக்கு ரவுடி

சாண்டி காதல் செய்யச்சொல்லி தொல்லை கொடுக்கிறார். அவர்

தொல்லை நாளுக்கு நாள் அதிகரிக்க, அவரது தாதா அம்மாவும் மகனது காதலுக்கு ஆதரவாக

ஜெயராம் குடும்பத்தை அவ்வபோது மிரட்ட செய்கிறார். இந்த தொல்லையில்

இருந்து விடுபட, ரவுடி சாண்டியை கொலை செய்து

விடலாமா ? என்று குடும்பத்தினர் ஆலோசிக்கின்றனர்.

இதற்கிடையே, சாண்டி கொலை செய்யப்படுகிறார். எப்படி ‌என்பதை கொலை வழக்கை

விசாரிக்கும் காவல்துறை அதிகாரி மிஷ்கினுக்கு,

ஜெயராம் குடும்பத்தின் மீது சந்தேகம் ஏற்படுகின்றனர்.

அவர் தன் விசாரணையை தொடங்க, ஜெயராம்

குடும்பத்தினரே ஒருவரை ஒருவர் சந்தேகப்படவும் செய்கிறார்கள்.

பிறகு ஜெயராமின் சகோதரரும், ஊர்வசியின் சகோதரரும் பக்ஸ், சிங்கம்புலி, வருகிறார்கள்.

அவர்கள் மீதும் சந்தேகம் ஏற்படுகின்றனர்.

சாண்டியை கொலை செய்தது யார் ? எதற்காக ? என்பதை காமெடியாகவும்,

கொஞ்சம் கருத்துடன் சொல்வது தான் “பரிமளா அண்ட் கோ” திரைப்பட கதைக்களம்.

ஜெயராம் – ஊர்வசி ஜோடியின் இயல்பான நடிப்பில், அவர்கள் அடிக்கடி அடிக்கும் டைமிங் காமெடி

வசனங்கள் சிரிப்பால் திரையரங்கை அதிர வைக்கின்றது. அதே சமயம், சில

இடங்களில் சில காமெடி வசனங்களுக்காக சில நிமிடங்கள் பேசிக்கொண்டே

இருப்பது கொஞ்சம் கூட போரடிக்காமல் போகின்றன.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். இயக்குநர் மிஷ்கின், தனது தனித்துவமான

நடிப்பின் மூலம் மிரட்டியிருக்கிறார். ஆரம்பத்தில் சாதாரணமாக வரும்

இவரது கதாபாத்திரம் கிளைமாக்ஸ் நெருக்கத்தில் எதிர்பார்க்காத

திருப்பம் மூலம் பார்வையாளர்களை திகைக்கவும் மிரள வைக்கின்றன.

இதுல சாண்டி புதிய கதாபாத்திரத்தில் நடிப்பில் மிளிர வைக்கிறார்.இவர்

நடன இயக்குநர் என்ற முகத்தை தவிர நடிப்பை வேறு படுத்தி வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார்.

அக்கா, தங்கையாக நடித்திருக்கிறார்கள் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, மற்றும் அனந்திகா சனில்குமார், ஆகியோரது குறும்புத்தனமான

நடிப்பில் நடுத்தர குடும்ப இளம் பெண்களை பிரதிபலித்திருக்
கிறது.

ஜி.கே.எம்.தமிழ்
குமரன், யோகி பாபு, பூர்ணிமா ரவி என அனைத்து நடிகர்களும்

கதாபாத்திரங்களுக்கு பொறுத்தமான சரியான

தேர்வாக பயணித்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார்கள்

ஜார்ஜ் சி.வில்லியம்ஸின் ஒளிப்பதிவில்

காட்சிகள் கண்களை கவரும் விதத்தில் மிளிர்வைக்கிறது

ஃபாக்ஸன் இசையில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்கும்

அளவில் துள்ளும்படி கேட்கும் ரகம். பின்னணி இசையும்

படத்திற்கு பெரிய பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்
கின்றன.

படத்தொகுப்பாளர் பிரதீப் இ.ராகவ் மற்றும் கலை

இயக்குநர் டி.ராமலிங்கம் ஆகியோரது பணி படத்திற்கு பெரிய பலம் சேர்த்திருக்கின்றன.

பெண்களுக்கு எதிராக நடக்கும் ஒரு பிரச்சனையை கையில் எடுத்திருக்கின்றன.

இயக்குநர் பாண்டிராஜ், அதை சோகமாக

சொல்லாமல் நகைச்சுவையாக சொல்ல முயற்சித்திருக்
கிறார். அவரது

முயற்சி சில இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும்,

பல இடங்களில் நகைச்சுவை என்ற பெயரில்
பார்வையாளர்களை யோசிக்க செய்கின்றன.

திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை,

திரையின் அளவை விட அதிகமான கதாபாத்திரங்கள் என்று படம்

பயணிப்பதுடன், ஒரு கட்டத்தில் படக்கதை பலவகையில் மாறிவிடுகின்றன. அதிகமான கிளைக்கதைகள்,

அவற்றின் மூலம் பார்வையாளர்களை சிரிக்க

வைப்பதற்கான காட்சிகள் மற்றும் வசனங்கள்

எற்படாமல் போகிறது, கதையை வெவ்வேறு பாதையில்

பயணிக்க வைக்க முடியாத படம் மாதிரி போய் விடுகிறது.

யோகிபாபு சில காமெடி வழக்கம் போல காட்சிகள் ஆறுதல் அளிப்பது போல், கிளைமாக்ஸ்

நெருக்கத்தில் இயக்குநர் பாண்டிராஜ்,

இளைஞர்களுக்கு அறிவுரை ஒன்றை அழுத்தமாக சொல்லி படத்தை காப்பாற்றி

விடுபடுவதுடன், குடும்பமாக பார்க்க கூடிய நகைச்சுவை மற்றும் தகவல்

சொல்லுகிற படமாக மக்களிடம் கடத்தி சொல்லுகிறார்.

படம் பார்த்தத்தில், “பரிமளா அண்ட் கோ”
கொஞ்சம் சிரிப்பு,

சஸ்பென்ஸ், திகில்‌‌, திரில்லர், நிறைந்த ‌திரைப்படம் குடும்பத்தில்

அனைவரும் திரையரங்குகளில் பார்க்க வேண்டிய திரைப்படம்…

சேர்ந்து பார்க்க வேண்டிய பொழுதுபோக்கு திரைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *