
மூக்குத்தி அம்மன் – 2 என்னும் திரைப்படத்தின் திரைவிமர்சனம் :-
்்்்்்்்்்்்்்்்்்்்்
பக்திப்படம் , சரித்திரப் படம் என்றும் எந்தக் காலக் கட்டத்திலும் மக்கள் மனத்தில் நிலைத்து நிற்கும். அந்த வகையில் ஒரு பக்திப் படத்தின் சிறப்பினை விமர்சனம் மூலம் பகிர்ந்து கொள்ளலாமே !
முதல் பாதி விறுவிறுப்பாகவும் அதே சமயத்தில் சுறுசுறுப்பாகவும் , மெய் சிலிர்க்கும் வண்ணம் காட்சிமைப் படுத்தியிருப்பதும் , கதாபாத்திரங்கள் காட்சிகளுக்கு ஏற்ற வகையில் அமைத்து அதற்கேற்ற நடிகர், நடிகைகளை தெரிவு செய்து உயர்த்திக் காட்டியிருப்பது மிக சிறப்பு.
இரண்டாம் பாதியில் வரும் பின்னணிக் கதை அதாவது உட் கதை சிறப்பாகவும் , மிக சுவாரசியமாகவும் உள்ளது.
திரை நட்சத்திரங்கள் :-
்்்்்்்்்்்்்்்்்்்்்
நயன்தாரா :-
்்்்்்்்்்்்்்
அம்மன் வேடத்தில் நயன்தாரா நடித்திருக்கிறார். இவர் அம்மன் வேடத்திற்கு மிகவும் பொருத்தமானவர். இவர் அசத்தலாகவும் அதே சமயம் சிறப்பாகவும் நடித்து இருக்கிறார். முதல் பாதியில் இவர் வரும் பல காட்சிகள் அவருக்கே உரித்தான அந்தக் கதாநாயகின் அந்தஸ்த்து இந்தத் திரைப்படத்திலும் கொடுக்கப்பட்டு கொடுத்த வேடத்தை ஏற்று மிக சிறப்பாக நடித்து இருக்கிறார்.இதில் ஒரு கம்பீரம் தெரிகிறது. அம்மனை நேரில் பார்த்ததைப் போன்ற ஓர் உணர்வு பார்த்தவருக்களுக்கு கண்டிப்பாகத் தோன்றும்.
திரை நட்சத்திரங்கள் :-
்்்்்்்்்்்்்்்்்்்்்
நயன்தாரா :-
்்்்்்்்்்்்்்
அம்மன் வேடத்தில் நயன்தாரா நடித்திருக்கிறார். இவர் அம்மன் வேடத்திற்கு மிகவும் பொருத்தமானவர். இவர் அசத்தலாகவும் அதே சமயம் சிறப்பாகவும் நடித்து இருக்கிறார். முதல் பாதியில் இவர் வரும் பல காட்சிகள் அவருக்கே உரித்தான அந்தக் கதாநாயகின் அந்தஸ்த்து இந்தத் திரைப்படத்திலும் கொடுக்கப்பட்டு கொடுத்த வேடத்தை ஏற்று மிக சிறப்பாக நடித்து இருக்கிறார்.இதில் ஒரு கம்பீரம் தெரிகிறது. அம்மனை நேரில் பார்த்ததைப் போன்ற ஓர் உணர்வு பார்த்தவருக்களுக்கு கண்டிப்பாகத் தோன்றும்.
துணை நட்சத்திரங்கள் :-
்்்்்்்்்்்்்்்்
ரெஜினா கசான்ட்ரா :- பைரவாக நடித்துள்ள இவர் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து மிக நேர்த்தியாக நடித்து பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் நடித்து இந்தப் படத்திற்கு பெருமையை சேர்த்து இருக்கிறார். இவரை நாம் பாராட்டுவோம்
தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
்்்்்்்்்்்்்்.
இசை :- ஹிப்பாப் தமிழா :-
்்்்்்்்்்்்்்்்்்்
இசைக்கு மயங்காத உயிர் இனங்களும் உண்டோ ? பக்திக்கு மயங்காத ஆன்மீக வாதிகள் உண்டோ ? அந்த வகையில் இந்தப் பக்திப்படத்திற்கு இசையமைத்து மெட்டுக்கு ஏற்ற பாடல்களை கேட்டு வாங்கி அதனைத் திரையில் கொண்டு சேர்த்து இருப்பது மிக அருமை. ஒரு படத்திற்கு பின்னணி இசை மிக முக்கியம் . பக்திப் படம் என்றால் அதைவிட முக்கியம். இவருடைய இசை இந்தப் படத்திற்கு மிக பெரிய பலம். நயன்தாராவின் கதாபாத்திரத்திற்கு உயிர் ஊட்டும் விதமாக அமைந்துள்ளது இவரின் பின்னணி இசை. இதுவரை யாரும் எதிர்பார்க்காத விதத்தில் மிக சிறப்பாக அமைந்துள்ளது இவரது இசை. இவரது இசை இந்தப் படத்திற்கு ஒரு தனித்துவமான மெருகை ஏற்றி படத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்பது பாராட்டுக்குரியது. நாமும் இவரைப் பாராட்டுவோம்.
இயக்குநர் :- சுந்தர் .சி
்்்்்்்்்்்்்்்்்்்்்
இவர் இந்தப் படத்தின் இயக்குநர். மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்பவர். நல்லதொரு கதையை தெரிவு செய்து அதனை திரைக்கு கொண்டு சேர்த்திருப்பது இவரது வாடிக்கை. அதைக் குறையில்லாமல் செய்திருக்கிறார். நயன்தாரா , துனியா விஜய் , ரெஜினா கசாண்ட்ரா , ஊர்வசி , யோகி பாபு , மைனா நந்தினி , கருடா ராம் , அபிநயா , ஸ்ருதி , எஸ்.சிங்கம்புலி அண்ணாவி , வி.ஆர். சுவாமிநாதன் , சிவகுமார் எஸ்.சுனில்வர்மா , இந்துகுரி , வர்ஷினி வெங்கட் , பாலா கருப்பையா ,ஆனந்தா சதிலி சாத்யலட்சுமி என நடிப்புப் பட்டாளத்தையே இறக்கி வேலைக் கொடுத்து இருக்கிறார்.
தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
இயக்கம் :- சுந்தர்.சி
திரைக்கதை வசனம் :- வெங்கட் ராகவன்
இசை :- ஹிப்பாப் தமிழா
டாப் :- கோபி அமர்நாத்
ஒலி அமைப்பு :- உதயகுமார்
இணைதயாரிப்பு :- குஷ்பு சுந்தர் , குஷ்மிதா கணேஷ், விக்னேஷ் சிவன்
தயாரிப்பு :- டாக்டர் ஐசரி கே கணேஷ்
மூக்குத்தி அம்மன் – 2 என்னும் திரைப்படத்தின் திரைவிமர்சனம் ஆய்வு செய்ததில் எல்லோருடைய உழைப்பும் , பக்தி உணர்வும் இதில் தெரிகின்றன. பக்தர்களுக்கும் , ஆன்மீக வாதிகளுக்கும் மிகவும் பிடிக்கும். படத்தைப் பாருங்கள் அவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக நின்று உதவுங்கள். எங்களின் பத்திரிகை குழு நடுநிலையாக நின்று நல்லதொரு தீர்ப்பினை வழங்கி மகிழ்ச்சி அடைகிறது. மீண்டும் இன்னொரு திரைவிமர்சனத்தில் சந்திப்போம் . அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் தோழர் கவிஞர் வேளச்சேரி அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட் ராஜேஷ் ஓகே டேக்