சீன்திரைவிமர்சனம் :-

Share the post

சீன் என்னும் திரைப்படத்தின் திரைவிமர்சனம் :-
்்்்்்்்்்்்்்்்்்்்

கதைக் கரு :-
்்்்்்்்்்்்்்்்்்்்
கிரைம் கில்லருக்கும் உயர் போலீஸ் அதிகாரிக்கும் இடையில் நடக்கும் யுத்தம் தான் இந்தப் படத்தின் மையக் கரு.

கதையும் கதையின் போக்கும் :-
்்்்்்்்்்்்்்்்்்்்்
இந்தப் படத்தில் வரும் உயர் போலீஸ் அதிகாரிதான் இந்தப் படத்தின் கதாநாயகன். இவரிடம் எந்தக் கேஸைக் கொடுத்தாலும் மிக நேர்த்தியாக அந்தக் கேஸை ஒரு முடிவுக்கு கொண்டு வருவார் .அப்பேற்பட்ட திறமைசாலி . அதுமட்டுமல்ல அதி புத்திசாலி. இருந்தாலும் அந்தத் துறையில் தொடர்ந்து வேலை செய்ய விருப்பம் இல்லாமல் அடிக்கடி உயர் அதிகாரிக்கு தன்னுடைய ராஜினாமாக் கடிதத்தைக் கொடுப்பார். அவர்களும் அதனை வாங்காமல் நிராகரிப்பார்கள்.

அந்த ஏரியாவில் தொடர்ந்து கொலை நடக்கிறது.

படம் தொடங்கும் போதே வில்லனிடமிருந்தே தொடங்குகிறது. இந்தப் படத்தில் வரும் வில்லன் நஸ்லென் தன்னுடைய தந்தையை கொன்று விடுகிறார்.ஏன் எதற்கு எப்படி கேள்விகள் கேட்க நினைத்தால் அதற்குண்டான பதில்கள் நீங்கள் படத்தைப் பார்த்தால் தெரிந்து கொள்வீர்கள்

பல்வேறு நபர்களை பணத்திற்காக தொடர்ந்து கொலை செய்து வருகிறார். தொடர்ந்து கொலைகள் நடக்கும் போது தவறான ஓர் ஆளை உயர் போலீஸ் அதிகாரியான சூரியா கைது செய்து விடுகிறார். உண்மையான கொலையாளியைக் கண்டிப்பிடிக்க நஸ்ரியா இவருக்கு உதவியாளராக வருகிறார். இதற்கெல்லாம் காரணம் சீரியல் கில்லர் நஸ்லென் தான் எனத் தெரிய வருகிறது. ஏன் இந்தக் கொலைகளை தொடர்ந்து செய்து வருகிறார் என்ற கேள்வியோடும் நகைச்சுவையோடும் ஒரு த்ரில்லராக உருவாகியுள்ளது இந்தத் திரைப்படம்.

கிரைம் த்ரில்லர் கதையை நகைச்சுவை உணர்வோடு படத்தைக் கலகலப்பாக கொண்டு செல்லும் இயக்குநர் .சூரியாவின் கதாபாத்திரத்தை மாஸாக மட்டும் காட்டாமல் காமிக்கலாக காட்டியிருப்பது புதிய உத்தி தான். நகைச்சுவை உணர்வோடு த்ரில்லர் கதையை நகர்த்தி செல்கிறார் இப் படத்தின் இயக்குநர்.

திரை நட்சத்திரங்கள் :-
சூரியா :- கதாநாயகன்
்்்்்்்்்்்்்்்்்்்்்்

இவர் உயர் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இரண்டு போலீஸ்காரர்கள் இவரைக் கண்காணிக்க உயர் அதிகாரி உத்தரவு இடுகிறார். அதன்படி மறைமுகமாக கண்காணிக்கின்றனர்

இவருக்கு கண் பார்வையில்லை.நஸ்ரியா நஸிம்மின் உதவியால் கொலைக் காரர்களை கண்டு பிடிக்கிறார்.

நஸ்ரியா நஸின் :- இந்தப் படத்தின் கதாநாயகி. இவருக்கு ஞாபக மறதி ஏற்படுகிறது. சூரியாவுக்கு கண்ணாக இருந்து செயல் படுகிறார். இவரை 10 ரவுடிகள் தாக்க வரும்போது அவர்களை சமாளிக்கின்றார் இருப்பினும் வில்லனிடம் மாட்டிக் கொள்கிறார். அவர் வாயைத் திறக்காத அளவிற்கு கட்டிப் போட்டு வாயில் பிளாஸ்டிக்கை ஒட்டி விடுகிறார்.

வில்லனாக வருபவர் :- நஸ்லென் :- இவர் ஒரு சைக்கோ கில்லர். தொடர்ந்து கொலை செய்யும் ஒரு கொலையாளி. இந்தச் சைக்கோ கில்லர் கொலையாளியை யாரும் அவ்வளவு எளிதில் கண்டு பிடிக்க முடியாது.

தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
இயக்குநர் :- ஜீத்து மாதவன் :-
்்்்்்்்்்்்்்்்.்்
தரமான கதை ஒன்றை தேர்ந்தெடுத்து நகைச்சுவை மற்றும் திரில்லர் கதையோடு கதையை நகர்த்தி இருக்கிறார். ராஜ்பிரியன் வரும் நகைச்சுவை காட்சிகளை மிக இலாவகமாக கையாண்டு இருக்கின்றார். மற்ற நடிகர் நடிகைகளை நடிக்க வைத்திருக்கின்றார்.

படத்தில் உள்ள நிறையும் குறையும் :-
்்்்்்்்்்்்்்்்்்்்்
புதுமை என்ற பெயரில் கதையை தேர்ந்தெடுத்து தொடர்ந்து கொலை நடப்பதைக் காட்டுவது ஜீரணிக்க முடியவில்லை. ஒரு கொலை நடந்தாலே தோண்டி துருவி அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து பின்னி எடுக்கும் போது தொடர்ந்து கொலை நடப்பதை காவல் துறை நின்று வேடிக்கை பார்க்கிறதா என்று கேட்கத் தோன்றுகிறது.

கதாநாயகனுக்கு பார்வையில்லை ஆனால் உயர் காவல் அதிகாரி . இவர் கதாநாயகியின் உதவியால் கொலையாளியைக் கண்டு பிடிக்கிறார். அது எப்படி ? உடலில் குறை இருந்தாலே காவல் துறையில் சேர்த்துக் கொள்ள மாட்டார்களே ? கதாநாயகிக்கு வலிப்பு நோய். கதாநாயகனின் அப்பாவுக்கு ஞாபக மறதி , கதாயகனின் அம்மா எப்போதும் மது பாட்டில் கையும் தான். பெண்களையே இழிவு படுத்துவது போல் உள்ளது. ஆயிரம் காரணம் காட்டலாம்.உலகத்தை ஒருமுறை விழிகளால் விழித்துப் பாருங்கள் கசப்பான உண்மைகள் தெரிய வரும் . அதனை இலாவகமாக கையாண்டு குறைகளை போக்கி நிறைவகளை மெருக்கேற்றி சமூகத்திற்கு நல்லதை மட்டும் செய்யுங்கள்.

கதாநாயகன் ஆபத்தில் இருப்பது தெரியும் . தன்னைக் காப்பாற்றிக் கொள்ள துப்பாக்கியை கையில் வைத்திருக்காமல் மீட்டர் பெட்டிப் போன்ற பெட்டி அதற்கு ஒரு ரகசியெண். இதனை நினைவில் வைத்து பெட்டியைத் திறந்து அதில் உள்ள துப்பாக்கியை எடுத்து சுடுவதற்குள் எதிராளி இவரை போட்டுத் தள்ளமாட்டானா ? பிறமொழிப்படத்தில் இருந்து முக்கிய நிகழ்வுகளை கையில் எடுத்து அதற்கு தங்க முலாம் பூசுவதை விடுத்து, சுயமாக சிந்தித்து கதை எழுதி அதைப் படமாக்குங்கள்.

சீன் என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் ஆய்ந்த போது பணத்தை தண்ணீராக செலவழிப்பது பெரிதல்ல புதுமை என்ற பெயரில் ஏதோ ஒன்றை படமாக்குவதை விட்டுவிட்டு நல்ல கதையை மக்களுக்கு கொடுங்கள். எங்களின் பத்திரிகை குழு நடு நிலையாக நின்று தீர்ப்பை சொல்லியிருக்கிறது. அடுத்த திரைவிமர்சனத்தில் சந்திப்போம். கவிஞர் வேளச்சேரி அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட் ,ராஜேஷ் ஓகே டேக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *