“மம்மட்டியான் ஸ்டார்ஸ்”இணையத் தொடர் விமர்சனம்… (ஜி-5- OTT தளத்தில்.)

Share the post

“மம்மட்டியான் ஸ்டார்ஸ்”
இணையத் தொடர் விமர்சனம்… ஜி-5- OTT தளத்தில்.

நடித்தவர்கள் :-
வைபவ் முருகேசன், லவாண்யா

அன்பழகன்,
வெங்கட் பாலமுரளி,
ஜகபர் சாதிக்‌ நான்

கடவுள் ராஜேந்திரன், விவேக் பிரசன்னா, சம்பத் ராம், சரத்ரவி, ஹலோ கந்தசாமி,

டைரக்டர்:-
சவர்சுதாகர்,
நவீன் ராஜ்குமார், கலைச்செல்வன்,
வினு கார்த்திகேயன்.

மியூசிக்:-
பரத் தனசேகர்.

ஒளிப்பதிவு:-
பி.எம்.ராஜ்குமார்.

கலை இயக்குனர்:-
பி.தமிழ்செல்வன்.
தயாரிப்பாளர்:-
சிங்காரவேலன்.

வைபவ் முருகேசன், வெங்கட பாலமுரளி மற்றும் ஜகபர் சாதிக் மூன்று பேரும்

நண்பர்கள் மட்டும் இல்லாமல், இந்திய நட்சத்திர கிரிக்கெட்
வீரர்.எம்.எஸ்.டோனி

யின் தீவிர
ரசிகர்களாகவும் இருக்கிறார்கள்.

இவர்கள் மூன்று பேரும் கேப்டனாக இருந்துக் கொண்டு

“மம்மட்டியான் ஸ்டார்ஸ்,”
என்ற கிரிக்கெட் அணியை

வழி நடத்துடன், பல்வேறு போட்டிகளில்

கலந்துக் கொண்டு விளையாடி வருகிறார்கள்.

அந்த தங்களது கிராமத்தில் நடத்தப்படகிற கிரிக்கெட் போட்டியில் இவர்களது அணி

பங்கேற்று விளையாடி வரும் நிலையில், கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனியின்

விளையாடும் கடைசி கிரிக்கெட் போட்டியை நேரில்

பார்க்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள்.

கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் வெற்றி

பெற்று பரிசுத் தொகை ரூ.50 ஆயிரத்தை வென்று,

அதன் மூலம் சென்னையில் நடக்கிற கிரிக்கெட் போட்டியை

பார்க்கலாம் என்று திட்டம் போடுகிறார் கள், அதனால் ஊர் தலைவரின் திடீர்னு

மரணத்தால் இறுதிப் போட்டி

நடந்த முடியாமல் நின்று விடுகின்றன. இதனால், ஊர் தலைவரின்

அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் கிரிக்கெட்

போட்டியின் ரன்னர் பரிசுத் தொகையை திருடி, அதை

கிரிக்கெட் போட்டிக்கான

டிக்கெட் வாங்க அனுப்பிவிடு
கிறார்கள். டிக்கெட் கிடைத்தது அந்த மகிழ்ச்சியில் மூன்று

நண்பர்களுடன் சென்னைக்கு செல்ல, அவர்களுடன்

வைபவ் முருகேசனின் காதலியான

லாவண்யா அன்பழகனுடன் செல்கிறார்கள்.

தங்களது தல விளையாடும் போட்டியை நேரில் பார்க்கப்போகிறோம்

என்ற மகிழ்ச்சியில் இருப்பவர்கள், தங்களிடம் இருக்கிற

டிக்கெட் போலி என்று தெரிந்ததும் பெரிய

அதிர்ச்சியடைகிறார்கள். இருப்பினும், எப்படியாவது தல

விளையாடுகிற போட்டியை நேரில் பார்த்துவிட்டு தான் ஊருக்கு திரும்ப

வேண்டும் என்று ஒரே முடிவு எடுக்கும் நண்பர்கள், அடுத்த

போட்டி நடப்பதற்குள் அதற்கான பணத்தை தயார் செய்யும் முயற்சியில் இறங்க,

அதனால் பல்வேறு பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார்கள்.

சமோசா விற்பனை செய்கிறார்கள்.பிறகு

சூதாட்டத்தில் விளையாட்டுகள்.
அந்த பிரச்சனைகளில் இருந்து மீண்டு, அவர்கள்

நினைத்தது போல், அவர்களது தல விளையாடும்

போட்டியை நேரில் பார்த்தார்களா ? இல்லையா ? என்பதை 6-

அத்தியாயங்களாக பதில் சொல்வது தான் ‘மம்மட்டியான் பாய்ஸ்’.

கிரிக்கெட் வீரர்களாக இருந்தாலும்கூட சரி, சினிமா

நட்சத்திரங்களாக இருந்தாலும் சரி, நட்சத்திரங்களை

கொண்டாடுகிற இளைஞர்கள் அவர்களை பின் தொடரலாம், ஆனால் அவர்கள் மீது

வெறி ப்பிடித்து அலையக்கூடாது, என்ற கருத்தை ஜாலியாக

சொல்லியிருக்கிற இந்த தொடரின் திரைக்கதை முழுக்க முழுக்க கிரிக்கெட்டை மட்டுமே

மையப்படுத்தி எழுதப்பட்டிருப்பது, கிரிக்கெட் விளையாட்டின் துள்ளியமான

தகவல்கள் மற்றும் கிரிக்கெட் போட்டியை வைத்து நடத்தப்படும்

சூதாட்டம் பற்றிய் விவரங்கள் என அனைத்தையும் மிக

தெளிவாகவும், உண்மைக்கு நெருக்கமாக சொல்லியிருக்கிறார்கள்

தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்

வைபவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், வெங்கட பாலமுரளி மற்றும் ஜகபர் சாதிக் ஆகியோர் உண்மையான

நண்பர்கள் போல தொடர் முழுவதும் வலம் வருகிறார்கள். உடல் மொழி, உரையாடல்கள்,

கோபம், சண்டை ஆகியவற்றை மூன்று நண்பர்களும் இயல்பாக

எடுத்து கொண்டு, அந்த அந்த கதாபாத்திரங்களாக

பார்வையாளர்கள் மனதில் வாழ்ந்து விடுகிறார்கள்.

வைபவ் முருகேசனின் முன்னாள் காதலியாக

நடித்திருக்கிறார் லாவண்யா அன்பழகன், தற்போதைய

காலக்கட்டத்தில் பெண்கள் தங்களது விருப்பப்படி வாழ முடியாமல், தந்தை, காதலன், கணவன்

என்ற வெவ்வேறு பிம்பத்தில் இருக்கிற ஆண்களால் எப்படி

கட்டுப்படுத்தப்படு
கிறார்கள், என்பதை தனது இயல்பான

நடிப்பின் மூலம் சிறப்பாக
நடித்திருக்கிறார்கள்.

நான் கடவுள் ராஜேந்திரன், விவேக் பிரசன்னா, சம்பத் ராம், சரத் ரவி, ஹலோ கந்தசாமி

ஆகியோரின் திரை இருப்பவர்கள் திரைக்கதை

ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார் கள்.

ஒளிப்பதிவாளர் பி.எம்.ராஜ்குமார் கிராமம் மற்றும்

நகரத்தின் அழகை வித்தியாசமான கோணத்தில் மட்டும் இல்லாமல், இரண்டு

நிலப்பரப்புகளில் பயணிக்கிற கதாபாத்திரங்
களிடமும்

வேறுபாட்டை காண்பிக்கப்படுகிற

வகையில் காட்சிகளை படமாக்கியிருக்
கிறார்.

பரத் தனசேகரின் பின்னணி இசை சாதாரணமாக

பயணிக்கிற காட்சிகளை கூட அசாதாரண காட்சிகளாக மாற்றி

கவனம் ஈர்க்கின்றன. கதாபாத்திரங்கள் அடுத்தடுத்த கட்டத்திற்கு

பயணிக்கின்ற போது பின்னணி இசையிலும் வித்தியாசத்தையும்,

பல்வேறு விதமான பீஜிம்களை கொடுத்திருக்கிறார்

பரத் தனசேகர், ஒவ்வொரு அத்தியாயங்களில் ஒவ்வொரு வித்தியாசமான

இசை மூலம் ஒட்டுமொத்த தொடருக்கிற தொடருக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

அனைவரும் ஜி-5, சேனல்களில்‌ கண்டு களியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *