மொழிமாற்றம் செய்யப்பட்ட ‘கார்டியன்ஸ் ஆப் தி கேலக்சி வால்யூம் 3’ படத்தில்

Share the post

மொழிமாற்றம் செய்யப்பட்ட ‘கார்டியன்ஸ் ஆப் தி கேலக்சி வால்யூம் 3’ படத்தில்

கற்பனை கதாபாத்திரம் கமோராவிற்கு பின்னணி குரல் கொடுத்தது

சவாலாக இருந்தது: டப்பிங் கலைஞர் மோனா பிந்த்ரே

––––

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் திரையிடப்பட்டுள்ளது

நடிகர், நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுப்பது என்பதே மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும் சூழலில் ‘கார்டியன்ஸ் ஆப் தி கேலக்சி வால்யூம் 3’ என்னும் மொழிமாற்றம் செய்யப்பட்ட தமிழ் படத்தில் அதன் கற்பனை கதாபாத்திரம் கமோராவிற்கு பின்னணி குரல் கொடுத்தது மிகவும் சவாலானதாக இருந்ததாக டப்பிங் கலைஞர் மோனா பிந்த்ரே தெரிவித்துள்ளார்.

மார்வெல் ஸ்டுடியோவுடன் இணைந்து இந்த படத்தை எடுத்துள்ள டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதை அதன் ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த படத்தை ஜேம்ஸ் கன் இயக்கி உள்ளார். இது இசை, சிரிப்பு, நடனம் மற்றும் ஆக்‌ஷன் என அனைத்தின் கலவையாக வந்துள்ளது. இந்த படத்தில் நடித்துள்ள கிறிஸ் பிராட், ஸோ சல்டானா, டேவ் பாட்டிஸ்டா, கரேன் கில்லன், போம் க்ளெமென்டிஃப் ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர். வின் டீசல் க்ரூட்டாகவும், பிராட்லி கூப்பர் ராக்கெட்டாகவும் இணைந்துள்ளார்கள். இந்த படத்தை கெவின் ஃபைஜ் தயாரித்துள்ளார். இது பிரத்யேகமாக டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த படத்தை இந்திய ரசிகர்கள் தாங்கள் விரும்பிய ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பார்த்து ரசிக்கலாம்.

இதன் தமிழ் மொழி மாற்றப்படத்திற்கு டப்பிங் கலைஞர் மோனா பிந்த்ரே பின்னணி குரல் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது அனுபவத்தை கூறுகையில், மார்வெல் ஸ்டுடியோஸ் எடுத்திருக்கும் கார்டியன்ஸ் ஆப் தி கேலக்சி வால்யூம் 3 படத்தின் கமோரா கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்த அனுபவம் வேடிக்கையாகவும் கடினமாகவும் இருந்தது, அதே நேரத்தில் அதற்கு அதிக ஆற்றல் தேவைப்பட்டது. உரையாடல்களை மொழிபெயர்ப்பது எனது பொறுப்பல்ல என்றாலும், டப்பிங் செயல்முறை முழுவதும் எனக்கு வழிகாட்டவும் உதவியாகவும் இருந்த ஒரு டப்பிங் இயக்குனர் மற்றும் வசன எழுத்தாளருடன் நான் இணைந்து பணியாற்றினேன் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ஒரு டப்பிங் கலைஞராக, மற்றொரு மொழியின் உணர்ச்சிகளையும் ஓட்டத்தையும் புரிந்துகொள்வது என்பது மிகவும் சவாலானது. நாங்கள் குழுவாக பணியாற்றியதன் காரணமாக அது எனக்கு பெரிதாக தெரியவில்லை. மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த படத்தில் நான் பின்னணி குரல் கொடுத்திருப்பது என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்திருப்பதோடு, எனக்கு ஒரு பெரிய மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. மேலும் திரையில் ஒரு சூப்பர் ஹீரோவுக்கு குரல் கொடுப்பது என்பதை நான் கனவிலும்கூட நினைத்துப் பார்க்கவில்லை. டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் இப்போது ஸ்ட்ரீமிங் செய்யப்படும் இந்த கார்டியன்ஸ் ஆப் தி கேலக்சி படத்தை பார்வையாளர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

இந்தப் படத்தில் சீன் கன், சுக்வுடி இவுஜி, வில் போல்டர் மற்றும் மரியா பகலோவா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப்படத்தை ஜேம்ஸ் கன் இயக்கி உள்ளார். கெவின் ஃபைஜ் தயாரித்துள்ளார். லூயிஸ் டி எஸ்போசிடோ, விக்டோரியா அலோன்சோ, நிகோலஸ் கோர்டா, சாரா ஸ்மித் மற்றும் சைமன் ஹாட் ஆகியோர் இப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றி இருக்கின்றனர்.

மார்வல் ஸ்டூடியோ தயாரித்துள்ள கார்டியன்ஸ் ஆப் தி கேலக்சி மற்றும் கார்டியன்ஸ் ஆப் தி கேலக்சி வால்யூம் 2 மற்றும் கார்டியன்ஸ் ஆப் தி கேலக்சி 3 ஆகிய 3 படங்களும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் உள்ளன. இவை மூன்றையும் பார்வையாளர்கள் பார்த்து மகிழலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *