
“கட்டா குஸ்தி” 2. திரைப்பட விமர்சனம்…
நடித்தவர்கள் :-
விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி,
பேபி சாரா, கருணாஸ் மோக்ஷா,
யோகிபாபு ரம்யா கிருஷ்ணன், காளி வெங்கட், முனீஷ்காந்த் கருணாகரன்,ஜரா
லிசா ஆண்டனி,
கஜராஜ் . மற்றும் பலர் நடித்துள்ளனர்.
டைரக்டர்:-
செல்லா அய்யாவு.
மியூசிக்:-
ஷான் ரோல்டன்.
ஒளிப்பதிவு :-
கே.எம்.பாஸ்கரன்.
படத்தொகுப்பு:-
பரத் விக்ரமன்.
கலை இயக்குனர்:-
ஜெயசந்திரன்.
தயாரிப்பாளர்கள்:-
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்
டாக்டர். ஐசரி கே.கணேஷ்.& விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்.
ரிலீஸ் ரெட்
ஜெயன்ட் இன்பம் உதயநிதி .
முதல் பாகத்தில தொடர்ச்சியாக கதை பயணிக்கின்றது.
எனக்கு குழந்தை பிறந்ததால் இந்த
குஸ்தி போட்டியில் என்னால் தொடர்ச்சியாக இந்த விளையாட்டில்
தொடர்ந்து பங்கேற்க முடியாதே என்று கவலைப்படுகிறார். ஐஸ்வர்யா லட்சுமிக்கு,
நீ நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை, என்று மீண்டும் குஸ்தி விளையாட்டில்
உன்னால் சாதிக்க முடியும், என்ற நம்பிக்கையை ஊக்கத்தையும் மட்டும் கொடுக்காமல் அதை
செயல்படுத்தும் விதமாக, மனைவிக்காக வீட்டையும்,
குழந்தையையும் விஷ்ணு விஷால் பார்த்துக் கொள்கிறார்.
இதனால் எல்லா அனைத்துப் போட்டிகளிலும் ஐஸ்வர்யா லட்சுமி
அவர் தொடர்ந்து வெற்றி பெற்று, தனது முழு
கவனத்தையும் குஸ்தி
விளையாட்டில் முழு கவனமும் செலுத்தி தேசிய அளவிலான
போட்டிகளில் தயாராக வருகிறார். இதற்கிடையே
அவரது மகள் இதனால் சரியாக பள்ளியில் படிக்கவில்லை என்ற தகவல் தெரிய
வருகின்றன. அப்பா செல்லத்தால் எங்கே தன் மகள் சரியாக
வளராமல் போய் விடுவாள் என்ற பயத்தில், அவரை
கண்டிப்புடன் வளர்க்க தொடங்கிறார்,
தன்னுடைய மகளையும் குஸ்தி வீராங்கனையாக்கிற முயற்சியில் ஈடுபடுகிறார்.
குழந்தையின் விருப்பத்திற்கு மாறாக நடக்கிற ஐஸ்வர்யா லட்சுமிக்கும்,
விஷ்ணு விஷாலுக்கும் இருவருக்கும் இடையே சின்ன சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன.
கணவன் – மனைவி இடையிலான இந்த சின்ன கருத்து வேறுபாட்டால் எழும்புகிற
சில பிரச்சனைகள், ஐஸ்வர்யா லட்சுமியின் கனவை சிதைப்பது,
கணவரிடமிருந்து விவாகரத்து கேற்ககிற சூழ்நிலைக்கு ஏற்படுகிறது.
ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலையால் நிகழ்ந்த தவறால், கணவன் – மனைவி
இடையே ஏற்பட்டுகிற விரிசலை சரி செய்து மீண்டும் சேர்ந்து வாழ விரும்பும்
விஷ்ணு விஷால், அதற்கான முயற்சியில் வெற்றி பெற்றாரா? இல்லையா ?,
என்பதை எல்லாம் குடும்பமாக சேர்ந்து சிரித்து மகிழும்படி, மக்களின் மனதை
தொடும்படியும் சொல்வது. திரைப்படக் கதைகளம்.
“கட்டா குஸ்தி” -2’.
முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் இயல்பான கதையில்
நகைச்சுவை கலந்த காட்சிகளுக்கு குறைவு இல்லை என்பதால், அதை விட கூடுதலான
விஷயங்களை இயல்பாக சொல்லி சினிமா பார்வையாளர்களையும், அனைத்தும் தரப்பினரும்
தம்பதியினரையும் கொண்டாட
வைத்திருக்கிறார் இயக்குநர் செல்லா அய்யாவு.
நாயகனாக நடித்திருக்கிறார். விஷ்ணு விஷால், மாஸ் ஹீரோ என்ற பிம்பம் இல்லாத கதாபாத்திரமாக
இருப்பினும் மனைவியின் திறனை மதிப்பதும்
அவரது ஒவ்வொரு வெற்றிக்கும் பக்கபலமாக இருக்கிற சிறந்த
கணவராக பெண்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார். அதே சமயம், ஹீரோ
!என்ற நினைவிற்கு ஏற்றபடி சில ஆக்ஷன்
காட்சிகளின் மூலம் தானும் ஒரு ஆக்ஷன் ஹீரோ தான்
என்பதை நிரூபித்திருக்கிறார் விஜய் நடித்த படத்தின் “அப்படி போடு..போடு..” பாடலுக்கு டீச்சருடன்
போடும் ஆட்டத்தின் மூலம் திரையரங்கையே அதிர வைக்கிறார். வீட்டு பராமரிப்பது,
குழந்தை வளர்ப்பு, போன்ற வேலையை மனைவியின் முன்னேற்றத்திற்கு
உறுதுணை, நின்று ஒரு முழுமையான இல்லத்தரசன் மாதிரி யான
கதாபாத்திரத்தில் மிக கனகச்சிதமாக சிறப்பாக நடித்திருக்கிறார். விஷ்ணு விஷால்,
படம் பார்க்கிற பெண்களை, கட்டுனா இப்படி ஒருவரை கணவராக கட்ட வேண்டும், என்கிற ஏங்க வைப்பது என்பதை என்று சொல்லலாம்
ஐஸ்வர்யா லட்சுமி இந்த கதையின் மையப்புள்ளி மட்டும்
இல்லாமல், திரைக்கதையின் மிகப்பெரிய பலமாக
ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரத்தில் அதிரவைத்தியிருக்கிறார்.
இந்த படத்தில் விஷ்ணு விஷால் மிக பொறுமையாக நிதானமாக நடித்துள்ளார்.
அவருக்கு.
இந்த படத்தில் வித்தியாசமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
இந்த குஸ்தி களத்தில் எதிராளியுடன் மல்லுக்கட்டும் திறமையான
வீராங்கனையாக முரட்டுத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்
கணவரிடம் காதலையும், கூடலையும் விதத்தில் வெளிப்படுத்துகிற “சம்பவக்காரி…” பாடலில் தனது நடனத்தின்
அசைவுகளின் மூலம் தரமான சம்பவத்தை செய்திருக்கிறார்.
கணவருக்கு எதிராக போட்டியிட வேண்டிய சூழ்நிலையில் விளையாட்டு
வீராங்கனையாக இல்லாமல் மனைவியாக
அவரை புரட்டி எடுக்கிற வேண்டும் என்ற எண்ணத்தில் குஸ்தி
களத்தில் எண்ட்ரி கொடுப்பதும், ஒவ்வொரு சுற்றிலும்
அசால்டாக கடந்து செல்வதும், என்று குஸ்தி விளையாட்டு வீராங்கனையாக
மட்டும் அல்ல சிறந்த நடிகையாகவும் வெறி தனமாக மிரட்டியிருக்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி.
விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி தம்பதியின் மகளாக நடித்திருக்கிறார் .
குழந்தை சாரா, நடிப்பில் பெற்றோரையே மிஞ்சும் அளவுக்கு மிக பெரிய மார்க்
வாங்கியிருக்கிறார். அம்மவுக்கு இணையாக நேர் மாறான கோபம் கொள்வது,
அப்பாவுடன் சேர்ந்து ஆட்டம் போடுவதும், நீதிமன்றத்தில்
நீதிபதியிடம் காரசாரமாக பேசுவது தனது குறையை முறையிடுவதும்
என்ற நடிப்பிலும், வசன உச்சரிப்பிலும் அவர் வெளிப்படுத்தும்
சுட்டித்தனம் வெளுத்து வாங்கும் அனைத்தும் செம அழகு பியூட்டி. பிளாஸ் சூப்பர் கியூட்டி
முதல் பாகத்தில் தன்னையே கலாய்த்துக் கொண்டு பார்வையாளர்களுக்
கு வயிறு வலி ஏற்படும் வகையில் சிரிக்க வைத்த கருணாஸ்,
இரண்டாம் பாகத்திலும் தனது சூப்பர் நகைச்சுவை காட்சிகள் மூலம் சிரிப்பு சரவெடியை
கொளுத்தி போட்டிருக்கிறார். ஆண் பெருமை பேசிக்கொண்டிந்த அவருக்கு ஏற்பட்ட
நிலமையை, அதை அவர் வெளிக்காட்டும் விதமும், அந்த
காட்சிகள் முடிந்த பிறகும் நினைத்து நினைத்து சிரிக்க வைக்கிறார்.
மற்றொரு நாயகியாக, டீச்சர் கதாபாத்திரத்தில்
நடித்திருக்கிறார். மோக்ஷா, ‘நாட்டாமை’ டீச்சரின் பாதிப்பாக வலம் வந்தாலும்,
நாகரீகமான முறையில் தனது அளவான ஆட்டத்தின் மூலம் ரசிகர்களின் பெரும் ஈர்ப்பு கவனத்தில்
நினைக்கிறார்கள்.
அனைவரும் குடும்பத்துடன் அவசியம் திரையரங்குகளில் பார்க்க வேண்டிய திரைப்படம்.