சென்னை இராமபுரத்தை சேர்ந்த, சமூக ஆய்வாளர் டாக்டர் K.தமிழ்ச்செல்வி அவர்கள் பல துறைகளில், சமூகச் சேவைகள் செய்து வருகிறார்

Share the post

சென்னை இராமபுரத்தை சேர்ந்த, சமூக ஆய்வாளர் டாக்டர் K.தமிழ்ச்செல்வி அவர்கள் பல துறைகளில், சமூகச் சேவைகள் செய்து வருகிறார். இவர் தமிழ்நாடு பாரா டேபிள் டென்னிஸ் அமைப்பில் பிரஸிடென்ட் ஆகவும்,
மாற்று திறனாளிகளின் சிட்டிங் வாலிபால் அமைப்பில் மெடிக்கல் கவுன்சிலராகவும், பாரா சென்னை சிட்டிங் கிரிகெட்அமைப்பின் பிரஸிடென்ட் ஆகவும் திகழ்கிறார்.

   அதுமட்டுமல்லாமல்  மகளிர் காப்பகம், பேஷண்ட் கேர் சென்ட்டர், யோகா சென்ட்டர் இவைகளை திறம்பட சிறப்பாக நடத்தி வருகிறார்.

மாற்றித்திறனாளி வீர ராகிய ஶ்ரீராம்
ஸ்ரிநிவாஸ் அவர்கள் தேசிய அளவில் பங்குபெற எந்த துறையும் முன்வராத நிலையில், டாக்டர் K.தமிழ்ச்செல்வி அவர்கள், பிஜேபி தலைவர் திரு. K.அண்ணாமலை அவர்களின் உதவியுடன், இந்த வீரர் தேசிய அளவில் பங்கு பெற முயற்சி எடுத்து, வெற்றியும் பெற்றுள்ளார். தமிழ்நாடு பாரா டேபிள் டென்னிஸ் வீரர்கள், மாநிலம் மற்றும் தேசிய அளவில் தங்கம், வெள்ளி, பித்தளை பதக்கங்களை வெல்வதற்கு முக்கிய பங்கு வகித்தவர் இவர் ஆவார். தற்போது இந்த வீரர்கள் இருவர் காமன் வெல்த் போட்டியில் பங்கு பெற தேர்வானது குறித்து மகிழ்ச்சியுடன் உள்ளம் திறக்கிறார் டாக்டர் K.தமிழ்ச்செல்வி.

    தமிழ்நாடு பாராஅமைப்பினைச் சேர்ந்த மாற்று திறனாளி வீரர்களின் சிட்டிங் கிரிக்கெட்டி விளையாட்டிற்கு  இதுவரை அங்கிகாரம் கிடைக்காத சூழ்நிலையில், இந்த வருட 75வது சுதந்திர தினத்தன்று, இராம்புரத்தில்  மாற்று திறனாளிகளின் அணிவகுப்புடன் சுதந்திர தினத்தை கொண்டாடியதோடு,  சிட்டிங் கிரிக்கெட்  விளையாட்டினையும் மகிழ்ச்சியுடன் துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வு பார்ப்போர் அனைவரையும் வியக்க வைத்தது.
இது போன்று பல சமூகச் சேவைகளை செய்து வரும்
டாக்டர் K. தமிழ்ச்செல்வி அவர்களது பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்தி வணங்குவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *