நிக்கலோடியோன் உடன் இணைந்து கலர்ஸ் தமிழ் அறிமுகப்படுத்தும் ‘நிக் நேரம்’ குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி கலர்ஸ் தமிழில் ஆரம்பம்

நிக்கலோடியோன் உடன் இணைந்து கலர்ஸ் தமிழ் அறிமுகப்படுத்தும் ‘நிக் நேரம்’ குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி கலர்ஸ்  தமிழில் ஆரம்பம் ~2022 ஜனவரி 24-ம் தேதியில் இருந்து திங்கள் முதல் வெள்ளி வரை “கோல்மால் ஜுனியர்” மாலை 5.00 மணிக்கும் மற்றும் “ருத்ரா: பூம் சிக் சிக் பூம்”, மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ~ சென்னை, 27 ஜனவரி, 2022: வகுப்புகளை முடித்தபிறகு தங்களுக்கு பிடித்தமான நிக்டூன்ஸ் – ஐ பார்ப்பதற்காக அதை டியூன் செய்வதில் தான் குழந்தைகளுக்கான மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் அதிவேகமாக வளர்ந்து வரும் கலர்ஸ் தமிழ், நிக்கலோடியோன் குழுமத்திலிருந்து குழந்தைகளுக்கான ஒரு சிறப்பு பகுதியை ‘நிக் நேரம்’ என்று ஒளிபரப்புவதன் மூலம் இளம் ரசிகர்களை வசீகரிக்க தயாராக இருக்கிறது.  இந்த சிறப்பு செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக 2022 ஜனவரி 24 – ம் தேதி முதல், ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை கோல்மால் ஜுனியர் மற்றும் ருத்ரா: பூம் சிக் சிக் பூம் என்ற இரண்டு புத்தம் புதிய அனிமேஷன் தொடர்களை மாலை 5.00 மணி மற்றும் 5.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் ஒளிபரப்பும்.   உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் நிகழ்ச்சிகளின் வழியாக இன்னும் ஆழமான நல்லுறவை நிலைநாட்டும் ஒரு செயல்முயற்சியாக நிக்கலோடியோன் ஃபிரான்சைஸ், கலர்ஸ் தமிழின் ஒத்துழைப்போடு மக்கள் விரும்பி பார்க்கின்ற அவர்களது மொழியிலேயே நிகழ்ச்சிகளை வழங்கவிருக்கிறது.  பிரபல பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டியின் படைப்பாக்கமான கோல்மால் ஜுனியர், அவரது சொந்த நகைச்சுவை திரைப்படத் தொடரான ‘கோல்மால்’ என்பதிலிருந்து உத்வேகம் பெற்று உருவாக்கப்பட்டிருக்கிறது.  சன் சிட்டி மற்றும் கால் சிட்டி என்ற கற்பனையில் படைக்கப்பட்ட மேஜிக் நகரங்களை பின்புலமாக கொண்ட ருத்ரா: பூம் சிக் சிக் பூம் என்ற தொடர் தனது அமானுஷ்யமான சக்திகளை இன்னும் கூர்மையாக்க கற்றுக்கொள்கின்ற 9 வயதான இளம் மெஜிஸியனின் கதையை சுவைபட சித்தரிக்கிறது.   கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் பிசினஸ் ஹெட் திரு. எஸ். ராஜாராமன் இப்புதிய நிகழ்ச்சிகள் பற்றி கூறியதாவது: “தற்போது ஒளிபரப்பப்படும் எமது சமீபத்திய நிகழ்ச்சிகளின் சிறப்பான வெற்றிக்குப் பிறகு இரு அனிமேஷன் தொடர்களை நம் கலர்ஸ் தமிழ் தொகுப்பில் அறிமுகம் செய்வதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்.  எங்களது தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று பிரபலமாக இருந்து வரும் நிலையில், குழந்தைகள் மற்றும் சிறார்களின் அபிமான தொலைக்காட்சியாக எங்களை நிலைநிறுத்திக்கொள்ள ‘நிக் நேரம்’ எங்களுக்கு உதவும் என்று நாங்கள் இப்போது உறுதியாக நம்புகிறோம்.…

பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் பிற்பகல்12:00 மணிக்கு ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சி “பாரம்பரிய சமையல்” .

“பாரம்பரிய சமையல்” பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் பிற்பகல்12:00 மணிக்கு ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சி “பாரம்பரிய சமையல்” . தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் மதுரை சமையல், கொங்கு நாட்டு சமையல்,…

சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘லென்ஸ் நியூஸ் 360’

‘லென்ஸ் நியூஸ் 360′ சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘லென்ஸ் நியூஸ் 360′  நிகழ்ச்சியில், ஒவ்வொரு நாளும் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை வெரும் செய்திகளாகவே…

ஜெயா மேக்ஸ் டிவியில் “மேக்ஸ் மெர்சல்”

ஜெயா மேக்ஸ் டிவியில் “மேக்ஸ் மெர்சல்” ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சியில் அனைத்து தரப்பு இசை ரசிகர்களையும் மகிழ்விக்கும் வண்ணம் திங்கள் முதல் வெள்ளி வரை…

ஜெயா டிவியின் குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சிகள்

      ஜெயா டிவியின் குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சிகள் ஜெயா தொலைக்காட்சியில் குடியரசு (26-1-22) தினத்தன்று ஒளிபரப்பாகும் சிறப்பு நிகழ்ச்சிகள்.…

பெப்பர்ஸ் தொலைக்காட்சியின் பொங்கல் கொண்டாட்டம்

பெப்பர்ஸ் தொலைக்காட்சியின்  பொங்கல் கொண்டாட்டம் பெப்பர்ஸ் டிவியில் பொங்கலன்று காலை 8:30 மணிக்கு பிரபல ஜோதிடர் பண்டிட். காழியூர் நாராயணன் கொண்டாடும் ‘உழவர் திருநாள்’ .…

டான்ஸ் Vs டான்ஸ் சீசன் 2-ன் மாபெரும் இறுதிப்போட்டியில் வெற்றிவாகை சூடிய மனோஜ் – அம்ரிதா ஜோடி

டான்ஸ் Vs டான்ஸ் சீசன் 2-ன் மாபெரும் இறுதிப்போட்டியில் வெற்றிவாகை சூடிய மனோஜ் – அம்ரிதா ஜோடி ~ தங்க கோப்பையுடன்…

ஜெயா டிவியின் பொங்கல் மற்றும் மாட்டு பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் (14-01-22 – 15-01-2022)

பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் (14-01-22) ஜெயா டிவியில் ஜனவரி 14 வெள்ளிக்கிழமை காலை 6:00 மணிக்கு ‘மங்கல இசையுடன்’ பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் தொடங்குகிறது . காலை…

கலைஞர் தொலைக்காட்சியின் பொங்கல் திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள்

கலைஞர் தொலைக்காட்சியின் பொங்கல் திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள் பொங்கல் திருநாளை முன்னிட்டு கலைஞர் தொலைக்காட்சியில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் புத்தம் புதிய அதிரடி திரைப்படங்கள் ஒளிபரப்பாக…

கலர்ஸ் தமிழ் அதன் வள்ளி திருமணம் எனும் புதிய தொடருக்கு ஒரு புதுமையான வெளிப்புற விளம்பரப் பிரச்சாரத்தை துவங்கியது

கலர்ஸ் தமிழ் அதன் வள்ளி திருமணம் எனும் புதிய தொடருக்கு ஒரு புதுமையான வெளிப்புற விளம்பரப் பிரச்சாரத்தை துவங்கியது சென்னை, 7 ஜனவரி 2022: தமிழ்நாட்டின் வேகமாக…