கலர்ஸ் தமிழ் அதன் வள்ளி திருமணம் எனும் புதிய தொடருக்கு ஒரு புதுமையான வெளிப்புற விளம்பரப் பிரச்சாரத்தை துவங்கியது

Share the post

கலர்ஸ் தமிழ் அதன் வள்ளி திருமணம் எனும் புதிய தொடருக்கு ஒரு புதுமையான வெளிப்புற விளம்பரப் பிரச்சாரத்தை துவங்கியது

சென்னை, 7 ஜனவரி 2022: தமிழ்நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் பொது பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ், அதன் புதிய நெடுந்தொடரான வள்ளி திருமணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் ‘புதுமையான அவுட் ஆஃப் ஹோம்’ (OOH) ‘-எனும்வெளிப்புற விளம்பரப் பிரச்சாரத்தைத் துவங்கி இருக்கிறது., “காதல் பொம்மலாட்டம் ஆரம்பம்” என்ற தலைப்பிலான பிரச்சாரத்தில், கதாநாயகி வள்ளி (நக்ஷத்ரா நடித்தது) நாயகன் கார்த்திக்கை(ஷ்யாம் நடித்தது) தன்வசப்படுத்த முயற்சிப்பதை – பொம்மலாட்ட கலையின் மூலம் கயிறுகளை பிடித்திருப்பது போல் அமைத்து, புதுமையான விளம்பரப் பிரச்சாரத்தை துவங்கியிருக்கிறது.. இந்த விளம்பரப் பிரச்சாரம் சென்னையின் முக்கிய இடங்களான ஈகா தியேட்டர் அருகில் இருக்கும் சேத்துப்பட்டு மேம்பாலம், மற்றும் காசி தியேட்டர் அருகிலுள்ள ஈக்காட்டுத்தாங்கல் மேம்பாலம் ஆகிய இடங்களில் மோட்டார் சார்ந்த நகரும் வெளிப்புற விளம்பரபலகைகளை மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில்அமைக்கப்பட்டு இருக்கிறது. இவை பேசும் பொருளாக ட்ரெண்ட்ஆகி வருகிறது. அது மட்டுமன்றி, அண்ணா சாலை ஜெமினி மேம்பாலம் அருகில் ஒரு பிரம்மாண்ட கட் அவுட்டும் வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் முதல் முறையாக மதுரையில் உள்ள பஸ் நிலையங்களில் குரல் அடிப்படையிலான வெளிப்புற விளம்பரப்பிரச்சாரத்தையும் செயல்படுத்தி வருகிறது.

பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில்உருவாக்கப்பட்டிருக்கும் இந்த புதுமையான விளம்பரங்கள் மட்டும்இன்றி, #Vallithirumanam #ValliVeraMaari #AlapparaRani #AdakkamanaRaja என்ற ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தி இந்தச் சேனல் தனது சமூக ஊடகப் பக்கங்களில் இந்த பிரச்சாரத்தை விளம்பரப்படுத்தியுள்ளது. வள்ளி தனது கைகளில் கார்த்திக்கை ஒரு பொம்மை போல் கட்டுப்படுத்துவதைக் காட்டுவது, இரண்டு மாறுபட்ட ஆளுமைகளின் கதையை விளம்பரப்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான கருத்தாக்கம், பார்வையாளர்களை முன்கூட்டியே கவர்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த பிரச்சாரம் குறித்து பேசிய கலர்ஸ் தமிழ் வணிகத் தலைவர் திரு எஸ். ராஜாராமன், “எங்கள் வெளிப்புற விளம்பரபிரச்சாரங்களில் புதுமையைக் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் இந்தப்  பிரச்சாரத்தை பொது மக்களை கவரும் வகையில் எடுத்துச் செல்வதற்கு அபரிதமான முயற்சிகளை மேற்கொண்ட எங்கள் மார்க்கெட்டிங் குழுவிற்கே இதன் முழு பெருமையும் சேரும். வள்ளிதிருமணம் சமூகத்தில் தாக்கத்தை உருவாக்கும் புதுமையான கதைக்களங்கள் மற்றும் எழுச்சியூட்டும் கதைகளைக் காண்பிக்கும் நமது சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட மற்றொரு தொடராகும். இந்த பிரச்சாரம் எங்கள் நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தவும் சரியான பார்வையாளர்களை சென்றடையவும் உதவும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

தமிழ் தொலைக்காட்சியின் வழக்கமான கிராமப்புற கதாப்பாத்திரங்களான மிகச்சிறந்த, மென்மையான மற்றும் எளிமையான குணச்சித்திரங்களைப் போலல்லாமல், ’வள்ளி திருமணம்’ ஒரு தைரியமான, கோபமான மற்றும் அச்சமற்ற ஒரு கிராமத்து பெண்மணியின் ஒரு வித்தியாசமான பாத்திரத்தைக்  காட்டுகிறது. இந்த நிகழ்ச்சி ஒரு பெண்ணின் சுயமரியாதை உணர்வை நன்கு ஊக்குவிக்கிறது மற்றும் ஒரு குடும்பத்தில் அவர்களே முடிவுகளை எடுப்பவர்கள் என்பதைச் சித்தரிக்கிறது. அதே நேரத்தில் தமிழ் பொது பொழுதுபோக்கு சேனல்களில் (GEC) பெண்கள் பங்கேற்பதற்கான குறிப்பிடத்தக்க பகுதிகளை வெளிக்கொணர்கிறது. இந்தத் தொடரில் நக்ஷத்ரா (வள்ளி) மற்றும் ஷ்யாம் (கார்த்திக்) ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும், நடிக நடிகையர்கள் நளினி (வடிவு) நாஞ்சில் விஜயன் (குண்டுராசு) மற்றும் காயத்திரி ஜெயராம் (வசுந்தரா) ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

வள்ளி மற்றும் கார்த்திக்கின் ஒரு வித்தியாசமான கதையைக் காண திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு கலர்ஸ் தமிழைப் பாருங்கள். சன் டைரக்ட் (CH NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808), மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய சேனல்களில் கலர்ஸ் தமிழ் கிடைக்கிறது. பார்வையாளர்கள்அவர்களது வசதிக்கேற்ப எந்த நேரத்திலும் இந்நிகழ்ச்சியை காண VOOT – ஐ டியூன் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *