சினிமா நட்சத்திரங்கள் Vs டிவி நட்சத்திரங்கள்: கலர்ஸ் தமிழ் வழங்கும் மற்றுமொரு அதிரடி குதூகல நிகழ்ச்சி ~ சுவாரஸ்யமான இந்த போட்டியின் ஆனந்தத்தை அனுபவிக்க ஏப்ரல் 25 ஞாயிறன்று இரவு 7.00 மணிக்கு கலர்ஸ் தமிழ் அலைவரிசையைப் பாருங்கள் ~ சென்னை,23ஏப்ரல் 2021: கலர்ஸ் தமிழ் அலைவரிசையின், பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த ரியாலிட்டி ஷோவான கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் (CSK), ஜொலிக்கும் நட்சத்திரங்களுக்கிடையே நிகழும் மற்றுமொரு ஆர்வமூட்டும் போட்டியை தனது அடுத்த எபிசோடில் ரசிகர்களுக்கு படைக்கத் தயாராக இருக்கிறது. கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் 2021 ஏப்ரல் 25 ஞாயிறு இரவு 7.00 மணிக்கு ஒளிபரப்பாகிற எபிசோடில் நட்புறவோடு, போட்டித்திறனும் கலந்த மோதலில் திரைப்பட நட்சத்திரங்களும் மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்களும் மோதுகின்ற சுவாரஸ்யமான நிகழ்ச்சியை கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் வழங்குகிறது. விஜே. அஞ்சனா ரங்கன் மற்றும் கமல் தண்டபாணி சுவாரஸ்யமாக தொகுத்து வழங்கும் சிஎஸ்கேவின் இந்த எபிசோடு பார்வையாளர்களை உற்சாகத்தின் உச்சிக்கே எடுத்துச்செல்லும் என்பது நிச்சயம். தவறாமல் இந்த நிகழ்ச்சியை நீங்கள் பார்ப்பதற்கு இரு காரணங்களை இதோ தருகிறோம். நட்சத்திரங்கள் ஜொலிக்கும் மோதல் களம்: வார விடுமுறை நாளான ஞாயிறன்று ஒளிபரப்பாகும் சிஎஸ்கேவின் இந்த எபிசோடில் அழகான நடனங்களும், அற்புதமான செயல்திறனை வெளிப்படுத்தும் நிகழ்வுகளின் சிறப்பான சங்கமம் இடம்பெறுகிறது. உபாசனா ஆர்சி, ரிஷா ஜேக்கப், அஷ்மிதா சிங், ஷாஷ்வி பாலா, சாய் பிரியங்கா ரூத், ஹிமா பிந்து, சோபனா, தர்ஷினி கௌடா, கீர்த்தனா மற்றும் சங்கீதா என மக்கள் மனம் கவர்ந்த நட்சத்திரங்கள் இடம்பெறும் இந்த எபிசோடு பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியையும், கிளர்ச்சியையும் ஒன்றுசேர்த்து தரும் என்பது நிச்சயம். கேளிக்கைக்கும், குதூகலத்திற்கும் குறைவே இருக்காது. துடிப்பான சவால்கள் மற்றும் பரபரப்பான துணுக்குச் செய்திகள்: குதூகலம் நிறைந்த பல்வேறு கேம்கள் மற்றும் சவால்கள் என இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களை இருக்கையின் முனைக்கே கொண்டு வந்து நிறுத்தக்கூடிய நிகழ்வுகள் இந்த ஷோவில் இடம்பெறுகின்றன. அதுமட்டுமின்றி, தங்களது வாழ்க்கையில் நடந்த நகைச்சுவையான, ளேிக்கையான நிகழ்வுகளிலிருந்து ஆர்வமூட்டும் செய்திகளையும், துணுக்குகளையும் திரைப்பட நட்சத்திரங்களும், கலர்ஸ் தமிழ் நெடுந்தொடர்களின் நட்சத்திரங்களும் பகிர்ந்து கொள்வதனால் ரசிகர்கள் பெறும் மகிழ்ச்சி இன்னும் பன்மடங்காகும். இந்த குதூகலமான அனுபவத்தை தவறவிடாமல் இருப்பதற்காக ஏப்ரல் 25 ஞாயிறு இரவு 7.00 மணிக்கு கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் நிகழ்ச்சியைக் கண்டு ரசிக்க கலர்ஸ் தமிழ் அலைவரிசையை டியூன் செய்ய மறக்காதீர்கள். கலர்ஸ் தமிழ், கீழ்க்கண்ட அனைத்து முன்னணி வலையமைப்புகளிலும் மற்றும் அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கிடைக்கிறது. சன் டைரக்ட் (CH NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN…
Category: General News
சின்ன கலைவாணர் விவேக் நினைவாக திருவள்ளூர் ஆயுத படை மைதானத்தில் மாவட்ட SP. அரவிந்தன். &ரம்யா பாண்டியன் மற்ற காவலர் களும் நட்டு சிறப்புரை ஆற்றினர்..
சின்ன கலைவாணர் விவேக் மறைவைய் ஒட்டி அவர் நினைவாக 59 (விவேக் வயது ) மர கன்றுகளை திருவள்ளூர் ஆயுத படை…
மினி சினிமா நிகழ்ச்சியில் பெப்பர்ஸ் டிவி ஒளிபரப்பி கொண்டிருக்கிறது.
மினி சினிமா (தினமும் பிற்பகல் 12:30 மணிக்கு ) தமிழ் சினிமாவில் இன்று தொழில் நுட்பத்தில் உயர்ந்திருந்தாலும் திரைமொழியிலும் உள்ளடக்கத்திலும் ஏறத்தாழ அதே மாதிரியாக…
“ஃபினிக்ஸ் மனிதர்கள்”
“ஃபினிக்ஸ் மனிதர்கள்” நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் “பீனிக்ஸ் மனிதர்கள்” நிகழ்ச்சி ஞாயிறு தோறும் மாலை 5:00 மணிக்கு ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது . ஒரு இலக்கை…
கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் நிகழ்ச்சியில் திரைப்பட நட்சத்திரங்களுக்கு எதிராக கலர்ஸ் தமிழ் நட்சத்திரங்களின் மோதல்
கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் நிகழ்ச்சியில் திரைப்பட நட்சத்திரங்களுக்கு எதிராக கலர்ஸ் தமிழ் நட்சத்திரங்களின் மோதல் ~வரும் ஞாயிறு ஏப்ரல் 18 இரவு…
கலர்ஸ் தமிழின் இதயத்தை திருடாதே நிகழ்ச்சியில் தோன்றும் நகைச்சுவை நடிகர் பவா லக்ஷ்மன் மற்றும் வைசாலி தணிகா
கலர்ஸ் தமிழின் இதயத்தை திருடாதே நிகழ்ச்சியில் தோன்றும் நகைச்சுவை நடிகர் பவா லக்ஷ்மன் மற்றும் வைசாலி தணிகா ~குதூகலமான இந்நிகழ்ச்சியை கண்டு…
மறைந்த நடிகர் விவேக் மனைவி அருள்செல்வி மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்தார்
மறைந்த நடிகர் விவேக் மனைவி அருள்செல்வி மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்தார் மறைந்த நடிகர் விவேக் குடும்பத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர்,…
Mega IIT Alumni Industry Interaction Center Inaugurated
Mega IIT Alumni Industry Interaction Center Inaugurated Chennai becomes the first city to offer such state…
கலர்ஸ் தமிழில் புத்தம்புதிய நெடுந்தொடர் ‘அபி டெய்லர்’ என்பதன் முன்னோட்ட விளம்பரம் ஒளிபரப்பு
~அபி டெய்லர் நெடுந்தொடருக்கான சிறப்பான இந்த முன்னோட்ட விளம்பரம் 2021 ஏப்ரல் 11 ஞாயிறு அன்று கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் ஒளிபரப்பானது…
Empowering Tribal Women Entrepreneurs of Javadhu Hills
Empowering Tribal Women Entrepreneurs of Javadhu Hills Ensuring Sustainable Economic Growth The active participation of women…