பீப் ( Beep) திரைப்படத்தின் திரை விமர்சனம் :-

Share the post

பீப் ( Beep) திரைப்படத்தின் திரை விமர்சனம் :-

கதையின் போக்கு :-
இக் கதையின் நாயகன் ராகவ் ரங்கநாதன் எம்.பி.ஏ படித்த மாணவர். இவர் புகைப்படம் ஒன்றைப் பார்க்கிறார். எண்ணங்கள் யாவும் அந்தப் புகைப்படத்தினுள் ஊடுறுவ அதனுள் பயணிக்கின்றார். அங்கே என்ன நடந்திருக்கும் என்பதை அறிந்து கொள்ளும் அதிசய சக்தி ஒன்றைப் பெறுகின்றார். ஆன்மிகத்தின்படி ஆய்வு செய்தால் அவருக்குள் தெய்வ சக்தி இருப்பதாக அவருடைய நண்பர்கள் சொன்னாலும் அது விஞ்ஞான பூர்வமான ஓர் அபூர்வ சக்தி என்று உணருகிறார். அறிவியல் கருத்தும் ஆன்மிகக் கருத்தும் ஒத்து போகும் என்ற கொள்கைக் கொண்ட ஆத்திகவாதியும் ஒத்துப் போகாது என்ற கொள்கை கொண்ட நாத்திகவாதியும் இன்னமும் நம் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நம்புவதும் நம்பாம்பல் போவதும் அவரவர் மனநிலைப் பொறுத்தது.

நடிகை ஒருத்தி மீது தீவிர இரசிகராக இருக்கிறார் இராகவ். அந்த நடிகையை நேரில் சந்தித்து பேச முயற்சி செய்கின்றார்.

அந்த நேரத்தில் பலான தொழில் செய்யும் யாமினி லட்சுமணனின் நட்பு கிடைக்கிறது. யாமினியுடன் நட்பாக பழகுகிறார் இராகவ். அவர் மீது அதிக அக்கறைக் காட்டுகிறார்.

இந்த சூழ்நிலையில் தான் அடுக்குமாடி குடியிருப்பில் மூன்றாவது தளத்தில் இருந்து யாமினி கீழே விழுந்து இறந்து விடுகிறார். விழுந்தவர் தற்செயலாக தவறி விழுந்தாரா ? அன்றி திட்டமிட்டு தள்ளி விடப்பட்டு கீழே விழுந்தாரா ? தற்கொலையா ? அல்லது கொலையா ? தகவல் கிடைத்தவுடன் ஆதாரங்களைத் தேடுகிறது காவல் துறை. வழக்கம் போல தான் ஆதாரங்கள் கிடைக்காமல் காவல் துறை திண்டாடுகிறது.

இப் படத்தின் கதாநாயகன் இராகவ் தன்னுடைய அபூர்வ சக்தியைக் கொண்டு கொலைக்கான பின்னணி என்ன ? உண்மையான கொலையாளி யார் ? என்ற வினாக்களுக்கு விடை தேட முயற்சி செய்கிறார்.

சரியான கொலையாளி யார் ? என்ற கேள்விக்கு விடை தெரியாமல் அதில் இராகவ் தோல்வி அடைகிறார்.

விறு விறுப்பு ! சுறு சுறுப்பு ! எப்படியாவது உண்மையான கொலையாளி யார் என்பதை கண்டிப்பிடிக்க துரிதம் காட்டுகிறது காவல் துறை.

எப்படியாவது உண்மையான கொலையாளியைக் கண்டிப்பிடிக்க வேண்டும் என்ற வேகம் இராகவ்வின் உள் மனம் சொல்ல சொல்ல தீவிரம் காட்டுகிறார் இராகவ்

இறுதியில் உண்மையான கொலையாளியைக் கண்டு பிடித்தது இராகவ்வா ? காவல் துறையா ? இந்தத் தொடர் கேள்விக்கு உரிய பதில் படத்தினை நீங்களே பார்த்து முடிவை சொல்லுங்கள். அதற்காக படம் பார்க்கும் போதே முடிவை சொல்லி பக்கத்து சீட்டில் உட்கார்ந்து உள்ளவரை ஓட விடாதீர்கள்.

ஓட வைக்காதீர்கள்.

வினாக்கள் கேட்க கேட்க விடைகள் தேட தேட கிடைக்கும். கொலையாளியார் ? கொலைக்கான காரணம் என்ன ? இதற்கான அறிவியல் சார்ந்த கிரைம் திகில் சஸ்பென்ஸ் என படத்தினை சொல்ல முயற்சிப்பது தான் இந்தப் படத்தின் கதை .

திரை நட்சத்திரங்கள் :- இப்படத்தின் நாயகன் இராகவ். அதி புத்திசாலி. அறிவாளியைக் காட்டிலும் புத்திசாலிதான் மிகச் சிறந்தவர்.

அறிவியல் கூற்றுப்படி சக்தி வாய்ந்த மனிதர் என்ற கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமானவர். புலன்விசாரணை மேற் கொள்வதில் காவல் துறையையே மிஞ்சும் அளவிற்கு விசாரணை செய்கிறார். விசாரணை என்று வந்தாலே பேச்சு வளரும். கேள்விகள் பல கேட்கத் தோன்றும். அப்பொழுதான் உண்மை புலப்படும்.

பாலியல் தொழில் செய்யும் கதாபாத்திரம் சுனைனா. இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் யாமினி லட்சுமணன். குட்டைப் பாவாடை அருகில் சட்டை என்று அறைகுறை ஆடைகள் மட்டும் இன்றி சேலையிலும் தன் கவர்ச்சியைக் காட்டி பார்வையாளர்களை திணற வைக்கிறார். இவர் நடிப்பில் குறையில்லை.

பாலியல் தொழில் செய்யும் சுனைனா கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் யாமினி லட்சுமணன். குட்டைப் பாவாடை , அரை கால் சட்டை என்று அறைகுறை ஆடையில் மட்டுமின்றி சேலையிலும் தன் கவர்ச்சியைக் காட்டி பார்வையாளர்களை திணற வைக்கிறார். இவர் நடிப்பில் குறை ஒன்றுமில்லை.

பேராசிரியர் சிதம்பரம் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் எல்.சண்முகசுந்தரம். அப்பாவி முகத்தை வைத்துக் கொண்டு பண்ணும் சேட்டைகள் யாவும் ” அடப்பாவி ” என்று சொல்ல வைக்கும் . அதுமட்டுமல்ல “இந்தப் பூனையும் பால் குடிக்குமா ? ” என்ற பழமொழிக்கு பொருத்தமாக நடித்து தன் முக பாவத்தை வெளிப்படுத்தும் நடிப்பு அருமை. கதைக்கு வலுவை சேர்த்திருக்கிறது. பாராட்டலாமே !

நடிகை நயனா கபூராக நடித்திருப்பவர் ஐடி ஆச்சார்யா.

துணை நட்சத்திரங்கள் :-
நாயகனின் நண்பர்களாக பிரேர்னா கண்ணா , அருண் மோகன் , ஷ்ரவண் ராமகிருஷ்ணன், ஜூஹி சர்மா போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நித்திஷ் சப் இன்ஸ்பெக்டர் வேடத்தில் பாலாஜி என பலர் நடித்திருக்கின்றனர்.

தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
ஒளிப்பதிவாளர் :- பிரதீப் பத்ம குமார். இவர் தன் வண்ண ஒளிப்பதிவால் கதைக்கு ஏற்ற சூழலை மனக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றார்.

படத்தின் முக்கிய பங்கு இந்தப் படத் தொகுப்பு தான். படத் தொகுப்பு நேர்த்தியாக கையாண்டால் எல்லாம் வெற்றிப் படமே !

கலை இயக்குநர் :- உமேஷ் குமார் தன் பங்கை நிறைவாக செய்து இருக்கிறார்.

சண்டைப் பயிற்சியாளர் :- ராம் குமார். கிரைம் கதைக்கு ஏற்றவாறு தன் பணியை நிறைவாக செய்து இருக்கிறார்.

இயக்குநர் :- எல். சண்முக சுந்தரம்.
நம்ப முடியாத ஒரு விஷயத்தை அறிவியல் பூர்வமாக சொல்லி இப்படியும் நடக்கலாம் என்று நாயகனின் சக்தியை விளக்கியிருக்கிறார் இப் படத்தின் இயக்குநர். கிரைம் , திகில் நிறைந்த சம்பவத்தை கதையாக உருவாக்கி சுவாரஸ்யமான முறையில் படத்தினை கொண்டு செல்வது பிளஸ் பாயிண்ட்.

நிறையும் குறையும் :-
படத்தின் முதல் பாதி கிளு கிளுப்பு. அறிவியல் சார்ந்த சஸ்பென்ஸ் , திரில்லர் நிறைந்த கதை . முதல் பாதி படம் முழுவதும் பார்வையாளர்கள் மனதில் பீப் என்ற ஒலி.ஒலிக்கச் செய்திருக்கிறார் இப் படத்தின் இயக்குநர்.

இரண்டாம் பாதியில் கொலையாளியை எப்படி கண்டுபிடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்ப்பு .இது வெறும் பீப் ஒலி அல்ல என்பதை நிரூபித்திருக்கிறார் இந்தப் படத்தின் இயக்குநர்.

பார்வையாளர்களை சோர்வடையச் செய்வதும் நாயகனின் பேச்சு அதிகம் என கவலைப்படுவதாக இருப்பது மைனஸ்.
கொலையாளிக்கு என்ன தண்டனை கிடைக்கப் போகிறது என்ற எதிர்ப்பு பார்வையாளர்களை தன் வசம் கொண்டு வந்து நிறுத்துவது இயக்குநரின் தனித் திறமையே !

பீப் என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனத்தில் திகில் , சஸ்பென்ஸ் , கிரைம் மூன்று கலவையில் உருவான கதை பார்க்கலாம். எங்களின் பத்திரிகை குழு நடுநிலையாக நின்று நல்லதொரு தீர்ப்பை வழங்குகிறது. மீண்டும் அடுத்த திரை விமர்சனத்தில் சந்திப்போம் என்றும் நேசமுடன் கவிஞர் மாத்தூர் அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட், ராஜேஷ் ஓகே டேக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *