உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக மே 8 அன்று ஒளிபரப்பாகவுள்ள ‘அகண்டா’ திரைப்படத்துடன் ஜீ தமிழின் கோடை பொழுபோக்கு கொண்டாட்டம் துவங்கவுள்ளது

Share the post

உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக மே 8 அன்று ஒளிபரப்பாகவுள்ள ‘அகண்டா’ திரைப்படத்துடன் ஜீ தமிழின் கோடை பொழுபோக்கு கொண்டாட்டம் துவங்கவுள்ளது

சென்னை: 03 மே 2022: அதிரடி-ஆக்ஷன் திரைப்படமான வலிமையை உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஒளிபரப்பிய ஜீ தமிழ் தொலைக்காட்சி, உங்களது கோடையை கோலாகலமாக்கத் தயாராகிவிட்டது. மே மற்றும் ஜூன் மாதங்களின் 7 வாரங்களுக்கும் 7 புத்தம் புதிய திரைப்படங்களை ஒளிபரப்பி, பொழுதுபோக்கினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவுள்ளது, உங்கள் ஜீ தமிழ். மே 8, 2022, மாலை 4.30 மணிக்கு  உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஒளிபபரப்பாகவுள்ள, நந்தமுரி பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா’ திரைப்படத்துடன் இந்த கோடைக் கொண்டாட்டம் உங்கள் ஜீ தமிழில் துவங்கவுள்ளது.

போயபட்டி சீனு இயக்கியுள்ள ‘அகண்டா’ திரைப்படம், தனது நகரில் உள்ள அனைத்து கெட்டவர்களையும் எதிர்த்து நிற்கும் தீவிர சிவபக்தரான முரளி கிருஷ்ணாவின் (நந்தமுரி பாலகிருஷ்ணா) கதையைக் கூறுகிறது. சக மனிதர்களுக்கு நடக்கும் அநீதியை தட்டிக்கேட்கும் ஒரு மரியாதைக்குரிய தலைவராக அவர் வாழ்கிறார். வரதராஜுலு (ஸ்ரீகாந்த்) மற்றும் கஜேந்திரா (நித்தின் மேத்தா) ஆகியோர் நடத்தும் சட்டவிரோதமான சுரங்கப் பணிகளை அவர் எதிர்க்க; சூழ்ச்சி செய்து முரளி மற்றும் அவரது குடும்பத்தை கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள். இருப்பினும், அகண்டா (நந்தமுரி பாலகிருஷ்ணாவின் நடித்துள்ள இரட்டை வேடம்) அவரைக் காப்பாற்றுகிறார். அதற்குப்பின், இருவரும் இணைந்து எப்படி வில்லன்கள் வரதராஜுலு மற்றும் கஜேந்திராவை அழிக்கிறார்கள் என்கிற இந்த சுவாரஸ்யமான கதை அனைவரையும் நகரவிடாமல் ரசிக்கவைக்கும்.

நந்தமுரி பாலகிருஷ்ணா மற்றும் ஸ்ரீகாந்த்தின் அதிரடி சண்டைக் காட்சிகளையும், அசத்தலான நடிப்பையும் காணத்தவறாதீர்கள்!

எதற்காக காத்திருக்கிறீர்கள்? வரும் மே 8, மாலை 4.30 மணிக்கு உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக உங்கள் ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள அகண்டா திரைப்படத்தைக் கண்டு மகிழுங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *