வதந்தி – சீசன் 2 – இணையத் தொடர் விமர்சனம் :-

Share the post

வதந்தி – சீசன் 2 – இணையத் தொடர் விமர்சனம் :-
காற்றை விட வேகமாக பரவக் கூடியது வதந்தி. இது நிதர்சன உண்மை. வதந்திக்கு வாய் பூட்டு போட முடியாது. பாட்டிலில் அடைத்து வைக்க முடியாது. காது மற்றும் வாய் இருந்தால் போதும் வதந்தி அதிவேகமாக பரவும்.

மதுரை கதைக் களம்.
மதுரையில் மத்திய அமைச்சர் கலந்து கொள்ளும் கால்கோள் விழா ( அடிக்கல் நாட்டும் விழா ) எட்டுவழிச் சாலையில் அடிக்கல் நாட்டு விழாவிற்காக ஆங்காங்கே குழித் தோண்டும் போது பூமியில் இருந்து புதையலைப் போல எலும்புகள் தோண்டுபவரின் கைகளில் கிடைக்க இதைக் கண்டு குழுமி இருந்த மத்திய அமைச்சர் உட்பட மிரண்டு போய் நின்றனர். மத்திய அமைச்சர் கலந்து கொள்ளும் என்று சொன்ன உடனே மீடியாக்கள் புற்றீசலைப் போல படை எடுத்து வந்தனர். தன் காமிரா மூலம் பளிச் பளிச் கிளிக்குகளோடு படம் பிடித்துக் கொண்டிருந்தனர்.

மதுரை கதைக் களம் :-
மதுரையில் மத்திய மந்திரி கலந்து கொள்ளும் கால்கோள் விழா ( அடிக்கல் நாட்டு விழா ) எட்டு வழிச்சாலையில் அடிக்கல் நாட்டு விழாவிற்காக ஆங்காங்கே குழித் தோண்டும் போது பூமியில் இருந்து புதையலை தேடுவதைப் போல எலும்புகள் குழித் தோண்டுபவரின் கைகளில் கிடைக்க இதைக் கண்டு அங்கு குழுமி இருந்த மத்திய அமைச்சர் உட்பட இரண்டு மிரண்டு உறைந்து போயினர்.
மத்திய அமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்று சொன்ன உடனே மீடியாக்கள் புற்றீசலைப் போல படை எடுத்து வந்து நின்றனர். தன் காமிரா மூலம் பளிச் பளிச் கிளிக்குகளோடும் , வீடியோ கவரேஜ் எடுத்துக் கொண்டனர். குறிப்பாக எலும்புகளை மிக துள்ளியமாக படம் எடுத்துக் கொண்டனர்.

மதுரை கதைக்களம் :-
மதுரையில் மத்திய மந்திரி கலந்து கொள்ளும் கால்கோள் விழா ( அடிக்கல் நாட்டு விழா ) எட்டு வழிச்சாலையில் அடிக்கல் நாட்டு விழா. இதனைக் காண ஏராளமான மக்கள் கூடியிருந்தனர்.

ஆங்காங்கே குழித் தோண்டும் போது பூமியில் இருந்து புதையல் கிடைத்ததைப் போல மாறாக எலும்புக் குவியல் குழித் தோண்டுபவரின் கைகளில் கிடைக்க இதனைக் கண்டு அங்கு குழுமியிருந்த மத்திய அமைச்சர் உட்பட அரண்டு மிரண்டு பயத்தால் உறைந்து போயினர்

மத்திய அமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்று சொன்ன உடனே மீடியாக்கள் புற்றீசலைப் போல படை எடுத்து வந்து நின்றனர்.

தத்தம் காமிராக்கள் மூலம் பளிச் பளிச் என புகைப்படம் எடுத்துத் தள்ளினர் . வீடியோ கவரேஜ் மூலம் நேரடியாக படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தனர். குறிப்பாக எலும்புகளை மிகத் துள்ளியமாக படம் எடுத்து முடித்தனர்.

அரசு நிகழ்ச்சியின் போது இப்படிப்பட்ட சம்பவம் வெறும் வாய்க்கு அவல் கொடுத்த கதையாக ஒட்டுமொத்த ஊடகமும் அங்குக் குழுமி கூடி கூடி பேசிக் கொண்டிருக்க , அந்த எலும்புகளின் சாம்ராஜ்யம் பற்றியச் செய்தி காட்டுத் தீயாய் காவல் துறையினருக்கு தெரிய வர அதனின் மர்ம முடிச்சினை அவிழ்க்கும் பொறுப்பு காவல் உதவி ஆய்வாளர் சசிகுமாரிடம் ஒப்படைக்கப் பட்டது.

எந்த ஆதாரமும் இல்லாமல் , அதற்கான எந்தவித அறிகுறியும் இல்லாமல் காவல் துறையினருக்கே பெருத்த சவாலாக இருக்கும் இந்த நிகழ்வு எப்படிப்பட்டதையும் கண்டுபிடிக்கும் காவல் துறை இதனை கண்டுபிடித்து உண்மை என்ன என்பதை இந்த உலகிற்கு தெரியப்படுத்தாதா ?

ஒரு கை இல்லை. சிதைந்த நிலையில் இருக்கும் அந்த எலும்புக் கூட்டை வைத்து புலன் விசாரணையைத் தொடங்குகிறார் காவல் உதவி ஆய்வாளர் சசிகுமார்.

அதே இடத்தில் இன்னொரு எலும்புக் கூடு. புதைக்கப்பட்ட சடலத்தை வைத்தே கொலையுண்டது ஆணா ? பெண்ணா ? என்பதை கண்டுபிடித்தது காவல் துறை. கொலையுண்டது பெண்கள் தான். கண்டுபிடிக்கப்பட்டது.

எலும்புக் கூடுகளின் பிரச்சனை ஒருவழியாக முடிந்தது. காவல் துறை சற்று ஆசுவாசப் படுத்திக் கொண்டது.

கொலைகளுக்கான பின்னணி என்ன ? எதற்காக இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்டனர் ? கொலைக்கான காரணம் என்ன ? இந்தக் கொலைகளை செய்தது யார் ? தனிநபரா ? கூட்டுக் கொலையாளிகளின் கூட்டு முயற்சியா ? இப்படி காவல் உதவி ஆய்வாளர் மனத்தில் சிந்தனைகள் வெகுவாக ஓட அந்தச் சிந்தனை குதிரைகளை தட்டி ஓட்ட அதன் பின்னே ஓடுகிறார் சசிகுமார் . ஆம் கொலையாளிகளை கண்டுபிடிக்க களம் இறங்குகின்றார் சசிகுமார்.

காவல் உதவி ஆய்வாளர் சசிகுமாரின் புலன் விசாரணை மூலம் பல மர்மங்கள் விஸ்வ ரூபம் எடுக்க அந்த மர்ம முடிச்சுகளை இலாவகமாக அவிழ்த்து அந்த உண்மையான கொலையாளியைக் கண்டுபிடித்தாரா ? கொலைக்கான காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்க சசிகுமார் செய்யும் அசுர செயல்களை தொய்வில்லாமல் விறு விறுப்பாக கொண்டு செல்வதே
” வதந்தி – 2″

கிரைம் திரில்லர் மையமாக வைத்து இணையர் தொடர் எல்லாம் சொல்ல வந்ததை நேரடியாக சொல்லாமல் மகாபாரதத்தில் பல கிளைக்கதைகளை சொல்வதைப் போல சொல்லியிருப்பது வழக்கத்தை பழக்கப்படுத்திக் கொண்டதற்கு சமமாகும்.

கிரைம் திரில்லர் இவைகளை மையமாக வைத்து இணையத் தொடர் எல்லாம் சொல்ல வந்ததை நேரடியாகச் சொல்லாமல் மகாபாரதத்தில் பல கிளைக் கதைகளை சொல்வதைப் போல

சொல்லியிருப்பது வழக்கத்தை பழக்கப் படுத்திக் கொண்டதற்கு சமமாகும்.

கொலை யார் ? கொலைக்கான காரணம் என்ன ? கொலைக்கான பின்னணி என்ன ? என்ற தொடர் வினாக்களுக்கு பார்வையாளர்கள் யூகித்து விடையளிக்கும் முன்பே தன்னுடைய தரமான திரைக்கதை அமைப்பு மூலம் இத் திரைப்படத்தை விறு விறுப்பாக கதையை அதி வேகமாக நகர்த்திச் செல்கின்றார் இப் படத்தின் திரைப்பட இயக்குநர் ஆண்ட்ரூலூயிஸ்.

வழக்கு அதனைத் தொடர்ந்து விசாரணை அதன் மூலம் ஏற்படும் திருப்பு முனைகள் என வழக்கமான ஃபார்மூலவாக இருந்தாலும் ஓர் அழுத்தமான போலீஸ் Proce dural drama வாக கவனத்தை ஈர்க்கிறது.

சசிகுமார் ஓர் அமைதியான காவல் உதவி ஆய்வாளராக தன் இயல்பான நடிப்பின் மூலம் அதனை வெளிப்படுத்தி இருக்கின்றார். உயர் அதிகாரியாக அனசா தன் நடிப்பை அளவாக பயன்படுத்தி இருக்கின்றார்.

விவேக் பிரசன்னா சில இடங்களில் சிரிக்க வைப்பதாக நினைத்து சிரிச்சு வைக்கிறார்.

காதல் , கணவன் – மனைவி உறவு.
தமிழரின் பாரம்பரியமான விளையாட்டு மஞ்சுவிரட்டு , மாடுபிடி விளையாட்டு , ஏறுதழுவுதல் , சல்லிக்கட்டு என பல பெயர்களில் விரியும் இந்த விளையாட்டு இதன் மீது மக்கள் கொண்ட ஆர்வம் உலக அளவில் பேசும் பொருளாக போற்றி கொண்டாடும் இந்த வீர விளையாட்டை மிக நேர்த்தியாக கையாளுகின்றார் இயக்குநர் ஆண்ட்ரூலூயிஸ்

மூஸா ராசா என்ற கதாபாத்திரத்தில் சசிகுமார். காவல் உதவி ஆய்வாளர் வேடத்தில் முதல் முறையாக காக்கி சட்டையில் வந்தாலும் தன் உருவத்திற்கும் நடிப்புக்கும் எந்த வித மாற்றத்தையும் வெளிக்காட்டவில்லை.உடல்மொழியில் எந்த வித அசைவையும் காட்டாமல் அளவாக நடித்திருக்கின்றார் சசிகுமார்

எந்த பரபரப்பான செய்திகளும் டீக்கடை பெஞ்சில் தான் ஆரம்பிக்கின்றன. ஊர் வம்பு ஆனாலும் சரி நாட்டு நடப்பு ஆனாலும் சரி தொடங்கி வைக்கும் இடம் இந்த டீக்கடை பெஞ்சு தான். அந்த வகையில் வழக்கு சம்பந்தப்பட்ட போலீஸ் விசாரணை டீக் கடை பெஞ்சில் தான் ஆரம்பிக்கின்றது.

எந்த பரபரப்பான செய்திகளும் டீக்கடை பெஞ்சில் தான் ஆரம்பிக்கின்றன. ஊர் வம்பு ஆனாலும் சரி நாட்டு நடப்பு ஆனாலும் சரி தொடங்கி வைக்கும் இடம் இந்த டீக்கடை பெஞ்சு தான். அந்த வகையில் வழக்கு சம்பந்தப்பட்ட போலீஸ் விசாரணை டீக் கடை பெஞ்சில் தான் ஆரம்பிக்கின்றது.

சசி குமார் தாடி எடுக்க மறுக்கும் இவர் ஓர் காவல் அதிகாரி. டீக்கடை தான் இராசியான இடம் என அங்கு அமர்ந்து விசாரணை நடத்துகிறது காவல் துறை.

கொலை நடந்தது. அதற்கான காரணம் இதுதான் யூகிக்க முடியாத வகையில் ஒரு டிவிஸ்ட்டை மிக கவனமாக கதையில் வைத்திருப்பது பார்ப்பதற்கு கனகச்சிதமாக உள்ளதை இயக்குநர் தன் திறமையால் கதையை நகர்த்தி செல்கின்றார்.

காதலிங்க துவங்குபவர் , ஆண் – பெண் உறவுகளின் சிக்கல்களையும் மிக அழகாக கதைக்குள் கொண்டு சேர்த்திருப்பது மிக அருமை.

மதுரை மாவட்ட எஸ் .பி யாக நடித்திருக்கும் அனகா தான் ஏற்று நடித்த கதாபாத்திரத்திற்கு உயிரூட்டி இருக்கின்றார். இவரது நடிப்பு கன கச்சிதம். மிகச் சிறப்பாக தான் ஏற்று நடித்த கதாபாத்திரத்திற்கு பெருமை சேர்த்திருக்கின்றார்.

முடக்கத்தான் மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் அறிமுக நடிகர் யஷ்வந்த். மதுரை மாவட்ட இளைஞராக களம் இறங்கும் மாடுபிடி விளையாட்டில் இவர் காட்டும் ஆர்வம் வாடிவாசலை நினைவு படுத்துகின்றது. தமிழர் திரு நாளாம் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு என்னும் வீர விளையாட்டை பாரம்பரியமாக கொண்டாடி மகிழும் நாளை தமிழர்களுக்கு நினைவு படுத்தும் வகையில் யஷ்வந்த் தன் நடிப்பால் தான் அந்த வீர விளையாட்டை தன் நண்பரிகளிடம் விளக்கும் இடமும் சரி , காதல் காட்சியில் மதுரை இளைஞராகவே வலம் வரும் இடமும் சரி ஒவ்வொரு அசைவிலும் தனக்கென தனி முத்திரையை பதிக்கின்ற இவர் பின்னாளில் நல்லா வருவார் ! இதில் சிறிதும் ஐயமில்லை .

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த இணையத்தில் இணைந்திருப்பவர் அபர்ணா தாஸ் . மிக சாதாரண கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். சசிகுமாரின் மனைவியாக நடித்திருக்கும் இவர் ஏனோ திரைக்கதையில் ஒட்டவில்லை.

முடக்கத்தான் மணியின் காதலியாக நடித்திருக்கும் ரேவதி தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கின்றார்.

விவேக் பிரசன்னா தன் நடிப்பை சற்று பலப் படுத்தி இருக்கலாம்.

ட்விஸ்ட் பல இடங்களில் வைப்பது கதையின் ஓட்டத்திற்கு தடையாக இருக்கும் என தோன்றுகிறது. எந்த செயலுக்கும் ஒரு காரண காரியம் உண்டு இதனை உணர்ந்து இயக்குநர் செயல்பட வேண்டும்.

சொன்னதையே திரும்ப சொல்வது சற்று நெருடலாக உள்ளது. அதனை சரி செய்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும் என்பதே என் கருத்து.

முக்கிய கட்டத்தில் வரும் காவல் துறை உதவி ஆய்வாளர் சசிகுமார் எஸ்.பி அனகாவுக்காக ஆதரவாக இருக்கின்றார் ? இதனை சற்று விளக்கி தெளிவு படுத்தி இருக்கலாமே ! அதை ஏன் இயக்குநர் கோட்டை விட்டார் ? திரைக்கதை அமைக்கும் போதே கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் . திரைக்கதையில் கவனம் செலுத்தினால் எந்தப் படமும் வெற்றியே ! திரைப்படம் மட்டும் அல்ல இணையத்திற்கும் இது பொருந்தும் என்பது என் கருத்து.

தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
இயக்குநரின் எண்ணங்களுக்கு ஒளிவடிவம் கொடுப்பவர் ஒளிப்பதிவாளர். இந்த இணையத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருப்பவர் ஒளிப்பதிவாளர் சரவணன் ராமசாமி.

கிரைம் திரில்லர் என்பதால் அதிகமான இருளை பயன் படுத்தாமல் இயற்கையின் துணையோடு இரம்மியமான காட்சிகளை வண்ணத்தில் காட்சிமைப் படுத்தி இரசிக்க வைக்கின்றார். கதைக்களத்தினை உள்வாங்கி , காட்சி அமைப்புகளை மிக நேர்த்தியாக கதாபாத்திரங்களை தன் இயல்பு மாறாமல் ஒளிவடிவத்தில் காட்டியிருப்பது மிகச் சிறப்பு.

இசை என்பது திரைக்கு ஒரு விருந்து . அந்த விதத்தில் இசையமைப்பாளர் சைமன் கே.கிங் இசையிலும் சரி பின்னணி இசையிலும் சரி கதை ஓட்டத்திற்கு சரியான யானை பலத்தைக் கொடுத்திருக்கிறார். பின்னணி இசை சேர்க்க வேண்டிய இடத்தில் மிக நேர்த்தியாக சேர்த்திருப்பது மிக அருமை . மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் காட்சிகளுக்கு மட்டுமின்றி அடுத்து என்ன என்ன என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் காட்சிகளின் மீதும் தனது பின்னணி இசை மூலம் பார்ப்பவர்களின் முழு கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து விடும் நேர்த்தி மிக மிக அருமை.

கிரைம் திரில்லர் என்றால் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஏதாவது ஒரு சஸ்பென்ஸ் வைக்க வேண்டும். அதனையே ஒரு சவாலாக ஏற்று மிக சாமார்த்தியமாக எதிர்கொள்ளும் படத்தொகுப்பாளர் ரிச்சர்டு கெவின் .ஏ சஸ்பென்ஸ் காட்சிகளுடன் மக்களின் அன்றாட வாழ்வியலின் நிலையினை வெகு எதார்த்தமாக மக்கள் இரசிக்கும் வண்ணம் படத்தினை தொகுத்து தனக்கென தனி முத்திரையை பதிக்கின்றார் படத்தொகுப்பாளர் ரிச்சர்டு கெவின்.ஏ இவரை பாராட்டுவோம்.

படத்தொகுப்பாளர் பணி :-
வெட்டி ஒட்டி பணி சேர்க்கும் தையற் கலைஞரை நினைவு படுத்தும். துணியை எப்படி சட்டையாக மாற்றுகின்றார் என்ற வித்தையைப் போல எடுத்த படக் காட்சிகளை ஒழுங்கு படுத்தி முழுமைப்படுத்துவது இவர் வேலை.

கிரைம் திரில்லர் என்றால் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஏதாவது ஒரு சஸ்பென்ஸ் வைக்க வேண்டும். அதனையே ஒரு சவாலாக ஏற்று மிக சாமார்த்தியமாக எதிர்கொள்ளும் படத்தொகுப்பாளர் ரிச்சர்டு கெவின் .ஏ சஸ்பென்ஸ் காட்சிகளுடன் மக்களின் அன்றாட வாழ்வியலின் நிலையினை வெகு எதார்த்தமாக மக்கள் இரசிக்கும் வண்ணம் படத்தினை தொகுத்து தனக்கென தனி முத்திரையை பதிக்கின்றார் படத்தொகுப்பாளர் ரிச்சர்டு கெவின்.ஏ இவரை பாராட்டுவோம்.

கலை இயக்குநர் கதைக்கு ஏற்றபடி காட்சிக்கு ஏற்றபடி செட் அமைத்துக் கொடுப்பார். இவருடைய கலைப்பணி மகத்தானது. கலை இயக்குநர் மீவின்னின் பணி பார்வையாளர்களை கவர்ந்து இழுக்கிறது. பழைய காவல்துறையை தன் கலை வடிவம் மூலம் நம் மனக் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றார்.

ஜல்லிக்கட்டு போட்டியை காட்சிமைப் படுத்திய விதம் மிக அருமை ! கலை இயக்குநர் மீவின்னுக்கு ஒரு பாராட்டு கூறலாமே !

இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் பற்றிய செய்தி :-
எண்ணம் எழுத்து இயக்கம் ஆண்ட்ரூ லூயிஸ் .
வதந்தி – சீசன் 1 இதில் கொலையாளி யார் ? என்ற வினாவிற்கு விடை தேடும் படலமாக கதையை வேகமாக நகர்த்தியதைப் போல இந்த வதந்தி சீசன் – 2 இலும் கொலையாளியாக தண்டனை பெற்றவரை நிரபராதி என நிரூபணம் செய்யும் வண்ணமாக கதையை விறு விறுப்பாக கொண்டு செல்கின்றார்.

முடக்கத்தான் மணியின் மௌனம் பற்றியும் யோசிக்க வைக்கின்றது. அனைத்து அத்தியாயங்களிலும் ஏதேனும் ஒரு செய்தி மூலமாக ஒரு சம்பவம் மூலமாக அடுத்து அடுத்து என்ன நடக்கும் ? என்பதனை பார்வையாளர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்புவது ? மனத்தில் எழும் சந்தேகங்களுக்கு விடைக் கொடுக்க முனைவது கதை ஓட்டத்தின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பார்த்து இரசிக்கக் கூடிய அதே சமயத்தில் மிகவும் சுவாரஸ்யமாக கிரைம் திரில்லர் தொடரை இயக்கி இருக்கும் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸை பாரட்டி வரவேற்கலாமே !
பார்க்கலாம் இரசிக்கலாம் !

திரை விமர்சனம் அன்றி இணையத்தின் வாயிலாக வரும் படத்திற்கும் ஒரு விமர்சனம் செய்யலாம் என்ற நல்ல எண்ணத்தோடு எங்கள் பத்திரைக் குழு ஆய்வு செய்து நிறை குறைகளை சுட்டிக் காட்டி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் , இரசிப்புத் தன்மை மேன்மை படுத்துவதும் , தொழில் நுட்பக் கலைஞர்களின் தொழில் நுட்பத்தினை வெளிப்படுத்தவும் நாங்கள் ஒரு கருவியாக இருக்கின்றோம். நடுநிலையோடு நாங்கள் ஆய்வு செய்து உங்கள் முன் கருத்தை வைக்கின்றோம். ஏற்று நல்ல ஆதரவு வழங்க வேண்டி விரும்பிக் கேட்டு உங்களிடமிருந்து விடை பெறுபவர் உங்கள் கவிஞர் மாத்தூர் அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட் ராஜேஷ் ஓகே டேக் ;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *