கலர்ஸ் தமிழில் வரும் ஞாயிறு அன்று ‘நையப்புடை’ மற்றும் ‘வெல்வெட் நகரம்’ ஆகிய இரு திரைப்படங்கள் உலகளவில் தொலைக்காட்சியில் முதல் முறையாக ஒளிபரப்பாகின்றன

Share the post

கலர்ஸ் தமிழில் வரும் ஞாயிறு அன்று ‘நையப்புடை’ மற்றும் ‘வெல்வெட் நகரம்’ ஆகிய இரு திரைப்படங்கள் உலகளவில் தொலைக்காட்சியில் முதல் முறையாக ஒளிபரப்பாகின்றன

~ வெல்வெட் நகரம் மற்றும் நையப்புடை என்ற சிறப்பான திரைப்படங்களை கண்டு மகிழ ஞாயிறு ஜுலை 11 அன்று பிற்பகல் 1:00 மணி மற்றும் 3:30 மணிக்கு தவறாது கலர்ஸ் தமிழ் அலைவரிசையை டியூன் செய்யுங்கள் ~

சென்னை, 8 ஜுலை 2021: தமிழ்நாட்டின் மிக இளைய பொது பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ் இந்த வார இறுதி நாட்களில் இரு வெற்றித் திரைப்படங்களை தொலைக்காட்சியில் உலகளவில் முதன்முறையாக ஒளிபரப்பவிருப்பதன்மூலம் தனது இரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தவிருக்கிறது. இந்த சேனலின் பிரபல சன்டே சினி காம்போ என்ற நிகழ்வின் ஒரு பகுதியாக, விஜய கிரண் இயக்கத்தில் உருவான ஒரு ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான நையப்புடை, ஓய்வு தினமான ஞாயிறு அன்று உங்களுக்கு சிறப்பான பொழுதுபோக்கை வழங்க விருக்கிறது. அதைத் தொடர்ந்து ஒரு புலன் விசாரணை ஊடகவியலாளர் குறித்த சிறப்பான கதை அம்சம் கொண்ட வெல்வெட் நகரம் ஒளிபரப்பாகும். அதிரடி திருப்பங்கள் மற்றும் மயிர்கூச்செரியும் நிகழ்வுகளைக் கொண்ட இந்த இரு திரைப்படங்களை கண்டு இரசிக்க 2021 ஜுலை 11 வரும் ஞாயிறு அன்று பிற்பகல் 1:00 மணி மற்றும் 3:30 மணிக்கு கலர்ஸ் தமிழ் அலைவரிசையை பாருங்கள்.

ஊழலுக்கு எதிராக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவரின்தொடர் போராட்டங்களையும் மற்றும் உள்ளூர் கிரிமினல் தாதா ஒருவரின் பிடியிலிருந்து ஒரு தம்பதியினரை மீட்பதில் அவரது அதிரடி நடவடிக்கையையும் நையப்புடை திரைப்படம் நேர்த்தியாக சித்தரிக்கிறது. வெள்ளைச்சாமி என்ற கதாபாத்திரத்தில் பழம்பெரும் இயக்குநர் S. A. சந்திரசேகரன் அற்புதமாக நடித்திருக்கிறார். வருமையில் வாடும் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளை அக்கறையுடன் பராமரிக்கிற தர்ம சிந்தனையுள்ள நபரான வெள்ளைச்சாமியின் அமைதியான வாழ்க்கை, ஒரு தம்பதியினருக்கு அடைக்கலம் கொடுக்கும்போது எதிர்பாராத திருப்பங்களை சந்திக்கிறது. தப்பி ஓடி அடைக்கலம் கேட்கிற ஜோடியாக பா விஜய் மற்றும் சாந்தினி தமிழரசன் நடித்திருக்கின்றனர்.

வரலட்சுமி சரத்குமார் மற்றும் ரமேஷ் திலக்நடிப்பில் அறிமுக இயக்குநர் மனோஜ் குமார் நடராஜனின் இயக்கத்தில் வெளிவந்த வெல்வெட் நகரம் உளவியல் சார்ந்த ஒரு திரில்லர் திரைப்படமாகும். நிஜ வாழ்க்கை நிகழ்வுகளின் அடிப்படையில் இத்திரைப்படத்தின் கதை அமைந்திருக்கிறது. ஒரு நடிகையின் கொலையின் பின்னணியில் உள்ள மர்மத்தை முற்படும் ஒரு ஊடகவியலாளரைச் சுற்றி கதை பயணிக்கிறது. ரவுடிகளின் கும்பலில் அந்த பெண் ஊடகவியலாளர் வளைக்கப்படும்போது மிக ஆபத்தான சூழ்நிலையில் அவர் சிக்கிக்கொள்கிறார். எதார்த்தமான நடிப்பை நடிகர்கள் வெளிப்படுத்தியிருக்கும் நிலையில், பார்க்கும் இரசிகர்கள் மனதில் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் உருவாக்குகிற பல தருணங்கள் இத்திரைப்படத்தில் இருக்குகின்றன. பகத் குமாரின் அற்புதமான ஒளிப்பதிவு இத்திரைப்படத்திற்கு வலு சேர்க்கிறது. கோலி சோடா திரைப்படத்தின் மூலம் பிரபலமாக அறியப்படும் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணியின் இசை மற்றும் பின்னணி இசை, பார்வையாளர்களை இருக்கையின் முனைக்கே நகரச் செய்வது நிச்சயம்.

ஆர்வமூட்டும்இந்தநிகழ்ச்சிகளின்ஒளிபரப்பைஇந்த அலைவரிசையில்மட்டும்காணலாம் என்பதால் ஜுலை 11 இந்த ஞாயிறு அன்று பிற்பகல் 1:00 மற்றும் 3:30 மணிக்கு கலர்ஸ் தமிழ் சேனலை டியூன் செய்ய மறந்துவிடாதீர்கள்.  அனைத்துமுன்னணிகேபிள்வலையமைப்புகளிலும்மற்றும்சன்டைரக்ட் (CHN NO 128), டாடாஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ்டிவி (CHN NO 1808) மற்றும்வீடியோகான் D2H (CHN NO 553) ஆகியஅனைத்துடிடீஹெச்தளங்களிலும்கலர்ஸ்தமிழ்அலைவரிசைநிகழ்ச்சிகளைக்கண்டுரசிக்கலாம்.அதுமட்டுமின்றி, பார்வையாளர்கள்அவர்களதுவசதிக்கேற்பஎந்தநேரத்திலும்இந்நிகழ்ச்சியைகாணVOOT-ஐடியூன்செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *