ஷாடோ லைட் என்டர்டைன்மென்ட் சார்பில் சுனில் டிக்ஸன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் தூநேரி.


போலீஸ் நிலையத்தில் சார்ஜ் எடுப்பதற்குமுன் நிவின் கார்த்திக் குடும்பத்தினரை தனி வீட்டில் செல்கிறான்.
வீட்டுக்கு முன் சுடுகாடு இருப்பதால், மனைவி, மற்றும் குழந்தைகள் பயப்படுகிறார்கள்

ஊரில் அடிக்கடி கொலை சம்பவங்கள் நடக்கிறது.
அதே சமயம் அமானுஷ்ய சக்தி குடும்பித்தினரை பயப்படுகிறார்கள்.

நிவின் கார்த்தி ஊரில் இருப்பவர்களை கொலை செய்வது யார்? விசாரிப்பதே மீதிக்கதை.
நிவின் கார்த்திக் நேர்மையான போலீஸ் அதிகாரியாக வருகிறார். தன்னால் முடிந்தளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். கருப்பசாமியாக வரும் ஜான் விஜய் வழக்கமான நடிப்பில் இருந்து மாறி வித்தியாசமான நடிப்பை வழங்கி இருக்கிறார். தன்னை திட்டுபவர்களை அடிப்பதும், பாசத்தால் உருகுவதுமாக மனதை கவர்ந்திருக்கிறார்.

நிவின் மனைவியாக வரும் மியாஸ்ரீ, அன்பு, பயம், மிரட்டல் என நடிப்பில் வேற்றுமை காண்பித்து இருக்கிறார். குழந்தைகள் அஷ்மிதா, நகுல், அபிஜித், மூவரின் நடிப்பும் எதார்த்தமாக அமைந்திருக்கிறது.


வழக்கமான பேய் பட வரிசையில் இப்படம் அமைந்தாலும், வித்தியாசம் காண்பித்து இருக்கிறார் இயக்குனர் சுனில் டிக்ஸன். சொல்ல வந்த கதையை தெளிவாக சஸ்பென்ஸ் கலந்து சொல்லியிருக்கிறார். திகில் படத்திற்கு ஏற்றவாறு இசையமைத்து இருக்கிறார் இசையமைப்பாளர் கலையரசன். கலேஷ் மற்றும் அலன் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.


மொத்தத்தில் ‘தூநேரி’ திகில் படம்
நடிகர்கள் ;: ஜான் விஜய், நவீன் கார்த்திக், மியாஶ்ரீ.
சிறுவர் நட்சத்திரங்கள் ; அஸ்மிதா, நகுல், அபிஜித், சாத்விகா.
தயாரிப்பு, இயக்கம் ; சுனில் டிக்சன்
ஒளிப்பதிவு ;: கலேஷ் மற்றும் ஆலன்
ஒலி வடிவமைப்பு தொகுப்பு: ஃபிடல் காஷ்ரோ
கலை இயக்கம் : ரூபேஷ்
இசை : கலையரசன்
சண்டைக்காட்சி : டிரகன் ஜீரோஷ், பயர் கார்த்தி
மக்கள் தொடர்பு ; A.ஜான்.
வெளியீடு ; ‘ஆக்ஷன் ரியாக்ஷன்’ ஜெனீஷ்