மூன்று சமையல் ஜாம்பவான்கள். ஒரே பிரம்மாண்ட சமையலறை,விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல் ஒளிபரப்பாகும் Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியில்,Chef Sashi Cheliah, Chef Venkatesh Bhat மற்றும் Chef Shreeya Adka ஆகியோர் நடுவர்களாக இடம்பெறுகின்றனர்.!

Share the post

மூன்று சமையல் ஜாம்பவான்கள். ஒரே பிரம்மாண்ட சமையலறை,விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல் ஒளிபரப்பாகும் Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியில்,Chef Sashi Cheliah, Chef Venkatesh Bhat மற்றும் Chef Shreeya Adka ஆகியோர் நடுவர்களாக இடம்பெறுகின்றனர்.

பத்திரிகை செய்தி
சென்னை, 24 செப்டம்பர் 2026

சமையலறை தயாராகிவிட்டது. ஏப்ரன்கள் அணியப்பட்டுவிட்டது.இனி Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியில் சமையலுடன் சேர்ந்து பரபரப்பாக இருக்க போகிறது.

Sony VIZHA மற்றும் Sony LIV இணைந்து வழங்கும் இந்த புதிய சமையல் நிகழ்ச்சி, சுவையான உணவுகளுடன் எதிர்பாராத திருப்பங்களையும், சுவாரஸ்யமான போட்டிகளையும் வழங்க இருக்கின்றது.

இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக புகழ்பெற்ற Chef, உணவக உரிமையாளர், Hospitality துறை நிபுணர் மற்றும் தொலைக்காட்சியில் பிரபலமான Chef Venkatesh Bhat, MasterChef Australia Season 10 வெற்றியாளர் Chef Sashi Cheliah, மேலும் கோயம்புத்தூரில் உள்ள The French Door நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சமையல் நிபுணரான Chef Shreeya Adka ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

மூவரும் தங்களது தனித்துவமான சமையல் அனுபவம், சர்வதேச அனுபவம் மற்றும் உணவின் மீதான ஆர்வத்துடன் போட்டியாளர்களுக்கு வழிகாட்டி அதில் சவால்களை வழங்கி, அவர்களின் திறமையை பார்க்க உள்ளனர்.

Banijay Asia தயாரிக்கும் Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியை Vijay தொகுத்து வழங்குகிறார். Samantha Ruth Prabhu Celebrity Judge ஆக இடம்பெறுகிறார். தமிழ் பொழுதுபோக்கு துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் சமையல் உலகிற்குள் தங்களது புதிய பயணத்தை தொடங்க இருக்கின்றனர்.

Chef Venkatesh Bhat கூறுகையில்:

“இந்திய உணவு வகைகளை உலகம் முழுவதும் கொண்டு சென்று நமது உணவின் தனித்துவத்தையும் வளத்தையும் உலகிற்கு அறிமுகப்படுத்திய MasterChef நிகழ்ச்சியை நான் பெருமையுடன் பார்த்திருக்கிறேன். இப்போது Celebrity MasterChef Tamil மூலம் அந்த பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான மற்றும் பெருமையான தருணம்.இது ஒரு புதிய முயற்சி. தமிழ் உணவின் பாரம்பரியம், பல்வேறு சுவைகள் மற்றும் அதன் ஆழத்தை கொண்டாடும் ஒரு பிரம்மாண்டமான நிகழ்ச்சியை உருவாக்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.

தமிழ் உணவுக்கு மிகப்பெரிய வரலாறும், தனித்துவமான சுவைகளும் உள்ளன. உண்மையான தமிழ் உணவின் சிறப்பை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி அதன் சுவைகளையும் கதைகளையும் உலகம் முழுவதும் கொண்டு செல்லும் ஒரு நிகழ்ச்சியின் பகுதியாக இருப்பதில் நான் பெருமை கொள்கின்றேன்.”

Chef Sashi Cheliah கூறுகையில் ;

“MasterChef சமையலறைக்குள் நான் வந்த பயணம் மிகவும் வித்தியாசமான ஒன்றாகும். எனது பணியை Singapore Police Force-ல் தொடங்கினேன்,ஒருநாள் MasterChef Australia சமையலறைக்குள் நுழைந்து, இறுதியில் அந்த போட்டியில் வெற்றி பெறுவேன் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை.எனது குழந்தைப் பருவத்தையும் சமையல் பயணத்தையும் உருவாக்கிய இந்திய மற்றும் தென்கிழக்கு ஆசிய உணவுகளின் சுவைகள் என் பயணத்தில் முக்கியமான பங்கு வகித்தது. நாம் யார் எங்கிருந்து வந்தோம் என்பதை உணவின் மூலம் சொல்ல முடியும் என்பதை அந்த அனுபவம் எனக்கு கற்று தந்தது.

இப்போது Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியில் நடுவராக இருப்பது எனக்கு மிகவும் சிறப்பான அனுபவம். ஒரு போட்டியாளராக அந்த சமையலறையின் மறுபக்கத்தில் நின்றபோது இருந்த பதற்றம், குழப்பம் மற்றும் அதே நேரத்தில் நமக்கு பிடித்த ஒரு உணவை உருவாக்கும் உற்சாகம் என அனைத்தையும் நான் நன்றாக அறிந்திருக்கிறேன்.

இந்த முறை அந்த அனுபவத்தை மறுபக்கத்திலிருந்து பார்க்கப் போகின்றேன்.

Celebrity போட்டியாளர்களை சந்தித்து, அவர்களின் திறமையை சோதித்து, அவர்களின் எல்லைகளைத் தாண்டி முயற்சி செய்ய வைத்து அவர்கள் கொண்டு வரும் கதைகளையும் சுவைகளையும் கண்டறிய மிகவும் ஆவலாக இருக்கின்றேன்.

Chef Shreeya Adka கூறுகையில் ;

“ஒவ்வொரு கொண்டாட்டமும் சிறந்த உணவிலிருந்துதான் தொடங்குகின்றது. Sony VIZHA மூலம் அந்த கொண்டாட்டம் இன்னும் பெரியதாகவும், சிறப்பாகவும் மாறியிருக்கிறது.

MasterChef பயணத்தின் ஒரு பகுதியாக இருந்ததால் உணவு எப்படி மக்களை ஒன்றிணைக்கிறது, உரையாடல்களை உருவாக்குகிறது மற்றும் மறக்க முடியாத நினைவுகளை உருவாக்குகிறது என்பதை நேரடியாக பார்த்திருக்கிறேன்.

Celebrity MasterChef Tamil அந்த உணர்வை இன்னும் ஒரு படி மேலே கொண்டு செல்கின்றது. சமையலின் மகிழ்ச்சி தமிழ் உணவுகளின் வளமான சுவைகள், நமது உணவுடன் இணைந்திருக்கும் கதைகள், பாரம்பரியங்கள் மற்றும் உணர்வுகள் அனைத்தையும் இந்த நிகழ்ச்சி ஒன்றாக கொண்டுவருகின்றது.

இந்த அழகான பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்”

Celebrity MasterChef தமிழ் விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *