
காஞ்சிபுரம் பகுதியில் 500 கி.மீ இயற்கை எரிவாயு குழாய் அமைக்கும்
பணியை நிறைவு செய்த திங்க் கியாஸ்
——
இந்த ஆண்டு இறுதிக்குள் 550 கி.மீ. மேல் விரிவுபடுத்த இலக்கு
——
- 10,125-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு இணைப்பு
- 52 சிஎன்ஜி நிலையங்களுடன் தூய்மையான எரிசக்தி வினியோகம்
- சிஎன்ஜி நிலையங்களின் எண்ணிக்கையை 70 ஆக உயர்த்தவும் திட்டம்; இதன் மூலம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்பெறும்
காஞ்சிபுரம், ஜூன் 9,2026: இந்தியாவின் முன்னணி நகர எரிவாயு வினியோக நிறுவனங்களில் ஒன்றான திங்க் கியாஸ், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பை விரிவுபடுத்தி உள்ளதாக இன்று அறிவித்தது.
வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலை நுகர்வோருக்கு தூய்மையான எரிபொருளை வழங்குவதற்காக, 500 கிலோமீட்டருக்கும் மேற்பட்ட ஸ்டீல் மற்றும் MDPE குழாய்கள் அமைக்கும் பணியை இந்நிறுவனம் வெற்றிகரமாக முடித்துள்ளது. வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த ஆண்டு இறுதிக்குள்குழாய் பதிக்கும் பணியை550 கி.மீ மேல்விரிவுபடுத்தவும், குழாய் மூலம் எரிவாயுபெறும் வீடுகளின் எண்ணிக்கையை 10,125-ல் இருந்து 20,000 ஆக உயர்த்தவும் இலக்கு நிர்ணயித்துள்ளது.
தற்போது இந்நிறுவனம் 52 சிஎன்ஜி நிலையங்களை இயக்கி வருகிறது. அடுத்த ஆண்டுக்குள் இதனை 70 நிலையங்களாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பயனடையும் என்பதோடு, தூய்மையான போக்குவரத்து முறைக்கு மாறுவதற்கும் இது பெரும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
திங்க் கியாஸ் நிறுவனம் கடந்த 2021-ம் ஆண்டு முதல் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள நுகர்வோருக்கு சேவைகளை வழங்கி வருகிறது. மேலும் இயற்கை எரிவாயு எளிதாக கிடைப்பதை உறுதி செய்ய தனது உள்கட்டமைப்பை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில், ஸ்டீல் மற்றும் MDPE குழாய் அமைப்புகள், சிஎன்ஜி நிலையங்கள் மற்றும் வாடிக்கையாளர் இணைப்புகளில் அதிக முதலீடு செய்துதனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது.
இப்பகுதிக்கான அங்கீகரிக்கப்பட்ட எரிவாயு வினியோக நிறுவனமாக செயல்படும் திங்க் கியாஸ், பிஎன்ஜி மற்றும் சிஎன்ஜி போன்ற தூய்மையான எரிபொருட்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் அரசின் முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கிறது. அதே வேளையில் வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தடையற்ற மற்றும் நம்பகமான எரிசக்தி கிடைப்பதையும் உறுதி செய்கிறது. நுகர்வோர்கள் திங்க் கியாஸ் இணையதளம், வாடிக்கையாளர் சேவை மையங்கள், அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் அல்லது கட்டணமில்லா உதவி எண்(18002021999) மூலம் வீட்டு எரிவாயு இணைப்பிற்கு எளிதாக விண்ணப்பிக்கலாம். தற்போது ஸ்ரீபெரும்புதூர், வல்லம், கேளம்பாக்கம், படூர், நாவலூர், தாழம்பூர், தையூர், ஏகாட்டூர், திருப்போரூர், பெரும்பாக்கம், ஓஎம்ஆர் சாலை ஆகிய பகுதிகளில் பிஎன்ஜி சேவைகள் கிடைக்கின்றன. தாம்பரம், முடிச்சூர், சோழிங்கநல்லூர் மற்றும் மொளச்சூர் ஆகிய பகுதிகளில் குழாய் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பெட்ரோலியம்மற்றும்இயற்கைஎரிவாயுஒழுங்குமுறைவாரியத்தின் (PNGRB) ஆதரவுடன், மாநில அரசு அதிகாரிகளும் இணைந்து. முன்னெடுத்துள்ளமுக்கியமுயற்சிகளில்ஒன்றாக, அங்கீகரிக்கப்பட்டநகரஎரிவாயுவிநியோகநிறுவனம் (City Gas Distributor) குறிப்பிட்டபகுதியில்PNG(PipedNaturalGas)இணைப்புவசதிகிடைக்கிறதுஎன்பதைஉறுதிப்படுத்தியவுடன்,அந்தப்பகுதியை“LPGஇல்லாமண்டலம்“(LPGFreeZone)எனஅறிவிப்பதுஇடம்பெறுகிறது.இந்தமுயற்சி,காஞ்சிபுரம்மற்றும்செங்கல்பட்டுமாவட்டங்களில்திங்க்கியாஸ்நிறுவனத்தால்சிறப்பாகசெயல்படுத்தப்பட்டுவருகிறது.
இந்தத்திட்டம்,பாதுகாப்பான,வசதியானமற்றும்நிலைத்தன்மைகொண்டஎரிசக்திபயன்பாட்டைஊக்குவிப்பதோடு,உள்கட்டமைப்புவசதிஏற்கனவேஉள்ளபகுதிகளில்PNGபயன்பாட்டைஅதிகரிக்கவும்உதவுகிறது.
திங்க்கியாஸ், சந்தைப்படுத்தல் (Marketing) மற்றும்வீட்டுஉள்கட்டமைப்புஎரிவாயுகுழாய் (HouseholdPlumbing)பணிகளுக்கானதொழில்நுட்பநிபுணர்கள்/உதவியாளர்கள்உள்ளிட்டபணிகளுக்காகசுமார்500களப்பணியாளர்களுக்குஉடனடிவேலைவாய்ப்புகளைஉருவாக்கிவருகிறது. பணியிடம்காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, இராமநாதபுரம், வேலூர்மற்றும்திருப்பத்தூர்மாவட்டங்களில்இருக்கும்.ஆர்வமுள்ளவிண்ணப்பதாரர்கள்careers@think-gas.comஎன்றமின்னஞ்சல்முகவரிமூலம்விண்ணப்பிக்கலாம்அல்லது1800-2021-999என்றஎண்ணைதொடர்புகொள்ளலாம்.
இந்நிகழ்ச்சியில் பேசிய திங்க் கியாஸ் நிறுவனத்தின் காஞ்சிபுரம் மண்டலத் தலைவர் திருக்குமரன் என்.டி. அவர்கள் கூறியதாவது:”எங்களது இயற்கை எரிவாயு குழாய் கட்டமைப்பு மற்றும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து விரிவடைந்து வருவது, நம்பகமான மற்றும் தூய்மையான எரிசக்தியாக இயற்கை எரிவாயு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதைக் காட்டுகிறது. உள்கட்டமைப்புகளில் தொடர்ச்சியான முதலீடுகள், சிஎன்ஜி கட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் ‘எல்பிஜி இல்லாத பகுதிகள்’ போன்ற முயற்சிகள் மூலம், இப்பகுதியில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தூய்மையான எரிசக்தி எளிதாகக் கிடைப்பதை உறுதி செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அதேவேளையில், இந்தியாவின் நீண்டகால எரிசக்தி மாற்ற இலக்குகளுக்கும் நாங்கள் தொடர்ந்து ஆதரவளிக்கிறோம்.” என்று தெரிவித்தார்.
ஆர்டிஓ (RTO) தரவுகளின்படி, காஞ்சிபுரம்மற்றும்செங்கல்பட்டுமாவட்டங்களில்சுமார் 30,000 எல்பிஜிஆட்டோக்கள்சிஎன்ஜி (CNG)எரிபொருளுக்குமாற்றப்படக்கூடியநிலையில்உள்ளன. இந்தமாற்றத்திற்கானமொத்தசெலவு ₹26,000 ஆகும். இதில், THINK Gas நிறுவனம் ₹8,000 மானியமாகவழங்குவதால், ஆட்டோஉரிமையாளர்கள்செலுத்தவேண்டியதொகை ₹18,000 ஆகக்குறைகிறது.சிஎன்ஜிக்குமாறுவதன்மூலம், ஓட்டுநர்கள்எரிபொருள்செலவில்40% வரைசேமிக்கமுடியும். இதன்மூலம்மாதத்திற்குசுமார்₹6,000 முதல் ₹7,500 வரைசேமிப்புகிடைக்கிறது. இதனால், அவர்கள்செய்தமுதலீட்டை2 முதல் 3 மாதங்களுக்குள்மீட்டெடுக்கமுடியும்.
திங்க் கியாஸ் நிறுவனம் தகுதியான இடங்களில் பிரத்யேக CNG எரிபொருள் நிலையங்களை அமைப்பதற்கான டீலர்ஷிப் (CODO) வாய்ப்பை வழங்குகிறது. இது ஒரு சிறந்த நீண்ட காலத் தொழில் வாய்ப்பாகும். தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், நகர்ப்புறங்கள் மற்றும் நகர எல்லைக்குள் அமையும் பொருத்தமான இடங்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும்.
இன்றைய பாரம்பரிய எரிபொருட்களில் மிகவும் தூய்மையான எரிபொருளாக இயற்கை எரிவாயு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மற்ற வழக்கமான எரிபொருட்களுடன் ஒப்பிடுகையில், இது மிகக் குறைந்த அளவிலேயே புகையை வெளியிடுகிறது, இதனால் காற்றின் தரம் மேம்பட உதவுகிறது. மேலும், வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்துத் துறைகளுக்கு இது பாதுகாப்பான, வசதியான மற்றும் தடையற்ற எரிசக்தி தீர்வை வழங்குகிறது. தொடர்ச்சியான உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வாடிக்கையாளர்களைச் சென்றடையும் முயற்சிகள் மூலம், தூய்மையான எரிபொருட்களின் பயன்பாட்டை விரைவுபடுத்துவதற்கும், சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் திங்க் கியாஸ் நிறுவனம் உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.
திங்க் கியாஸ் பற்றி: ஏஜி&பி பிரதம் மற்றும் திங்க் கியாஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து உருவாக்கிய “திங்க் கியாஸ்” நிறுவனம், இந்தியாவின் நகர எரிவாயு வினியோக வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் வழங்கிய 19 உரிமங்களை நாங்கள் பெற்றுள்ளோம். இதன் மூலம் ஆந்திரா, பீகார், இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய 10 மாநிலங்களில் உள்ள 49 மாவட்டங்களில், நகர எரிவாயு வினியோக உள்கட்டமைப்பை பிரத்தியேகமாக உருவாக்கி, இயற்கை எரிவாயுவை வழங்கி வருகிறோம்.
எங்களது நகர எரிவாயு வினியோக கட்டமைப்பு மூலம், வாகனங்களின் பயன்பாட்டிற்கான அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவையும், வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு குழாய் மூலம் வழங்கப்படும் இயற்கை எரிவாயுவையும் வினியோகிக்க உள்ளோம். அடுத்த சில ஆண்டுகளில், எங்களது வினியோக வலையமைப்பு சுமார் 24,000 இன்ச்-கி.மீ நீளமுள்ள ஸ்டீல் குழாய்கள், 2000-க்கும் மேற்பட்ட சிஎன்ஜி நிலையங்கள் ஆகியவற்றைக் கொண்டு, 3,24,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கியதாக இருக்கும்; மேலும் 10 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும்.
இந்தியாவில் புதிதாகத் தொடங்கப்படும் நகர எரிவாயு வினியோக வர்த்தகத்தில், திங்க் கியாஸ் நிறுவனம் தான் அதிகளவிலான அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றுள்ளது. ஐ-ஸ்கொயர்ட் கேபிடல் மற்றும் ஜப்பானிய நிறுவனங்களான ஒசாகா கியாஸ், ஜாயின், சுமிட்டோமோ கார்ப்பரேஷன் மற்றும் கொனோய்கே டிரான்ஸ்போர்ட் ஆகியவை எங்களது முக்கிய முதலீட்டாளர்களாக உள்ளனர்.
பாதுகாப்பு, சுற்றுச்சூழல்-சமூகம்-நிர்வாகம், சந்தைப்படுத்தல், வாடிக்கையாளர் உறவு மேலாண்மை, கொள்முதல், நிலைத்தன்மை மற்றும் இடர் மேலாண்மை உள்ளிட்ட அனைத்து வணிக நடைமுறைகளிலும் எங்களது சிறப்பான பங்களிப்பு மற்றும் முயற்சிகளுக்காகப் பல்வேறு தொழில் மன்றங்களில் எங்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.