கலைஞர் தொலைக்காட்சியில் மீண்டும் அவதரித்த தெய்வமகள்

கலைஞர் தொலைக்காட்சியின் அடுத்த அறிவிப்பாக மக்களின் மனம் கவர்ந்த இரு பிரம்மாண்ட நெடுந்தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஒன்று தான் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து பல்வேறு விருதுகளை குவித்த “தெய்வமகள்”.

ச.குமரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் “தெய்வமகள்” நெடுந்தொடரில் வாணி போஜன், கிருஷ்ணா, ரேகா கிருஷ்ணப்பா, சபிதா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கிருஷ்ணாவுக்கும், அவரது அண்ணியான ரேகாவுக்கும் இடையே நடக்கும் பூர்வீக சொத்து பிரச்சனையை மையப்படுத்தி விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் நகரும்படி கதையை உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்த தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 7:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
