விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன், மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில், நடிகர்கள் விஜய் ஆண்டனி, மிர்ணாளினி ரவி நடிப்பில் வெளிவர இருக்கும் ‘ரோமியோ’ படத்தின் முதல் பாடல் ‘செல்லக்கிளி’ இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் மூலம் பரத் தனசேகர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.  

Share the post

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன், மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில், நடிகர்கள் விஜய் ஆண்டனி, மிர்ணாளினி ரவி நடிப்பில் வெளிவர இருக்கும் ‘ரோமியோ’ படத்தின் முதல் பாடல் ‘செல்லக்கிளி’ இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் மூலம் பரத் தனசேகர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.  

படத்தில் இருந்து வெளியாகியுள்ள தனது முதல் பாடல் குறித்து பரத் தனசேகர் பேசியிருப்பதாவது, ”என் அன்பு நண்பர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில், நடிகர்கள் விஜய் ஆண்டனி, மிர்ணாளினி ரவி நடிப்பில் வெளிவரவிருக்கும் ’ரோமியோ’ திரைப்படத்திற்கு நான் இசையமைப்பாளராகப் பணிபுரிந்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.ஆன்மாவைத் தூண்டும் ‘செல்லக்கிளி’ பாடலை விஜய் ஆண்டனி, ஹேமந்த் பிரகாஷ், ஜெனிஃபர் ராஜசேகர் ஆகியோர் எழுதி இருக்கின்றனர்.

இந்தப் படத்திற்காக முதன் முதலாக இசையமைத்த ட்யூன் இதுதான். மிகவும் அன்புடனும் நம்பிக்கையுடனும் இந்தப் பாடலை உருவாக்கியுள்ளோம்.  இந்தப் பாடலுக்கு பாடகர் ஆதித்யா ஆர்.கேவின் குரல் உயிர் கொடுத்துள்ளது.  இந்தப் பாடலின் சிறப்பு என்னவென்றால் லைவாக அழகிய புடாபெஸ்ட் சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவில் ஒலிகளை இந்தப் பாடலுக்குப் பயன்படுத்தியுள்ளோம். இந்த இசை ’செல்லக்கிள்ளி’ பாடலுக்கு உயர்தரத்தை கொடுத்துள்ளது. இந்தப் பாடல் எனது இசை வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல். மேலும், இசையமைப்பாளராக எனது முதல் படம் இது என்பதால் பொறுப்பாகவும் அதே சமயம் உற்சாகமாகவும் இருக்கிறேன். இந்தப் படத்தின் ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. அவர்களின் முழுஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. அவர்கள் எங்கள் மீதுவைத்த நம்பிக்கை மிகப்பெரிய விஷயம்” என்றார்.  

பாடல் குறித்து அவர் மேலும் பேசியிருப்பதாவது, “’செல்லக்கிளி’ பாடல் இந்தப் படத்தின் சாராம்சத்தை பிரதிபலிப்பது மட்டுமல்லாமல், எனது இதயத்திலும் தனி இடம் இந்தப் பாடலுக்கு உண்டு. இந்தப் பாடலுக்குத் திறமையான எனது குழு, முழு ஒத்துழைப்பையும் கொடுத்துள்ளது. இந்தப் பாடலின் ஃபைனல் ரிசல்ட் அற்புதமாக வந்துள்ளது. மனிதர்களின் உணர்வுகளை மட்டும் பிரதிபலிக்காமல் வலுவான அன்பையும் இது உணர்த்தும். மெல்லிசை, தாளம் மற்றும் உணர்ச்சி ஆழத்தாலும் அன்பின் வலிமையாலும் ரசிகர்களைக் கவர்ந்திழுப்பதை இந்தப் பாடல் நோக்கமாகக் கொண்டுள்ளது. கதைசொல்லலை மேம்படுத்தும் ஆற்றல் இசைக்கு உண்டு என்று நான் நம்புகிறேன். ’செல்லக்கிளி’ இந்த அனுபவத்தை பார்வையாளர்களுக்குக் கொடுக்கும்.  

’ரோமியோ’ படத்திற்கு அறிமுக இசையமைப்பாளராக இருப்பது ஒரு சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது. மேலும் முழு படக்குழுவினரும் வழங்கிய ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுக்கு நன்றி. இந்த வாய்ப்பு எனது கலை அடையாளத்தை வெளிப்படுத்தவும் இசையின் மூலம் கதை சொல்லும் முறையையும் எனக்கு கற்றுக் கொடுத்தது. ’செல்லக்கிளி’ பாடலுக்கு ரசிகர்கள் எப்படி வரவேற்புக் கொடுக்கப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறோம். இந்த வாய்ப்புக்கு நன்றி. ’ரோமியோ’ படத்தின் வெற்றிக்கு எனது இசையும் முக்கிய காரணமாக இருக்கும் என்பதில் மகிழ்ச்சி” என்றார்.

ரோமியோ திரைப்படத்தை தமிழகம் எங்கும்
ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியீடுSong Link – https://youtu.be/-5f2-r8zMsA

Thanks & Regards

Rekha

Kindly mail us the link to the following mail id

rekhaprconsultant@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *