LIGHTZ ON நடத்திய ஐந்தாவது வருடம் ஒரு நிமிட குறும்பட விருது வழங்கும் விழா 2023 சென்னையில் உள்ளAlliance Française of Madras Nungambakkam -ல் சிறப்பாக நடந்து முடிந்தது.

Share the post

LIGHTZ ON நடத்திய ஐந்தாவது வருடம் ஒரு நிமிட குறும்பட விருது வழங்கும் விழா 2023 சென்னையில் உள்ளAlliance Française of Madras Nungambakkam -ல் சிறப்பாக நடந்து முடிந்தது.

பல குறும்பட இயக்குனர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது, இதில் இந்த வருடம் வெற்றி பெற்ற படங்களை கொடுத்த இயக்குனர்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் பலர் பங்கு பெற்று சிறப்பு சேர்த்தனர்..

ராட்சசன் மற்றும் மரகத நாணயம் உள்ளிட்ட திரைப்படங்களின் தயாரிப்பாளர் டெல்லி பாபு அவர்கள், டாடா திரைப்பட இயக்குனர் கணேஷ் கே பாபு, அயோத்தி திரைப்பட இயக்குனர் மந்திரமூர்த்தி, ஆகஸ்ட் 16 1947 திரைப்பட இயக்குனர் பொன்குமார், கழுவித்தி முருகன் திரைப்பட இயக்குனர் கௌதம் ராஜ், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், நடிகர் சௌந்தர்ராஜன்,நடிகர் டேனி, விஜய் டிவி புகழ் இயக்குனர் தாம்சன், BLACK SHEEP FOUNDER RJ விக்னேஷ்காந்த் மற்றும்
Singer பத்மலதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு குறும்பட இயக்குனர்களுக்கு விருதுகளை அளித்தனர் ..

அடுத்த வருடம் இன்னும் பெரிதாய் இந்த குறும்பட விழா நடக்கும் என்றும் இந்த LIGHTZ ON விருது சர்வதேச விருதுகளாக மாற்றப்படும் என்றும் LIGHTZ ON CEO LOGANATHAN RS பேசி உள்ளார்..

ஒரு நிமிடத்தில் குறும்படமா என்ற கேள்வியும் அதற்கான பதிலும் திரையுலக பிரபலங்கள் மற்றும் புதியாய் திரைத் துறையில் முயற்சி செய்பவர்களுக்கு இடையே பெரிய பாராட்டைப் பெற்று வருகிறது

மற்றும் SOUTH INDIA FIRST ONE MINUTE SHORTFILM AWARDS என்ற பெருமை நம் தமிழ்நாட்டின் நிறுவனமான LIGHTZ ON – க்கு கிடைத்துள்ளது..

இந்த வருடம் இரண்டு மலேசியா தமிழ் குறும்படங்களும் ஒரு மலையாள குறும்படமும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *