கலைஞர் தொலைக்காட்சியில் கவின் நடிக்கும் “டாடா” – மே தின சிறப்பு திரைப்படம்..!.

Share the post

கலைஞர் தொலைக்காட்சியில் கவின் நடிக்கும் “டாடா” – மே தின சிறப்பு திரைப்படம்..!
கலைஞர் தொலைக்காட்சியில் உழைப்பாளர் தினமான மே 1-ஆம் தேதி புத்தம் புதிய திரைப்படங்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக இருக்கிறது.
அதன்படி வருகிற திங்கள் காலை 8.30 மணிக்கு நடிகர் அஜித்குமார் பிறந்தநாள் கொண்டாட்டமாக அஜித் என்கிற சிறப்பு நிகழ்ச்சியும், காலை 9:00 மணிக்கு திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் சிரிக்க வைக்கும் கலகலப்பான “சிறப்பு பட்டிமன்றமும்”, காலை 10 மணிக்கு ஆர்யா, சுந்தர்.சி, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா நடிப்பில் “அரண்மனை 3” மிரட்டலான திகில் திரைப்படமும் ஒளிபரப்பாக இருக்கிறது.
பிற்பகல் 1.30 மணிக்கு கவின், அபர்ணா தாஸ், பாக்யராஜ், விடிவி கணேஷ், ஹரிஷ் நடிப்பில் திரைக்கு வந்து, வசூலை வாரிக் குவித்த “டாடா” சூப்பர்ஹிட் திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது, கணேஷ் கே பாபு இயக்கியிருக்கும் இந்த படத்தில், தன் குழந்தைக்கு தாயாகவே மாறி தாலாட்டு பாடும் தந்தையாக கவின் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் மாலை 5:00 மணிக்கு “பொன்னியின் செல்வன் 2” படத்தின் சிறப்பு நிகழ்ச்சியும் ஒளிபரப்பாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *