மாருதி சிறிய வடிவிலான NEXA சர்வீஸ் பணிமனை உடன் நகர்புறமல்லாத மையங்களுக்கு NEXA அனுபவத்தை சுஸூகி விரிவுப்படுத்துகிறது

Share the post

மாருதி சிறிய வடிவிலான NEXA சர்வீஸ் பணிமனை உடன் நகர்புறமல்லாத மையங்களுக்கு NEXA அனுபவத்தை சுஸூகி விரிவுப்படுத்துகிறது

சென்னை: மாருதி சுஸூகி தனது சிறிய வடிவிலான NEXA சர்வீஸ் பணிமனைகளை நாடு தழுவிய அளவில் தொடங்குவதாக அறிவித்தது. இந்த உத்திமுறை நகர்வின் மூலம், நகர்புறம் அல்லாத மையங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு புகழ்பெற்ற NEXA சேவை அனுபவத்தை வழங்குவதை நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது. முதல் ஆறு மையங்கள் அட்டெலி (ஹரியானா), சார்க்கி தாத்ரி (ஹரியானா), பாங்குரா (மேற்கு வங்கம்), தாஹோத் (குஜராத்), நிர்மல் (தெலுங்கானா), மற்றும் ஊட்டி (தமிழ்நாடு) ஆகிய இடங்களில் உத்திமுறை ரீதியாக அமைந்துள்ளன.
விற்பனைக்கு பிந்தைய சேவையை மேம்படுத்துவதற்கான நிறுவனத்தின் பொறுப்பினை முன்னிலைப்படுத்தி, மாருதி சுஸூகி இந்தியா லிமிடெட் நிறுவத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை செயலதிகாரியுமான திரு. ஹிஷாஷி டாகேயுச்சி, கூறுகையில், “முடிந்தவரை பலருக்கு ‘ஜாய் ஆஃப் மொபிலிட்டி’ வழங்குவதே எங்கள் நோக்கம், மேலும் விற்பனைக்குப் பிந்தைய சேவை என்பது மகிழ்ச்சிகரமான கார் உரிமை அனுபவத்தை உருவாக்குவதற்கான முக்கியமான தூணாகும். நகர்ப்புற மற்றும் நகர்ப்புறம் அல்லாத மையங்களில் நுகர்வோர் விருப்பத்தேர்வுகளில் அதிகரித்துவரும் ஒற்றுமைகளுடன், இரு பிராந்தியங்களிலிருந்தும் எங்கள் NEXA சலுகைகளுக்கான ஆர்வம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. எங்களின் NEXA விற்பனையில் ஏறக்குறைய 30% நகர்புறம் அல்லாத மையங்களில் இருந்து வருகிறது. இந்த வகை வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதற்காக, நாங்கள் இந்த சிறிய வடிவிலான NEXA சர்வீஸ் பணிமனைகளை அறிமுகம் செய்கிறோம். FY 2024-25-இன் இறுதியில் அத்தகைய 100 பணிமனைகளை அமைப்பது எங்களின் இலக்காகும்.” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “எங்கள் விற்பனை மற்றும் தயாரிப்பு வரம்பை நாங்கள் தொடர்ந்து விரிவுபடுத்துவதால், நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை நெருங்கி செல்ல வேண்டும். நாங்கள் எங்கள் சேவை வலையமைப்பை விரிவுபடுத்தி, கார் உரிமை அனுபவத்தை மேலும் மேம்படுத்த, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட புதிய திட்டங்களை ஆராய்வோம்.”
NEXA சர்வீஸ் பணிமனைகளை சிறிய திட்ட நீட்டிப்புகள், நகர்புறம் அல்லாத மையங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு பிரீமியம் சேவை அனுபவத்தை வழங்கும் NEXA தத்துவத்தை உள்ளடக்கியது. 75 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டு, இந்த ஒர்க் ஷாப்புகள் வாடிக்கையாளர் வசதிக்காக பிரத்யேக முன் அலுவலகம், வாடிக்கையாளர் ஓய்வறை, சர்வீஸ் வசதி மற்றும் பார்க்கிங் வசதி ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இந்த ஒர்க் ஷாப்களில் அவ்வப்போதான பராமரிப்பு மற்றும் வழக்கமான பழுதுகள் போன்ற பொதுவான சர்வீஸ்களை வாடிக்கையாளர்கள் பெறலாம்.
2017-இல் NEXA சர்வீஸை அறிமுகப்படுத்தியது முதல், மாருதி சுஸூகி நாடெங்கிலும் தனது வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதற்கான 390க்கும் மேற்பட்ட சர்வீஸ் டச்பாயின்ட்களுடன் தனது இருப்பினை விரிவுபடுத்தியுள்ளது.
வெளியிடுவோர்:
கார்ப்பரேட் கம்பயூனிகேஷன்
மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட்
1, நெல்சன் மண்டேலா ரோடு,
வசந்த் குன்ஜ், புதுடெல்லி, போன்: 91-11-4678 1000
ஈமெயில்: corp.comm@maruti.co.in | டுவிட்டர்: @Maruti_Corp
வெப்சைட்: www.marutisuzuki.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *