“சரண்டர்” திரைப்பட விமர்சனம் !

Share the post

“சரண்டர்”
திரைப்பட விமர்சனம்

நடிப்பு : – தர்ஷன், லால், சுஜித், முனிஷ் காந்த், பதின் குமார்,

அருள் டி சங்கர், சுந்தரேஸ்வரன், கௌசிக் மற்றும் பலர் நடித்துள்ளனர்…

இயக்கம்: கௌதமன் கணபதி.

இசை: விகாஸ் பாடிசா.

ஒளிப்பதிவு :-
மெய்யேந்திரன்

படத்தொகுப்பு:-
ரேணு கோபால்

தயாரிப்பு: அப்பீட் பிக்சர்ஸ் – வி.ஆர்.வி.குமார்

காவல் நிலையத்தில் இருந்து துப்பாக்கி ஒன்று காணாமல் போகின்றன.

அந்த துப்பாக்கியை யார்
எடுத்திருப்பார்கள் என்பதை வைத்து கதை ட்ராவல் ஆகிறது…

அந்த துப்பாக்கியை கண்டுபிடிக்கும் வேலையில் பயிற்சி துணை ஆய்வாளரான நாயகன் தர்ஷன்

தலைமையில் குழு ஈடுபடுகிறார்கள். நான்கு நாட்களுக்குள் காணாமல் போன

துப்பாக்கியை கண்டுபிடித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது.

தர்ஷனுக்கு, ரவுடி சுஜித் மூலம் ஒரு பிரச்சனை வருகிறது.

அந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேண்டும்,

காணாமல் போன துப்பாக்கியை கண்டுபிடித்தாக வேண்டும், என்ற

இக்கட்டான சூழ்நிலைகளை அவர் எப்படி சமாளித்து பிரச்சனைகளுக்கு

தீர்வு காண்கிறார், என்பதை பரபரப்பாக சொல்வது தான் ‘சரண்டர்’.
கதைக்களம்.

நாயகனாக நடித்திருக்கும் தர்ஷனுக்கு காவல்துறை சீறுடை கச்சிதமாக

பொருத்தமா, கம்பீரமாக இருக்கிறார். நடிப்பிலும் நல்ல

முன்னேற்றம் கண்டுள்ளார். தர்ஷன், ஆக்‌ஷன் காட்சிகளிலும்,

உணர்வுப்பூர்வமான காட்சிகளில் ஸ்கோர் செய்து‌ அசத்தி
யுள்ளார்.

நல்லவனாக இருப்பதால் இந்த உலகத்தில் வாழ முடியாது, என்பதை தெளிவாக தெரிந்தது பிரதிபலிக்கும்

கதாபாத்திரத்தில் தலைமை காவலராக நடித்திருக்கும் லால்,

தனது அனுபவம் வாய்ந்த நடிப்பு மூலம்

கதாபாத்திரத்திற்கும், படத்திற்கும் மிகப்பெரிய பலத்தை

சேர்த்துள்ளார்.இந்த படத்திற்கு முதல் நாடியாக வலம் வருகிறார்.

வில்லனாக நடித்திருக்கும் சுஜித், ரவுடி

கதாபாத்திரத்தில் மிக பெரிய மிரட்டல் கொடுத்து புதிய கோணத்தில் ரவுடி

பாத்திரத்தில். எதிரிகளை பந்தாடி வேட்டையாடுதல் புதுமையாக ஸ்கோர்செய்து, போலீஸ்காரர்களைமிரட்டுவதும், ஆட்களை போட்டுத்தள்ளுவதில்மிக சாமார்யாத்தால் அவரது கையாள்வதில் நடவடிக்கைகளை, அளவான நடிப்பின்

மூலம் கனகச்சிதமாக மக்கள் மனதில் சுஜித் இடம் பிடித்து விடுகிறார்.

முனிஷ்காந்த் வரும் காட்சிகள் சிரிக்க வைக்கிறது. பாடினி குமார், அருள் டி.சங்கர், நடிகரா நடித்துள்ளார் மன்சூர் அலிகான், கெளசிக்,

சுந்தரேஸ்வரன் என அனைத்து நட்சத்திரங்களும்

தங்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன் இரவு நேர காட்சிகளையும்,

சண்டைக்காட்சிகளை மிக சிறப்பாக படமாக்கியுறள்ளார்.

இசையமைப்பாளர் விகாஷ் படிஷாவின் பின்னணி இசை படத்தின்

பரபரப்பையும், விறுவிறுப்பையும் கொடுத்திருக்கிறார்.

சாதாரண விஷயத்தை கூட மிக சுவாரஸ்யமாக

சொல்ல முடியும் என்பதை மிக நேர்த்தியாக
படத்தொகுப்பாளர் ரேணு கோபால்

தனது நேர்த்தியான படத்தொகுப்பு மூலம்.
செய்தது படத்திற்கு பெரிய பலம்.

எழுதி இயக்கியுள்ளார் கவுதமன் கணபதி, மிக சாதாரணமான ஒரு சம்பவத்தை

வைத்துக் கொண்டு, பரபரப்பான திரைக்கதை மற்றும் காட்சிகள் மூலம்,

முழுமையான ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தை நமக்கு கொடுத்திருக்கிறார்.

காவல்துறை இயங்கும் விதம், காவல் நிலையத்தில் இருக்கும் ஈகோ மற்றும் அதன் மூலம்

ஏற்படும் பிரச்சனைகள் ஆகியவற்றை இயல்பாக, நம்பகத்தன்மையுடன் சொல்லியிருப்பது படத்திற்கு மிக கூடுதல் பலமும் சுவாரஸ்யம் கொடுத்துள்ளாது.

அடுத்த காட்சியில் என்ன நடக்கும் ? என்பதை எதிர்பார்ப்புடன் படத்தை நகர்த்தி சென்ற இயக்குநர்

கவுதமன் கணபதி, படம் நேரம் போனதே

தெரியாதபடி படத்துடன் பார்வையாளர்களை பதற்றத்துடன் பயணிக்க வைத்துள்ளார்.

படம் பார்த்தத்தில், “சரண்டர் “‌ தர்ஷன் துப்பாக்கியால் அனைவருரையும் சரண்டராக்கி
விடுகிறார் … ஜாக்கிரதை இருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *