‘பச்சை விளக்கு’ படத்திற்கு சிறப்புக் காட்சிகள்!தமிழக அரசு பிறப்பித்த அரசாணை !!

Share the post

டிஜிதிங்க் மீடியா ஒர்க்ஸ் பட நிறுனத்தின் சார்பில் டாக்டர் சி.மணிமேகலை தயாரிப்பில், டாக்டர் மாறன் எழுதி இயக்கிய படம் ‘பச்சை விளக்கு’.

இந்தப் படத்தில் டாக்டர் மாறன், ‘அம்மணி’ புகழ் மகேஷ், தீஷா, தாரா, ‘மெட்ராஸ்’ புகழ் நந்தகுமார், இமான் அண்ணாச்சி, மனோபாலா, நாஞ்சில் விஜயன், மற்றும் சிறப்பு தோற்றத்தில் கன்னட நடிகை ரூபிகா உட்பட பலர் நடித்துள்ளனர்.

‘வேதம் புதிது’ தேவேந்திரன் இசையமைக்க, எஸ்.வி. பாலாஜி ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பை கவனித்திருக்கிறார். இந்தப் படத்திற்கு திரைப்படத் தணிக்கைக்கு குழு யு சான்றிதழ் வழங்கி உள்ளனர்.

ஒவ்வொருவரும் சாலை விதிகளை எப்படி பின்பற்ற வேண்டும், அப்படி சாலை விதிகளை மீறுவதால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகிறது என்பதை சமூக நோக்கத்துடன் எடுத்து கூறிய திரைப்படம் இது.

இந்தப் படத்திற்க்கு இப்போது தமிழ்நாடு அரசு சிறப்பு காட்சிகள் வெளியிட அரசாணை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு அரசு சாலை பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இந்த ‘பச்சை விளக்கு’ திரைப்படம் முதன் முதலாக சாலை பாதுகாப்பை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என்பதாலும், பள்ளி, கல்லூரி, மாணவ – மாணவியர்கள், தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பிற சாலை பயணிகளிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாலும் வேறு எந்தத் திரைப்படத்திற்கும் கிடைக்காத கௌரவமாக இந்தப் இத்திரைப்படத்திற்கு காலை 9 மணிமுதல் 11.30 மணிவரை சிறப்புக் காட்சிகள் திரையிட அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழ்த் திரையுலக வரலாற்றில் இது போன்ற ஒன்றரை மாதம் சிறப்புக் காட்சியில் திரையிட ஒரு படத்திற்கு அனுமதி அளித்தது பெரிய கௌரவமாக திரையுலகினரால் பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தின் இசையை இயக்குனர் இமயம் பாரதிராஜா வெளியிட, திரைக்கதை மன்னர் கே.பாக்யராஜ் பெற்றுக் கொண்டார்.

இந்தப் படம் குறித்தும், படத்தின் இயக்குநர் டாக்டர் மாறன் குறித்தும் இயக்குநர் பாரதிராஜா பாராட்டி பேசியதுடன், “அரசாங்கம் எடுக்க வேண்டிய ஒரு விழிப்புணர்வு திரைப்படத்தை பொறுப்புடன் டிஜிதிங்க் நிறுவனம் தயாரித்துள்ளதாக” பாராட்டினார்.மேலும் இவ்விழாவில் பேசிய பலரும், இந்த சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் இத்திரைப்படம் பல்வேறு விருதுகளை வாங்கி குவிக்கும் என்று குறிப்பிட்டு இருந்தார்கள்.

அது போலவே ‘பச்சை விளக்கு’ திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்றுள்ளது.

மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த ‘பச்சை விளக்கு’ திரைப்படத்தை பள்ளி மாணவ – மாணவிகள், தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் பார்க்க வேண்டும் என்று டிஜிதிங்க் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் கேட்டுக் கொள்வதுடன், ‘பச்சை விளக்கு’ படத்தின் சிறப்பு காட்சிகள் வருகிற 17 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல திரையரங்குகளில் ‘திரையிட ஏற்பாடுகள் செய்து வருகிறது

மேலும் விபரங்களுக்கு
ஜி.பாலன் பி.ஆர்.ஓ.
திரைப்பட மக்கள் தொடர்பாளர்
செல்போன்: 93833 88860

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *