விஜயா மருத்துவமனையில் உறுப்பு மாற்று மற்றும் உறுப்பு தானம் பற்றிய கருத்தரங்கம்!

Share the post

சென்னை: விஜயா மருத்துவமனையின் பொன்விழாவையொட்டி உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த தொடக்க விழாவிற்கு தமிழக உறுப்பு மாற்று ஆணையத்தின் செயலர் டாக்டர் ரா.காந்திமதி கௌரவ விருந்தினராக கலந்துகொண்டார். விஜயா மருத்துவ மற்றும் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திருமதி. பி. பாரதி ரெட்டி “விஜயா மருத்துவமனையின் பொன் விழா” பற்றி எடுத்துரைத்தார். 

விஜயா மருத்துவமனை (விஜயா மருத்துவ மற்றும் கல்வி அறக்கட்டளை)யின் பொன்விழா கடந்த 12 மாதங்களாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அது முடியும் தருவாயில் 2022 நவம்பர் 25 ஆம் தேதி ஒரு முக்கியமான பொன்விழா நல் தொடக்கத்தை எமது நிறுவனர் திரு.நாகி ரெட்டி ஐயா அவர்களின் “தன்னலமற்ற சேவை நலமான சமுதாயத்திற்கு அடிப்படை” என்ற தொலைநோக்கிற்கு இணங்க முன்னிறுத்தி நடத்தி வருகிறோம். நாங்கள் (வாழ்க்கைக்கு பிறகான) உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை எங்களது மருத்துவமனைகளில் வெளி நோயாளிகள் பிரிவிற்கு  வரும்  2 லட்சத்திற்கும் அதிகமான நோயாளிகளுக்கு தெளிவாக எடுத்துரைத்து வருகிறோம்.

விழாவையொட்டி மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்றத் துறைகளில் ஏற்பட்டுள்ள மருத்துவ முன்னேற்றங்களை பற்றி அறிவுறுத்தவும், விவாதிப்பதற்குமான தொடர் மருத்துவ கல்வி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. உயிர் பிரிந்த பின் நமது உடல் தீயிற்கோ, மண்ணிற்கோ போய் சேர்வதற்கு முன் உறுப்பு தானம் செய்வதாக எடுக்கும் முடிவு வாழ்க்கை என்னும் பரிசை மற்றவர்க்கு (7 குடும்பங்கள் வரை) வழங்க ஒரு வாய்ப்பு. வாழ்க்கைக்கு பிறகான உறுப்பு தானம் செய்யலாம் என்கின்ற முடிவை குடும்பத்தினருடன் கலந்து பேசி எடுக்க வேண்டும் அப்போது தான் அவர்கள் தக்க சமயத்தில் உங்களது முடிவை நிறைவேற்றலாம். (வாழ்க்கைக்கு பிறகான) உறுப்பு தானம் செய்ய எடுத்த முடிவை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.

இந்த விழாவில் விஜயா மருத்துவமனையின் கல்வித்துறை இயக்குனர் டாக்டர் வி. கணேசன், சென்னை மருத்துவக் கல்லூரியின் சிறுநீரகவியல் இயக்குனர், பேராசிரியர் டாக்டர் என். கோபாலகிருஷ்ணன், ரேலா மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் இளங்குமரன் கலியமூர்த்தி மற்றும்   ஏராளமான மருத்துவர்களும், செவிலியர்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *