எஸ். ஆர். எம். பொதுப்பள்ளியில்விளையாட்டுப்போட்டிநடைபெற்றது

Share the post

எஸ். ஆர். எம். பொதுப் பள்ளியில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது

நந்திவரம் நெல்லிக்குப்பம் சாலையில்  உள்ள

எஸ். ஆர். எம். பொதுப் பள்ளியில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது

 கூடுவாஞ்சேரி,  ஜூலை.  22-

 நந்திவரம் நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள எஸ். ஆர். எம். பொதுப் பள்ளியில் வருடாந்திர விளையாட்டுப் போட்டி இரண்டு நாட்களாக நடைபெற்றது.

 நந்திவரம்- கூடுவாஞ்சேரி நகராட்சி நந்திவரம் நெல்லிக்குப்பம் சாலையில் அமைந்துள்ள எஸ். ஆர். எம்.,  பொதுப் பள்ளியில் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு நாட்களில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

 வியாழன் அன்று தொடக்கப் பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டியில் சர்வதேச பூப்பந்து வீராங்கனையான  செல்வி நிலா கலந்து கொண்டார்.  நேற்று நடைபெற்ற மேல்நிலைப் பள்ளிகளுக்கான விளையாட்டுப்

போட்டியில் இந்தியாவின் முதல் சூப்பர் பைக் வீரராக சாதனை படைத்த திலிப் ரோஜர்ஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

 இதில் பள்ளியின் தாளாளர் சுப்பிரமணியன்,  பள்ளியின் ஆலோசகர் டாக்டர் மாலதி,  பள்ளி முதல்வர் புவனேஸ்வரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றனர்.  இதில் பள்ளி இசைக் குழுவின் தலைமையில்

 பள்ளியின் நான்கு அணிகள் வண்ணமயமான அணிவகுப்பு சிறப்பாக நடைபெற்றது.  ஒலிம்பிக் சுடரை சிறப்பு விருந்தினர்கள் ஏற்றி வைத்து தொடர்ந்து கல்வி மற்றும் கலை பிரிவில் சாதனை படைத்த

 மாணவர்கள் சுடரை ஏந்தி வலம் வந்து ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்தனர்.

 பள்ளியில் நடைபெற்ற 170 தடகள மற்றும் கள நிகழ்ச்சிகள் 1200 மாணவர்களுக்கு  பதக்கங்களும்,  10 மாணவர்களுக்கு முதன்மை கோப்பைகள் வழங்கப்பட்டன.  நான்கு அணிகள் வண்ணமயமான

 அணிவகுப்பில்  நீல மாணிக்க அணி வெற்றி கோப்பையை வென்றது,  இரண்டு நாட்கள்  நடைபெற்ற போட்டியில் 2023- 2024  ஆண்டிற்கான  முதன்மை கோப்பையை  மரகத அணி கைப்பற்றியது.

 பட விளக்கம்.  நந்திவரம் நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள எஸ்.ஆர்.எம். பொதுப் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற  மரகத அணியினர் மற்றும் போட்டியில் பங்கேற்றவர்கள்

 வெற்றி கோப்பையுடன் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *