ஹைக்கூதிரை விமர்சனம் :-

Share the post

ஹைக்கூ என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் :-
கதைக் கரு :-
காதலை மையமாக வைத்து ஒரு வாலிபனின் கதையே இப் படத்தின் மையக் கரு .

கதையும் கதையின் போக்கும் :-
மனோ கல்லூரியில் படிக்கும் கல்லூரி மாணவன். கல்லூரியில் படிக்கும் போதே சக மாணவியைக் காதலிக்கிறார். இவர்கள் காதல் வளர்பிறை போல நாளும் வளர்கிறது. சிற்சில காரணங்களால் இவர்களின் காதல் முறிகிறது. முதல் காதலின் நினைவுகள் அதனால் ஏற்பட்ட மன வலிகள் இதனையே வாழ்க்கையின் ஓர் அங்கமாக தன் மனத்தில் சுமந்து காலத்தை ஓட்டுகிறார் மனோ.

இவருக்கு மீண்டும் வேறொரு காதல் இவர் வாழ்வில் மலர்கிறது. புதிய காதல் வாழ்வில் மலர்ந்தால் பழைய காதலின் நினைவுகள் நெஞ்சை விட்டு அகலுமா என்ன ? உண்மையான காதல் கல்லில் பொறித்த சின்னமாக நிலைத்து நிற்கும். கடந்த கால அனுபவங்கள் அவரது தற்போதைய உறவிலும் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.

இதனால் இவருக்கு இரண்டாவது காதலிலும்
பிரச்சினைகள் உருவாகின்றன.அந்தப் பிரச்சினைகளை எப்படி எதிர் கொள்கிறார் ? காதலில் தான் செய்த தவறுகளை உணர்ந்தாரா ? இறுதியில் அவரது காதல் என்னவானது ? என்பதே இந்தப் படத்தின் மீதிக் கதை .

திரை நட்சத்திரங்கள் :-
மனோ கதாபாத்திரத்தில் ஏகன் நடித்திருக்கிறார். தன்னுடைய தனித் திறமையை நன்கு வெளிப்படுத்தியிருக்கின்றார்.மாணவிகள் மட்டுமே படிக்கும் மகளிர் கல்லூரி எப்படி திடீரென்று கோ எஜிகேசனாக மாறியது ? அப்படியே மாறினாலும் இவர் மட்டும் தானா மாணவர். இதனை நம்பும்படியாக இல்லை ?

ஒரு ஒரு மாணவனாக சேரும் அவர் அறிமுகக் காட்சியே அமர்க்களம்… கல கலப்புக்கு பஞ்சம் இல்லை. தன்னைச் சுற்றி மாணவிகள் கூட்டம் இருக்க, ஆரம்பத்தில் அந்தச் சூழலை எப்படிச் சமாளிப்பது எனத் தெரியாமல் திண்டாடும் ஏகன் பின்னர் மாணவிகளோடு இணைந்து அரட்டை அடிப்பது ரசிக்கும்படியாக இருக்கின்றன.

கல்லூரி மாணவிகளோடு அரட்டை அடிப்பது , காதல் வலையில் விழுந்ததும் அவர் முகத்தில் தெரியும் உற்சாகம் , காதலியிடம் தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமும் மிக அருமை.

படத்தின் முதல் பாதியில் ஜாலியாக அவர் வலம் வருகிறார். அதே சமயத்தில் பழைய காதலின் நினைவுகளில் இருந்து வெளியேற. முடியாமல் தவிப்பதும் , புதிய உறவில் தடுமாறுவதும் இந்த மாதிரியான காட்சிகளில் உணர்வு பூர்வமாக நடித்து தன்னுடைய தனித் திறனை வெளிப்படுத்தியிருப்பது அருமை ! அவரின் இயல்பான நடிப்பு படத்திற்கு பக்க பலம். திரை உலகில் அவர் வலம் வருவார் எனவே அவரை நாம் பாராட்டலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *