PhonePe ஸ்மார்ட்ஸ்பீக்கர்கள் தமிழில் குரல் வழி பேமண்ட் அறிவிப்புகளை வழங்குகின்றன

Share the post

PhonePe ஸ்மார்ட்ஸ்பீக்கர்கள் தமிழில் குரல் வழி பேமண்ட் அறிவிப்புகளை வழங்குகின்றன

சென்னை, 07 ஜுன் 2023: தனது ஸ்மார்ட்ஸ்பீக்கர் கருவியில் குரல் வழி பேமண்ட் அறிவிப்புகள் தமிழில் வழங்கப்படுமென PhonePe இன்று அறிவித்துள்ளது. உள்ளூர் மொழிகளில் குரல் வழி அறிவிப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், இனி  வாடிக்கையாளர்கள் பேமண்ட் செய்யும் போது பெறப்பட்ட தொகையை வணிகர்கள் தாங்கள் விரும்பும் மொழியிலேயே உடனடியாக சரிபார்த்துக் கொள்ளலாம். வாடிக்கையாளர்களிடம் மொபைலைக் காட்டுங்கள் என்று கேட்கவும் வேண்டாம், பேங்க்கிலிருந்து உறுதிப்படுத்துதல் SMS வரும் வரைக்கும் காத்திருக்கவும் வேண்டாம், குறிப்பாக மிகவும் பிஸியான நேரங்களில் உங்கள் நேரம் வீணாகாது.

குரல் வழி பேமண்ட் அறிவிப்புகளைப் பெறும் வகையில், தற்போது PhonePe ஸ்மார்ட்ஸ்பீக்கர்கள் நாடு முழுவதும் 19,000 பின்கோடுகளில் வணிகர்களால் பயன்படுத்தப்படுகின்றது (நாட்டின் 90% பகுதிகளில்). தமிழ்நாட்டில் மட்டும் கிட்டதட்ட 20 லட்சம் வணிகர்களின் பரிவர்த்தனைகளை டிஜிட்டல் பரிவர்த்தனைகளாக PhonePe மாற்றியுள்ளது மேலும் அவர்கள்  அதன் QR குறியீடுகளை முதன்மையாகப் பயன்படுத்தி வருவதோடு பிற தீர்வுகளையும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இதனோடு குரல் வழி பேமண்ட் அறிவிப்புகளைத் தமிழில் அறிவிக்கும் இந்தப் புதிய அம்சத்தால்,  PhonePe for Business ஆப்பிற்குள் இனி அவர்கள் விரும்பும் மொழியிலேயே தங்களின் PhonePe ஸ்மார்ட்ஸ்பீக்கர்களைப் பயன்படுத்தலாம், எந்தக் கூடுதல் கட்டணமும் இல்லாமல். சராசரியாக, தமிழ்நாட்டில் மட்டும் மாதத்திற்கு 4.5 கோடிப் பரிவர்த்தனைகள் PhonePe ஸ்மார்ட்ஸ்பீக்கர்கள் மூலம் சரிபார்க்கப்படுவது இது மாநிலம் முழுவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருவதைக் காட்டுகிறது.

PhonePe-வின் ஆஃப்லைன் வணிகத் தலைவர் விவேக் லோசெப் இந்தப் புதிய அறிவிப்பைப் பற்றிப் பேசுகையில் கூறியதாவது, “டிஜிட்டல் பேமண்ட்டை இந்தியாவின் மிகமுக்கிய ஒன்றாக கட்டமைக்கும் வேளையில்,  தற்போது வணிகர்கள் எதிர்கொள்ளும் பல்வேறுபட்ட சிக்கல்களுக்கும் தீர்வு காண்பதே எங்களின் குறிக்கோளாகும், அதன் ஒரு பகுதியாக எங்கள் ஸ்மார்ட்ஸ்பீக்கர் சாதனங்கள் மிகச்சரியாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய விரும்புகிறோம். பேமண்ட் உறுதிப்படுத்துதலுக்கான தேவை அதிகரிக்கும் இந்தச் சூழலில், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வணிகர்களும் அவரவர் தேவைக்கேற்பவும் அவரவர் விரும்பும் மொழியில் பயன்படுத்தும் வகையிலும் இந்தச் சாதனத்தை மேம்படுத்துவதே எங்களின் குறிக்கோளாகும்.”

PhonePe ஸ்மார்ட்ஸ்பீக்கரில் வணிகர்கள் தாங்கள் விரும்பும் மொழியைத் தேர்ந்தெடுப்பது எப்படி என்பதற்கான படிப்படியான வழிகாட்டி இதோ:

  1. PhonePe for Business அப்ளிகேஷனைத் திறக்கவும்
  2. முகப்புத் திரையில் உள்ள ஸ்மார்ட்ஸ்பீக்கர் பிரிவுக்குச் செல்லவும்.
  3. ‘மொழி’ என்ற தலைப்பின் கீழ், கிடைக்கும் பல்வேறு மொழிகளில் உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்வு செய்யவும்.
  4. தேர்ந்தெடுக்கப்பட்ட மொழி சாதனத்தில் பதிவிறக்கப்படும்.
  5. தேர்ந்தெடுத்த மொழியைப் பயன்படுத்துவதற்காக சாதனம் ஆஃப் ஆகி மீண்டும் ஆன் ஆகும்.

ஸ்டோர்களில் நம்பிக்கையான மற்றும் சௌகரியமான பேமண்ட் கண்காணிப்பை வழங்கும் வகையில் கடந்த வருடம் ஸ்மார்ட்ஸ்பீக்கர்களை PhonePe அறிமுகப்படுத்தியது. மார்க்கெட்டில் பிற சாதனங்களுடன் ஒப்பிடும்போது, சிறிய அளவு, மிகச்சிறந்த பேட்டரி, இரைச்சலான சூழலிலும் தெள்ளத்தெளிவான ஆடியோ என பல்வேறு சிறப்பம்சங்கள் காரணமாக மிக நெருக்கமான கவுண்ட்டர் இடங்களிலும் கூட வணிகர்களால் இது பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கு முன்பு பெரும்பாலும் மொபைலில் வரும் SMSகளை வைத்தே பேமண்ட்டுகளை வணிகர்கள் உறுதிப்படுத்த வேண்டியிருந்தது. ஆனால், தற்போது PhonePe ஸ்மார்ட்ஸ்பீக்கர்கள் மூலம் பேமண்ட் உறுதிப்படுத்துதல் மிக எளிதானதாக அவர்களுக்கு மாறியுள்ளது.  4 நாட்கள் பேட்டரி ஆயுள், டேட்டா கனெக்ட்டிவிட்டி, பேட்டரி நிலையைக் காட்டும் LED இண்டிகேட்டர், பேட்டரி குறையும்போது ஆடியோ எச்சரிக்கை, கடைசியாகப் பெறப்பட்ட பேமண்ட்டை மீண்டும் கேட்பதற்கான பட்டன் என பல அம்சங்களுடன் PhonePe ஸ்மார்ட்ஸ்பீக்கர் கிடைக்கின்றது.

PhonePe பற்றி:

டிசம்பர் மாதம் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட PhonePe நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரும் பேமண்ட் ஆப் ஆக உருவெடுத்து நுகர்வோர் மற்றும் வணிகர்களை டிஜிட்டல்மயமாக்கலில் இணைத்துள்ளது. 46+ கோடி (460+ மில்லியன்) பதிவு செய்யப்பட்ட பயனர்களுடன், நான்கில் ஒரு இந்தியர் இப்போது PhonePe  ஆப்பை பயன்படுத்துகிறார்கள். நிறுவனம் டையர் 2,3,4 மற்றும் அதற்கு அப்பால் உள்ள இடங்களில் வசிக்கும் 3.5+ கோடி (35+ மில்லியன்) ஆஃப்லைன் வணிகர்களை வெற்றிகரமாக டிஜிட்டல் மயமாக்கியுள்ளது, இது நாட்டில் 99% பின்கோடுகளை உள்ளடக்கியது. BBPS தளத்தின் 45% பரிவர்த்தனைகளை செயலாக்குவதன் மூலம் PhonePe பாரத் பில் பே சிஸ்டத்தில் (BBPS) முன்னணியில் திகழ்கிறது. 2017 முதல் தனது தளத்தில் பயனர்கள் பாதுகாப்பாக மற்றும் வசதியாக முதலீடு செய்வதற்கான ஆப்ஷன்களை வழங்குவதன் மூலம் PhonePe நிறுவனம் நிதி சேவைகளில் அடியெடுத்து வைத்தது. அப்போதிருந்து, நிறுவனம் பல மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் காப்பீட்டுத் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது, இது ஒவ்வொரு இந்தியருக்கும் பணப் புழக்கத்தைத் அதிகரிக்கவும் சேவைகளை அணுகவும் சமமான வாய்ப்புகளை வழங்குகிறது. தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கான (2022 & 2023) டிரஸ்ட் ரிசர்ச் அட்வைசரியின் (TRA) பிராண்ட் டிரஸ்ட் அறிக்கையின் படி, டிஜிட்டல் பேமண்ட்டுகளுக்கான மிகவும் நம்பகமான பிராண்டாக PhonePe அங்கீகரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் தகவல்களுக்கு, media@phonepe.com -வை தொடர்பு கொள்ளவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *