பார்க்கிங் திரை விமர்சனம் !!

Share the post

பார்க்கிங் திரை விமர்சனம் !!

சுதன் சுந்தரம் – கே.எஸ்.சினிஷ்
ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிராத்தன நாதன், இளங்கோ மற்றும் பலர் நடித்து வெளியாய் இருக்கும் படம் பார்க்கிங்.

இசை சாம் சி எஸ்
.
அரசு ஊழியரான எம்.எஸ்.பாஸ்கர், மனைவி மற்றும் மகளோடு 10 வருடங்களாக வாடகைக்கு குடியிருக்கும் வீட்டின் மாடி பகுதியில் காதல் திருமணம் செய்துக்கொண்ட ஹரிஷ் கல்யாண் மனைவி இந்துஜா புதிதாக குடி வருகிறார்கள்.

குடி வந்த சில நாட்களில் ஹரிஷ் கல்யாண் புதிதாக கார் ஒன்றை வாங்குகிறார்.

அந்த காரை அவர் வீட்டில் இருக்கும் சிறிய இடத்தில் நிறுத்தி வைக்க, ஏற்கனவே அந்த இடத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்த எம்.எஸ்.பாஸ்கருக்கு அசவுக்கரியத்தை ஏற்படுத்துகிறது.

இதனால் பேச்சில் ஆரம்பிக்கும் மோதல், ஈகோ யுத்தமாக உருவெடுத்து நினைத்துப் பார்க்க முடியாத சம்பவங்கள் நிகழ்கிறது.

இதனால் யார் யார், எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை இப்படத்தின் கதை.

நாயகன் ஹரிஷ் கல்யாண், நடிப்பு மூலம் படத்திற்கு மிகப்பெரிய பலம.

அரசு ஊழியராக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர்,
கதாபாத்திரத்திற்கு ஏற்ற வில்லத்தனத்தை முகத்தில் காட்டி மிரட்டுகிறார். 60 வயதை நெருங்கினாலும் ஈகோவினால் இளைஞரிடம் மோதும் எம்.எஸ்.பாஸ்கரின் நடவடிக்கைகள் அடிமட்டமாக இருப்பதோடு, அவற்றை செய்யும் போது அவர் வெளிப்படுத்தும் நடிப்பு கைதட்டல் பெறுகிறது. வாழ்த்துக்கள் !!

ஹரிஷ் கல்யாணின் மனைவியாக நடித்திருக்கும் இந்துஜா, கதையோட்டத்தை வலுப்படுத்துவதற்கான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருக்கும் ரமா, மகளாக நடித்திருக்கும் பிரார்த்தனா, வீட்டு உரிமையாளராக நடித்திருக்கும் இளவரசு ஆகியோரது நேர்த்தியான நடிப்பு காட்சிகளை மெருகேற்றியிருக்கிறது.

ஒளிப்பதிவாலர் ஜிஜு சன்னி, ஒரு சம்பவத்தை வைத்துக்கொண்டு வடிவமைக்கப்பட்ட திரைக்கதையை மிக இயல்பாக படமாக்கியிருப்பதோடு, காட்சிகளை வேகமாகவும் நகர்த்தி சென்றிருக்கிறார்.

பிலோமின் ராஜின் படத்தொகுப்பு காட்சிகளை விறுவிறுப்பாக கடத்துவதோடு, சில இடங்களில் ரசிகர்களை சீட் நுணியில் உட்கார வைத்து படபடக்க வைத்துவிடுகிறது.

J.Pகுறிப்பாக எம்.எஸ்.பாஸ்கரை சிக்க வைக்க ஹரிஷ் கல்யாண் போடும் திட்டம் பரபரப்பின் உச்சம்.

வாடகை குடியிருப்பில் வசிப்பவர்கள் மட்டும் அல்ல சொந்த வீட்டில் இருப்பவர்கள் கூட சில சமயங்களில் இத்தகைய பிரச்சனைகளை எதிர்கொள்வதால், படத்தின் ஒவ்வொரு காட்சியும் படம் பார்ப்பவர்களின் மனதில் அழுத்தமாக பதிவதோடு, கதையோட்டத்துடன் தங்களையும் தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிறது.

இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு என்பதே கிடையாது, ஆனால் மனிதாபிமானத்தோடு ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சகிப்புத்தன்மையோடு வாழ்ந்தால் இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க முடியும் என்ற கருத்தை ஆழமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன்.

புதுமை இல்லாத க்ளைமாக்ஸ், இருவருக்கும் இடையிலான பிரச்சனையின் போது நடக்கும் சம்பவங்கள் யூகிக்க கூடியதாக இருப்பது போன்றவை சில இடங்களில் சிறு சிறு தொய்வுகளை ஏற்படுத்தினாலும், இறுதியில் ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தியை கொடுக்கிறது இந்த ‘பார்க்கிங்’.

மொத்தத்தில்

இந்த பார்க்கிங் எல்ல மனம் தில்லும் இடம் உண்டு !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *