
” பனி விழும் இரவு ” என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் :-
கதைக் கரு :-
இயல்பான மனிதர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத சூழல்கள் ஏற்படுத்தும் அதிர்வுகள் , மறைக்கப்பட்ட உண்மைகள் , மர்மமான சம்பவங்கள் எனப் பல அம்சங்களை மையமாக அமைக்கப்பட்டதே இப் படத்தின் கதைக் கரு.
கதையும் கதையின் போக்கும் :-
கொடைக்கானல் பின்னணியில் மர்மம் தொடங்குகிறது.
விடுமுறையை இனிதாக கழிக்கவும் , இயற்கையின் அழகை இரசிக்கவும் இளம் தம்பதியினர் கொடைக்கானலுக்குச் செல்கின்றனர். அங்கு எதிர்பாராத சம்பவங்கள் நடக்கின்றன. இந்த நிகழவுகளே இந்தக் கதைக் களத்திற்கான தொடக்கப் புள்ளியாக அமைகின்றன. மகிழ்ச்சியாகத் தொடங்கும் அவர்களின் பயணம் அடுத்தடுத்த நிகழ்வுகளால் மர்மம் நிறைந்த ஒன்றாக மாறுகின்றன.
திரைக்கதையில் புதிய உத்தி :-
ஒரு மனிதனின் வாழ்க்கை எப்பொழுது உயிர்ப் பிழைப்பதற்கான போராட்டமாக மாறுகிறது ? அதற்கு விடையைக்காண முயலும் போது உண்மையே விடையாக வந்து முன் நிற்கிறது. அவன் இதுவரை மறைத்திருந்த இரகசியங்கள் ஒவ்வொன்றாக வெளிப்படத் தொடங்குகின்றன. அவனைச் சுற்றியிருப்பவர்களின் வாழ்க்கையில் என்ன என்ன மாற்றங்கள் நிகழ்கின்றன ? என்ற கேள்விகளை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டதுதான் இந்தத் திரைப்படத்தின் திரைக்கதை.
திரை நட்சத்திரங்கள் :-:
ஜெகே என்ற கதாபாத்திரத்தில் அருண் கார்த்தி நடித்திருக்கிறார். இவர் தான் இந்தப் படத்தின் நட்சத்திர நாயகன். இவர் வெகு சிறப்பாக நடித்திருக்கிறார்.
தன் மனைவி கங்குலி சபிதா காணவில்லை என்று கதாநாயகன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். அதிலிருந்து கதை சூடுபிடிக்கிறது. காணாமல் போன பெண்ணைத் தேடும் காவல் துறையினரின் விசாரணை ஒருபுறம் நகர , மறுபுறம் அந்தச் சம்பவங்கள் சுற்றி உள்ள கேள்விகளும் அதனைத் தொடர்ந்து ஏற்படும் சந்தேகங்களும் அதிகரிக்கத்தான் செய்கின்றன.
சேரன்ராஜ் என்பவர் இன்ஸ்பெக்டர் மதிமாறன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் தலைமையில் நடைபெறும் விசாரணை , வழக்கின் பின்னணியில் இருக்கும் உண்மைகளை வெளிக் கொண்டு வர முயல்கிறது.
விசாரணையில் கிடைக்கும் தகவல்கள் ஆரம்பத்தில் நினைத்ததை விட முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் கதை நகர்கின்றது.
சாதரணமான புகார் ஒன்று என்று தொடங்கும் சம்பவம் பல கேள்விகளை எழுப்பும் மர்மமாக மாறும் போது உண்மையில் என்ன நடந்தது என்ற ஆர்வம் பார்வையாளர்களிடம் தொற்றிக் கொள்கிறது. கதை மாந்தர்களின் நேர்க் கோணத்தில் அமையும் பார்வையும் , சம்பவங்களின் பின்னணிக் குறித்த புரிதலும் மாறிக் கொண்டே இருப்பது திரைக்கதையின் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.
கருப்பு நம்பியார் நாகராஜன் வேடத்தில் நடித்திருக்கிறார்.
வாட்ச்மேன் வேடத்தில் சரவணசக்தி நடித்திருக்கிறார்
சோலை ராஜா வேடத்தில் செ.ரா.ராஜேஷ் நடித்திருக்கிறார்.
டாக்டர் சரவணன் வேடத்தில் கஜராஜ் நடித்திருக்கிறார்.
சுருளி , உமர் , வினோத் ஆகியோரும் இப் படத்தில் இடம் பெற்று படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கின்றனர்.
மர்மம் நிறைந்த கதைக்களம். இதில் ஒவ்வொரு கதாபாத்திரமும் எவ்வாறு தொடர்புபடுகிறது என்பதே இந்தப் படத்தின் சுவாரஸ்யத்தைத் தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது
கதையில் மர்மம் கதாபாத்திரங்கள் கொண்டு செல்லும் விதம். காணாமல் போன மனைவியைத் தேடும் கணவனின் பதற்றம் , காவல் துறையினரின் தொடர் விசாரணை . கதாபாத்திரங்களுக்கு இடையே ஏற்படும் தொடர்புகள் ஆகியவை கதையின் மர்மத்தை அதிகரிக்கச் செய்கின்றன. விசாரணையின் மூலம் வெளிவரும் ஒவ்வொரு தகவலும் இதுவரை உருவாகியிருந்த புரிதலும் மறு பரிசீலனை செய்ய வைக்கும் வகையில் கதை நகர்வது வெகு சிறப்பு.
தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
ஒளிப்பதிவாளர் :- ஜெயக்குமார் தங்கவேல் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். கொடைக்கானலின் இயற்கைச் சூழலை அழகாக படம் பிடித்துக் காட்டியிருக்கின்றார். கதையின் மர்மத்தை சிந்தாமல் சிதறாமல் திரையில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதில் இவரின் பங்கு முக்கியமானது. முதன்மையானது என்றே சொல்லலாம்.
இசையமைப்பாளர் :- சதாமுருகன் . இந்தப் படத்திற்கு இசையமைத்து இருக்கின்றார். இவர் இசையமைத்ததோடு பாடல்களையும் இவரே எழுதியுள்ளார். இவரோடு சந்தோஷ் ஆறுமுகமும் பாடல்கள் எழுதியுள்ளார். சஸ்பென்ஸ் ,திரில்லர் நிறைந்த கதைக் களத்தில் பின்னணி இசை காட்சிகளின் பதற்றத்தையும் , எதிர் பார்ப்பையும் அதிகரிக்கும் முக்கியமான அம்சமாக அமைந்துள்ளது.
படத் தொகுப்பு :- எம்.எஸ். செல்வா மற்றும் சி.ஆர். புவனேஷ் இரண்டு ஜாம்பவான்கள் இப்படத்தில் படத்தொகுப்பாளராக இணைந்து படத்திற்கு உயிர் ஊட்டியிருப்பது படத்திற்கு பிளஸ் பாயிண்ட் .
இயக்குநர் :- செ.ரா.ராஜேஷ்.
இவர் நல்ல கதையை தெரிவு செய்து உயிரோட்டமான திரைக்கதையை அமைத்து அழகாக விறுவிறுப்பாக வசனங்கள் எழுதி வெகு அழகாக இயக்கி இருக்கின்றார்.
படத்தின் இறுதிக்காட்சியில் டுவிஸ்ட் வைக்கிறார்.இப் படத்தின் இயக்குநர்.கதை நாயகி திரும்பக் கிடைத்தாளா ? கதையின் போக்கு என்ன ? அடுக்கடுக்கான கேள்விகளுக்கு விடை தேட திரையரங்கு சென்றால் பதில் கிடைக்கும்.
கதையின் முடிச்சு :- கதாநாயகன் தன் மனைவியுடன் திருமண விழாவில் ஸ்டில் ஷூட் எடுக்க கொடைக்கானலில் உள்ள பங்களாவிற்குச் செல்கின்றார்.சென்ற இடத்தில் இவர் மனைவி காணமல் போகிறார் அதன் பிறகு என்ன ? என்பதே மர்ம முடிச்சு .
பனிவிழும் இரவு ” என்னும் திரைப்படத்தின் திரைவிமர்சனத்தில் ஆய்ந்த போது மர்மம் , திகில் என கதை போகிறது . மர்ம முடிச்சு எப்படி அவிழ்ப்பது என்பதை விமர்சிப்பதே கதை. பார்க்கலாம். எங்களுடைய பத்திரிகை குழு நடு நிலையாக நின்று நல்லதொரு தீர்ப்பை வழங்குகின்றது. மீண்டும் அடுத்த திரை விமர்சனத்தில் சந்திப்போம். என்றும் உங்களுடன் கவிஞர் வேளச்சேரி அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட் ,ராஜேஷ் ஓகே டேக்