நூறு கோடி வானவில்திரைவிமர்சனம் :-

Share the post

“நூறு கோடி வானவில்”
என்னும் திரைப்படத்தின் திரைவிமர்சனம் :-
்்்்்்்்்்்்்்்்்்்்்
ஒரு திரைப்படத்தில் வரும் பாடல் வரியே இந்தப் படத்திற்கு தலைப்பாக வைத்திருக்கும் இந்தக் குழுவினருக்கு நன்றி பல பல.

கதைக் கரு :-
்்்்்்்்்்்்்்்
காதலி ஒருத்தி தன் மனத்திற்கு பிடித்தவனைக் காதலிக்கிறாள். எதிர்பாராத விதமாக விபத்தொன்றில் சிக்கி இவளுடைய காதலன் கோமாவில் இருக்கின்றார். காதலனுக்கு பழைய நினைவு திரும்ப தனது வாழ்க்கையை வீடியோவில் பதிவு செய்து காட்டுகின்றாள் .

காதலின் உருக்கம் காதலனை பழைய நிலைக்கு கொண்டு வர முடியும் என நினைக்கிறாள். இன்னொரு காதலன் புதிதாக இவளின் வாழ்க்கையில் குறுக்கே வருகிறான். இவள் மறுக்கிறாள். இந்த மூவரின் வாழ்க்கையில் எதிர்பாராத சிக்கல்கள் உருவாகின்றன.

கதையும் கதையின் போக்கும் :-
்்்்்்்்்்்்்
ஹரிஷ் கல்யான் என்பவர் மும்பையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றுகிறார். அந்தத் தனியார் தொலைக்காட்சி அவரை கோவாவில் இருக்கும் மற்றொரு கிளை நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கிறது.

அங்கு புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடும்போது சித்தி இத்னானியைச் சந்திக்கிறார்.

ஹரிஷூக்கும் சித்திக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன. பின்னர் நாளடைவில் நட்பாக மாறுகின்றது. சித்தியின் வாழ்க்கையை மையமாக வைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை உருவாக்குகிறார் ஹரிஷ்.நாளடைவில் அவரைக் காதலிக்கத் தொடங்க , அதனை சித்தி இத்னானி ஏற்க மறுக்கிறார்.

இந்தச் சூழ்நிலையில் கோமாவிலிருந்து ரிச்சி மீண்டு வருகிறார். மூவரின் வாழ்க்கையிலும் எதிர்பாராத சிக்கல்கள் உருவாகின்றன.

சித்தி இத்னானி யாருடைய காதலை ஏற்றுக் கொள்கிறார் ? ஹரிஷின் காதல் கை கூடுகிறதா ? ரிச்சியின் வருகைக்குப் பின் நடக்கும் மாற்றங்கள் என்ன ? இப்படி அடுக்கடுக்காக கேள்விக் கணைகள் தொடுக்க அதற்கெல்லாம் பதில் சொல்வது தான் மீதிக் கதை .

திரை நட்சத்திரங்கள் :-
ஹரிஷ் கல்யாண் :-
்்்்்்்்்்்்்்்்்்்்
வழக்கம் போல காதல் காட்சிகளில் இயல்பாக நடித்திருக்கிறார். காதலை வெளிபடுத்துவதிலும் சரி ,மனத்திற்குள் ஏற்படும் ஏமாற்றங்களை வெளிப்படுத்துவதிலும் சரி தன்னுடைய இயல்பான நடிப்பால் பார்வையாளர்களை தன் பால் இழுத்துக் கொள்கிறார். இது இவருடைய நடிப்பின் முதிர்ச்சியைக் காட்டுகிறது.

சித்தி இத்னானிக் :-
்்்்்்்்்்்்்்்்்்
இவர் தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் விதமாக இயக்குநர் நல்லதொரு கதாபாத்திரத்தை வழங்கி படத்திற்கு பலத்தை சேர்த்து இருக்கிறார். காதல் பொதுவானது. ஆணை விட பெண்ணுக்குத் தான் காதலின் உணர்வு நன்கு தெரியும். ஆண் காதல் என்ற பெயரில் ஒரு சிலர் மலருக்கு மலர் தாவும் வண்டாக இருப்பார்கள் . ஆனால் பெண் அப்படி அல்ல . மனத்தில் ஒருவனை நினைத்து விட்டால் அவ்வளவு எளிதில் மாறமாட்டாள்.

பழைய காதலுக்கும் புதிய உறவுக்கும் இடையில் ஒரு முடிவை எடுக்க முடியாமல் தவிக்கும் பெண்ணின் உணர்வுகளைத் தன்னுடைய நடிப்பால் மிக அழகாக வெளிப்படுத்தி இருப்பது இந்தப் படத்திற்கு ஒரு பிளஸ் பாயிண்ட்.

துணை நட்சத்திரங்கள் :-
்்்்்்்்்்்்்்்்்்்
கோவை சரளா , தம்பிராமையா , சின்னி ஜெயந்த் , சம்பத் ராஜ் முதலானோர் நடித்து இருக்கின்றனர். எப்பொழுதுமே துணைக் கதாபாத்திரங்கள் ஒரு படத்திற்கு உறுதுணையாக நிற்கும் என்பதை இவர்கள் நிரூபணம் செய்து படத்திற்கு வெற்றி என்னும் மகுடத்தைச் சூட்டியிருக்கிறார்கள்.

தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
்்்்்்்.்்்்்்்்்
இயக்குநர் :- சசி.
எண்ணம் எழுத்து இயக்கம் என மூன்றையும் கையில் எடுத்துக் கொண்டு தனக்கே உரிய பாணியில் படத்தை கொண்டு சென்றிருக்கின்றார்.

மனித உணர்வுகளை அழுத்தமாக படத்தில் பதிவு செய்வதில் வல்லவர் இந்தத் திரைப்பட இயக்குநர் சசி. இந்தப் படத்தில் காதலின் வெவ்வேறு பரிமாணங்களைப் பேச முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.

திரைக்கதையில் ஒரு திருப்பம் :-
்்்்்்்்்்்்்்்்்்்்
ஒருவருக்காகக் காத்திருக்கும் காதல் எதிர்பாராமல் உருவாகும் புதியதொரு காதல் இரண்டிற்கும் இடையில் ஏற்படும் மனப்போராட்டத்தை மையமாக வைத்து திரைக்கதையை அமைத்து இருக்கிறார் இயக்குநர் சசி.

கதைக்களத்தின் தனித்துவம் இதில் மிளிரவில்லை. உணர்வுப் பூர்வமான தாக்கமும் இதில் முழுமையாக வெளிப்படுத்தவில்லை. இது இயக்குநரின் கவனக் குறைவா ? என்ற கேள்வி கேட்கத் தோன்றுகிறது.

ஒளிப்பதிவாளர் :- பிரசன்னா எஸ்.குமார்.
்்்்்்்்்்்்்்்்்்்்
இயக்குநரின் எண்ணங்களை வெளிக் கொண்டு வருவதே ஒளிப்பதிவாளரின் வேலை. அதனை இவர் நிறைவாக செய்திருக்கிறார். கோவைவின் அழகை பார்வையாளர்களின் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றார். கடற்கரை , இயற்கை சூழல்கள் காதல் கதைக்கு பொருத்தமான பின்னணியாக அமைந்திருப்பது தனி சிறப்பு தான்.

இசை :- சித்து குமார் :-
்்்்்்்்்்்்்்்்்்்்
இசைக்கு மயங்காத உயிர்களும் உண்டோ என்று சொல்லும் அளவிற்கு தன்னுடைய இசையால் பார்வையாளர்களை கட்டிப் போட்டிருக்கிறார். மெட்டுக்குப் பாட்டு என்ற பாணியில் பாடல்கள் உருவாக காரணமான இசையமைப்பாளரை மனதார பாராட்டுவோம். ஒரு படத்திற்கு பின்னணி இசை தான் மிக முக்கியம். அந்தப் பணியை சிறப்பாக செய்து இருக்கிறார் இசையமைப்பாளர் சித்து குமார் .

படத்தொகுப்பு :- எம்.சுபராக்.
்்்்்்்்்்்்்்்் ்
ஒரு திரைப்படம் எங்கு உருவாகிறது என்ற கேள்விக் கணையைத் தொடுத்தால் கிடைக்கும் விடை எடிட்டரின் மேசை தான். ஆம் ஒரு படத்தின் வெற்றித் தோல்வி எடிட்டரின் கையில் தான் இருக்கிறது. அந்த வகையில் இந்தப் படத்தை மிக அருமையாக காட்சிகளை முறைப்படுத்தி மிக சிறப்பாக படத் தொகுப்பு செய்து படத்திற்கு வலு சேர்த்திருப்பது மிக அருமை பாராட்டுவோம்.

சில தேன் துளி :-
்்்்்்்்்்்்்்்்்
காதல் என்பது இரு மனங்கள் சம்பந்தப்பட்டவை. ஒருவரை ஒருவர் நேசிப்பது மட்டுமல்ல காதல் .அவர்களின் மன உணர்வுகளையும் அதன் முடிவுகளையும் புரிந்து கொள்வது தான்.என்பதைச் சொல்ல முயற்சிக்கும் திரைப்படம் தான் நூறு கோடி வானவில்.

நடிகர்கள் :-
்்்்்்்்்்்்
ஹரிஷ் கல்யாண் , சுத்தி இன்னானி , கோவை சரளா , தம்பிராமையா , சின்னிஜெயந்த் , சம்பத், வி.ஜே. பார்வதி மற்றும் பலர்

தொழில் நுட்பக் கலைஞர்கள்:-
்்்்்்்்்்்்்்்்்்
எழுத்து & இயக்கம் :- சசி
ஒளிப்பதிவு :- பிரசன்னா s.குமார்
படத்தொகுப்பு :- எம். சுபராக்
இசை :- சித்து குமார்
பாடல்கள் :- மோகன் ராஜ் , விக்னேஷ் ராமகிருஷ்ணா
நடனம் :- சந்தோஷ்
மக்கள் தொடர்பு :- சதிஷ்

தயாரிப்பு :- பாலாஜி கபா, அருண் அருணாச்சலம்.

நூறு கோடி வானவில் என்னும் திரைப்படத்தின் திரைவிமர்சனம் செய்ததில் பார்வையாளர்கள் மனத்தில் நிற்கும் ஓர் அற்புதமான படம். பார்க்க வேண்டிய படம். எங்களின் பத்திரிகை குழு நடுநிலையாக நின்று ஆய்வு செய்வதில் ஓர் உண்மை புலப்படுகிறது மக்களின் இரசனையை புரிந்து எடுக்கும் எந்தப் படமும்
வெற்றிப் படமே ! மீண்டும் வேறொரு திரை விமர்சனத்தில் சந்திப்போம். என்றும் தோழமையுடன் :- உங்கள் கவிஞர் வேளச்சேரி அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட்.ராஜேஷ் ஓகே டேக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *